Wednesday, 10 June 2015

பெரியாழ்வார்

                       பெரியாழ்வார் பாசுரங்களில் செங்கீரைப் பருவம்
.

    பெரியாழ்வார் கண்ணன் பிறந்து வளர்வதை மனசில் நிறுத்தி செங்கீரைப் பருவத்தில் கண்ணனை நினைத்து பாடல் பாடியுள்ளார். இதில் கண்ணனின் சிறப்புகள் பலவற்றைக் குறிப்பிடுவர்
ஊழிக்காலமும் காத்தலும்
    ஊழிக்காலத்தில் உயிர்களை வதைத்துக் காக்கும் மணிவயிற்றை உடையவனே! மாறிவரும் ஊழிதோறும் உலகை விழுங்கி ஆலில் துயின்ற இறைவனே என்பர் பெரியாழ்வார். தாமரை பொன்ற விழியும், மை போன்ற கரிய மேனியையும் உடைய கண்ணா எனக்காக செங்கீரை ஆடியிருக்க என்பர். உருவங்களைக் கூறி செங்கீரையாட அழைப்பதை இதில் காணலாம்.
        உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
            ஊழிதொறு ஊழிபல ஆலின் இலையதன்மேல்
        பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே
            பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே (நாலா. 64)

அரிஉருவும், மலையைக் குடையாக்கியும்
    கண்ணன் குழந்தையை செங்கீரையாட அழைக்கும் போது அவனின் அரி உருவம் எடுத்ததையும் மலையைக் குடையாக்கிக் காத்ததையும் ஆழ்வார் குறிப்பிடுகின்றார். சிங்க உருவங்கொண்டு இரணியன் தடித்த உடல் குருதி குழம்ப, தன் கூறிய நகங்களால் மார்பைக் கிழித்துக் குடைந்தவனே என்றும், கருமேகங்கள் கல் மழை பொழிய, அந்த மலையை குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்தவனே, என் விருப்பத்திற்காக ஒரு முறை செங்கீரை ஆடியிருக்க என்பர் ஆழ்வார்.
        கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பிஎழ
            கூர் உகிரால் குடைவாய்
        காள நன் மேகமவை கல்லெடு கால்பொழியக்
            கருதிவரை குடையாக் காலிகள் காப்பவனே (நாலா. 65)
திருவடிகளால் அளந்தவனே – ஏழு காளைகளை வென்றனே!
    நாலுவகை வேதங்களுக்கும் பொருளானவன் நீ. பிரம்மனுக்குத் தாயானவன். முண்ணையும், விண்ணையும் திருவடிகளால் அளந்தவன். அதுமட்டுமா குவலயாவீட யானையும், ஏழு காளைகளும் உ;னனைக் கொல்லக் கூடி அடைந்தபோது, அவற்றை வென்ற பொருமானே! எனக்காக செங்கீரை ஆடுக என்பார் பெரியாழ்வார். வேதமும், பிரமனுக்குத் தாயும் நீயே என்பதுடனும் யானை, ஏழுது எருதுகளை வென்ற அரிய செயல்களையும் இவற்றுடன் இணைத்துக் கூறும் பாங்கைக் காணலாம்.
        நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே நாவியுள்
            நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
        தம்மனை ஆனவனே! துரணி தலமுழுதும் தாரகையின் உலகும்
            தடவி அதன் புறமும்
        விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ்விடையும் (நாலா. 66)

சகாடாசுரன் - பூதனை – கபிதாசூரன் எதிர்ப்பு
    கண்ணா எனக்காக செங்கீரை ஆடு என இரந்து கேட்கும் ஆழ்வார் கண்ணனின் அரிய எதிர்ப்பையும் கூறி அதில் வெற்றிபெற்ற விவரத்தையும் கூறுகிறார். தேவர்கள் மகிழும்படி பல செயல்கள் செய்தாய். குறிப்பாக, சகடாசுரன் உருண்டு, வருமாய்ந்து போம்படி செய்தாய். வஞ்சப் பேய் பூதனையின் நச்சுப்பாலை உண்டு அவன் உயிரை அழித்தாய். விளைவாய் நின்ற கபித்தாசுரன் அழியும்படி கன்றுருவாய் ஆனாய்! கழுதை வடிவுடைய தேனுகாசுரன், நரகாசுரன் மந்திரிமுரன், நரகாசுரன் ஆகியோரை அழியச் செய்தாய் என்ற கண்ணனின் வீரச் செயல்களைப் புகழ்வார் பெரியாழ்வார்.
        வானவர்தாம் மகிழ வண்சகடம் உருள
            வஞ்ச முலைப் பேயின் நஞ்சம் அது உண்டவனே
        கானகவில் விளவின் காய்உதிரக் கருதிக்
            கன்ற அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே
        தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் (நாலா. 67)


