காவிரிப்பாவை – ஓர் ஆய்வு
காவிரி பிறப்பு
சோழநாட்டில் நீர்வளம் பெருக்குவதற்காக காந்தமன் என்னும் மன்னன் தேவ இருடியாகிய அகத்தியரிடம் வேண்டினான். அவன் வேண்டுதலுக்காக தனது கமண்டலத்தினைக் கவிழ்த்தான் அகத்தியன். அதிலிருந்து தோன்றியவள் காவிரிப்பாவை. இதனை,
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை.
(மணி. பதிகம். 11 – 13)
என்னும் பாடல்வரிகள் மூலம் அறியலாம்.
காவிரியும் சம்பாபதி வரவேற்பும்
காவிரியின் நேர்கிழக்காக ஓடினாள். சம்பாபதியின் பக்கத்தில் வந்து கடலினோடு கலந்தாள். அப்பொழுது தவமுதிர்ச்சியுடையவளான சம்பாபதி காவிரியை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டாள். வானிலுள்ள ஆகாய கங்கையே, காந்தமனின் வேட்கையைத் தீர்த்த விளக்கமே வருக என்று சம்பாபதி காவிரியை வரவேற்றாள். காவிரியை தவமுதிர்ச்சியுடைய சம்பாபதி வரவேற்றது மகிழ்வானதாகும்.
செங்குணக்கு ஒழுகியச் சம்பா பதியியல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள்
ஓங்குநீர் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு
ஆணு விசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாவென
(மணி. பதிகம். 13 – 18)
காவிரிப்பாவையும் அகத்தியனும்
காவிரிப் பாவையின் பின்னாகவே வந்தான் அகத்தியன். ஆவன் சினத்தை அடக்கியவன். தவ வலிமையுடையவன். சம்பாபதியை வரவேற்றதைக் கேட்டவன். பின்பு, காவிரியை நோக்கி அன்னையே, அரிய தவமுதிர்ச்சியுடைய சம்பாபதியை நீ வணங்குதற்குரிய தகுதியுடையவள். எனவே, நீயும் இவளை வணங்குக என்றனள். அதன்படி காவிரியும் அகத்தியரின் சொற்படி சம்பபாபதியை வணங்கினாள்.
பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டு ஈங்கு
அன்னை கேள் இவ்அருந்தவ முதியோள்
நின்னால் வணங்குந் தன்மையள் வணங்கு
தொழுதனள் நிற்ப
(மணி. பதி. 19 – 21)
காவிரியும் அதன் தன்மையும்
பாடுவதற்கேற்ற சிறந்த அமைப்பை உடையது பரத கண்டம். இதில் செங்கோன்மையுடையவர்கள் சோழர். சோழர்களின் குலக்n;காடி காவிரிப்பாவை. கோள்கள் தம் நிலையிலிருந்து பிறழாமல், ஆதலால் உலகத்pல் கோடை நீடிக்கும். அப்பொழுதும் மாறுபடாமல் வளம் நிறைக்கும் தன்மை உடையவள் காவிரி என்று அதன் பண்பை சீத்தலைச்சாத்தனார் கூறுவர்.
பாடல்சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோல் சோழர்தங் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை.
(மணி.பதி. 22 – 25)
காவிரியை சம்பாபதி வாழ்த்துதல்
காவிரி, சம்பாபதியை விளங்கியதும், சம்பாபதி மகிழந்து வாழ்த்தினாள். பதுமாசன நிலையில் இருந்து கொண்டு, திருமாலது உந்திக் கமலத்திடத்தே தோன்றிய செந்தாமரை மலரில் பிறந்தவன் பிரமன், நால்வகை தெய்வங்களுக்கும் உரிய கருக்களையும், நாற்றிசைக் கண்ணும் விளங்கும் பல்வேறு கருக்களையும் முன்னொரு காலத்தில் அவன் படைத்தனன். ஆந்த நாள் என் பெயரினால் அமைந்தது இந்நகரம். இந்நகரினை நின் பெயருடையதாக யான் இப்போது அமைத்தேன். நீ வாழ்வாயாக என்றனள். அதனால் சம்பாபதி எனவும் காவிரிப்பூம்பட்டினம் எனவும் இருவகைப் பெயருங் கொண்டதாய் நகரம் விளங்கி வரலாயிற்று தன் பெயரையே கொண்டதானாலும், காவிரியின் பெயரைச் சூட்டிய அன்பின் மூலம் சம்பாபதி அன்பை அடையாளங் காணலாம்.
கழுமிய உவகையிற் கவான் கொண்டிருந்து
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என்பெயர்ப் படுத்தவிவ் விரும்பெயர் மூதூர்
நின்பெயர்ப் படுத்தேன் நீவாழிய என
(மணி. பதிகம். 27 – 31)
No comments:
Post a Comment