மருதமரமாய் வந்தவனை அழித்தவனே
    கண்ணா, தயிரையும், நெய்யையும் களவிலே உண்டவன் நீ. அதுமட்டுமா இரட்டை மருத மரங்களாய் வந்த அசுரர்களைத் தள்ளி அழித்தவன். உன் புன்சிரிப்பு முழுவதுமாக வருமுன், உன் திருக்குழல்கள் உன் பவள வாயை மறைக்கும்படி தாழ்ந்து அலையும்படி என் அப்பனே செங்கீரை ஆடுக என்பர் ஆழ்வார்.
        மத்து அளவுந்தயிரும் வார்குழல் நன்மடவார்
            வைத்தன நெய் களவால் வாரிவிழுங்கி
        ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
            ஊரு கரத்தினோடும் உந்திய வெந்திறலோய்
        முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்
            முன்ன முகத்து அணிஆர்மொய் குழல்கள் அலைய (நாலா. 68)
காளியின் தலையில் கூத்தாடியவனே
    காயம்பூ நிறமுடையவனே, காளமேகம் வடிவுடையவனே, காட்டில் பெரிய மடுவில் காளியனுடைய அகன்ற தலையில் கூத்தாடினாய், யானையின் தந்தங்களைப் பிடுங்கி மதத்தினை அடக்கினாய். இத்தகைய கண்ணா எனக்காக செங்கீரை ஆடுக என்பார் பெரியாழ்வார்.
        காயா மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!
            குhனக மாமடுவில் காளியன் உச்சியிலே
        தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா
            துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே (நாலா. 69)
நப்பின்னைக்காக எருது ஏழும் - அந்தணன் பிள்ளைகளும்
    கண்ணா நீ நப்பின்னைக்காக ஆயர் எருதுகள் தழுவ வேணும் என்று சொன்ன சொல் தப்பாமல் பின்பற்றி எருதுகளை அடக்கினாய். மேலும், அந்தணன் ஒருவனுக்குப் பிறக்கும்போதே மறைந்த பிள்ளைகளை அண்டத்துக்கு அப்பால் தேரைச் செலுத்திக் கொணர்ந்து தாயொடு கூட்டிய என்னப்பனே எனக்காக செங்கீரை ஆடுக என்று ஆழ்வார் கண்ணனை வேண்டுவர்.
        துப்புஉடை ஆயர்கள்தம் சொல் வழுவாது
            ஒருகால் தூய கருங்குழல் நற்தோகைமயில் அனைய
        நப்பி;ன்னைதன் திறமாநல்விடை ஏழுசுவிய
            நல்லதிறலுடைய நாதனும் ஆனவனே
        தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
            தனிஒரு தேர் கடலித் தாயோடு கூட்டிய (நாலா. 70)
உருவம் பலவாகிக் காத்தவனே
    கண்ணா, நீ அன்னமாகவும், மீனுருவமாகவும், நரசிங்கமாகவும், வாமனனாகவும்ஈ ஆமையாகவும் ஆனவனே, எங்கள் துன்பத்தைப் போக்கி வாழ்வளித்தவன் என்பர் பெரியாழ்வார்.
        அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும்
            ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!
        ஏன் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை (நாலா. 74)
செங்கீரைப் பருவத்தில் மணம் கொண்டவாய்
    கண்ணனைச் செங்கீரைப் பருவத்தில் செங்கீரை ஆடச் சொல்லும்போது கண்ணன் வாயில் நல்ல மணம் வரும் என்பர் ஆழ்வார் பாலுடன் நெய்யும் தயிரும் அழகான சாந்தும், செண்பக மணமும், தாமரை மணமும், நல்ல கருப்பூர மணமும் கலந்து வரும் என்பர் ஆழ்வார்.
        பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தமொடு சண்பகமும் பங்கயம்
            நல்ல கருப்பூரமும் நாறிவர (நாலா. 72)
செங்கீரையில் உருவமும் அணிகலனும்
    பல் - ஐம்படைத்தாலி பெரியாழ்வார் செங்கீரையைப் பற்றிக் குறிப்;பிடுகையில் கண்ணனின் உருவத்தையும், அணிகலன்களையும் குறிப்பிடுகிறார். கண்ணா உன் வாயினுள் வெள்ளி அரும்பு போல் சிறு பற்கள் உள்ளன. உன் நீலநிற மார்பில் எழில்மிகு ஐம்படை ஆரத்தின் நடுவே, உன் கனி வாயில் சொல்லூறல் அழுதம் இற்று விழ வேதப் பொருளானவனே என்பர்.
        கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
            கோமள வெள்ளிமுளைபோல் சிலபல் இலக
        நீலநிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
        நின்கணிவாய் அமுதம் இற்று முறிந்துவிழ (நாலா. 72)
திருவடி – மோதிரம் - சதங்கை – அரைஞான் - பவளவடம்
     பெரியாழ்வார் செங்கீரையாட அடைக்கும் கண்ணனின் உருவத்தையும், அவன் அணிந்துள்ள அணிகலன்களையும் பட்டியலிட்டுக் கூறுவதைக் காணலாம். செந்தாமரைத் திருவடிகளில் மோதிரங்களும், பாதச்சதங்கiயின் ஒலியும், திருவரையில் சாத்தியுள்ள பொன் அரைஞானும், பொன் மணிக்கோவையும், கைவிரல்களில் ஆழிகளும் மணிக்கட்டில் சிறுபவள வடமும், தோள்களில் வளைகளும், காதுப் பணிகளும், மகரக் குழைகளும், செவிமடல்மேல்; வாளிகளும் நெற்றியில் சுட்டியும் ஒளிவீசும்படி அரசானவனே என்பர்.
        செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலிற்
            சேர்திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்
        தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்
            பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
        மங்கல ஐம்படையும் தோள்வளையம் குழையும்
            மகரமும் வாளிகளும் சுட்டியும் (நாலா. 73)
முடிவுரை
    செங்கீரையாட அழைத்த கண்ணனின் அழகையும், அவன் செய்த அரிய செயல்களையும், கண்ணன் அணிந்துள்ள அணிகலன்களையும் இவ்வாய்வுக் கட்டுரை விளக்கியதை உணரலாம்.

பெரியாழ்வார் பாடல்களில் அனுமன்
    பெரியாழ்வார் பெருமாளையும், பெருமாளுக்குத் தொண்டு செய்த அடியார்களையும் தம்பாடலில் சிறப்பித்துக் கூறுகிறார். அந்தவகையில் அனுமனின் செயல்பாடுகளையும், இராமருக்கும், சீதாதேவிக்கும் செய்த தொண்டுகளைப் பெரியாழ்வார் பாராட்டுவதை இக்கட்டுரையில் காண முற்படுவோம்.
பரசுராமர் வில் வளைத்தது ஓர் அடையாளம்
    சனகனின் வில்லை முறித்து வந்த இராமனை பரசுராமன் எதிர்த்து என் வில் வலி கண்டு போ என்ற போது அவன் வில்லை வளைத்து, தவத்தைச் சிதைத்த இராமன் என்று தான் இராமனின் தூதன் என்பதற்கு அனுமன் அடையாளங் கூறினான்.
            செறிந்த மணிமுடிச் சனகன் சிலை
                இறுத்து நினைக் கொணர்ந்து
            அறிந்து அரசு களைகட்ட
                அருந்தவத்தோன் இடைவிலங்கச்
            செறிந்த சிலைகொடு தவத்தைச்
                சிதைத்ததும் ஓர் அடையாளம்     (நாலா. 318)

மல்லிகை மாலையும் பெருமாளும்
    சீதா தேவியே நான் இராமதூதன் என்பதற்கு இன்னொரு ஆதாரத்தையும் கூறுகிறேன் என்று அனுமன் கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுவார். இரவு நேரத்தில் தாங்களும் பெருமாளும் இனிமையாக இருந்த இடத்திலே மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளைக் கட்டி வைத்தீர்களே என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான் அனுமன்.
            எல்லியம் போது இனிதிருத்தல்
                இரந்தது ஓர் இடவகையில்
            மல்லிகை மாமாலை கொண்டு அங்கு
                ஆர்த்ததும் ஓர் அடையாளம்  (நாலா. 319)


இலக்குவன் தன்னொடும் ஏகியது
    கூனியின் பேச்சைக் கேட்ட கைகேயி, இருவரம் கேட்ட தசரதன் மறுத்து சொல்லாமல் மயங்கி விழ, காட்டிற்குச் செல் என்று விடை கொடுத்தாள். அப்பொழுது இலக்குவனுடன் சீதையும் காட்டிற்குச் சென்றது ஓர் அடையாளம் என அனுமன் கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுவார்.
            கலக்கிய மாமனத்தளாய்க்
                கேகேசி வரம் வேண்ட
            மலக்கிய மாமனத்தனாய்
                மன்னவனும் மாறாது ஒழியக்
            குலக்குமரா! காடு உறையப்
                போ என்று விடைகொடுப்ப
            இலக்குவன் தன்னொடு அங்கு
                ஏகியது ஓர் அடையாளம்   (நாலா. 320)

உன்தோழி – உம்பி – தோழன்
    கங்கைக் கரையில் இருந்த குகனொடு அவன் மீது அன்பு கொண்டு, சீதை உன் தோழி என்றும், இலக்குவன் உன் தம்பி என்றும், குகன் தனக்கு தோழன் என்றும் கூறினானே அதுவும் ஒரு அடையாளமே என்று அனுமன் கூறினான் என பெரியாழ்வார் கூறுவர்.
            கூர் அணிந்த வேல் வலவன்
குகனோடும் கங்கை தன்னில்
சீர் அணிந்த தோழமை கொண்டதும்
ஓர் அடையாளம்          (நாலா. 321)

புரத நம்பி பணிந்ததும்
    வனவாசம் செய்த பொழுது, சித்திரக்கூடத்திலே தங்கியிருந்த பொழுது பரதன் அங்கு வந்து இராமனை நாட்டிற்கு வருகை தந்து ஆட்சி செய்ய அழைத்ததும் ஓர் அடையாளம் என அனுமன் சீதாபிராட்டிக்குக் கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுகிறார். 
                தேன் அமரும் பொழிற்சாரல்
சித்திரக் கூடத்து இருப்பப்
பால்மொழியாய்! பரதநம்பி
பணிந்ததும் ஓர் அடையாளம்  (நாலா. 322)

சயந்தனின் காக்கை உருவமும் ஒரு கண்ணை அறுத்ததும்
    சீதாதேவியே தாங்களும் இராமரும் சித்திரக்கூடத்திலே இருந்தபொழுது இந்திரன் மகன் சயந்தன் காக்கை வடிவெடுத்து தங்களைத் துன்புறத்த, இராமர் அதன்மீது தர்ப்பத்தைச் செலுத்த, அடைக்கலம் வேண்டிய பொழுது ஒரு கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் என்று அனுமன் கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுவர்.
            சித்திரக் கூடத்து இருப்ப
சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமாவோ நின்
அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை
அறுத்ததும் ஓர் அடையாளம்   (நாலா. 323)

மானும் - இளைய பெருமாளைக் கடிந்ததும்
    மாயாவி மாரீசன் மானாய் பின்னகாலை முன்வர, அதனை இராமனிடம் கேட்க, பெருமாளும் நெடுந்தொலைவு சென்றுவிட, இலக்குவனைச் சென்று இராமனைப் பார்த்து வா என்று பிரிந்ததும் ஓர் அடையாளம் என்று அனுமன் மொழிகளாய் பெரியாழ்வார் கூறுவர்.
            பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து
இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை
பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன்
பிரிந்ததும் ஓர் அடையாளம்   (நாலா. 324)

திருக்கை மோதிரமும் - அடையாளம் சொன்னக் காரணமும்
    அம்மா சீதையே, உன்னைத் தேட வேண்டி இராமரும் சுக்ரீவரும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது இராமர், இச்செயலைச் செய்ய ஏற்ற வல்லவன் அனுமன் என்று ஏற்றுக் கொண்ட பின்னரே இந்த அடையாளங்களை என்னிடம் கூறினார். மேலும், தன் கையில் அணிந்த மோதிரத்தையும் தந்துள்ளார். இப்பொழுதாவது என்னை இராமனின் தூதர் என்று நம்புங்கள் தாயே என்று வேண்டுவதாக பெரியாழ்வார் கூறுவர். 
            ஒத்த புகழ் வானரகோன்
                உடன் இருந்து நினைத்தேட
            அத்தகு சீர் அயோத்தியர்கோன்
                அடையாளம் இவை மொழிந்தான்
            இத்தகையால் அடையாளம்
                ஈதுஅவன் கைம்மோதிரமே        (நாலா. 325)

வில் இறுத்தான் மோதிரமும் உகந்தள் சீதையும்
   

4.கண்ணன் கோலம் கண்டு தாய் மகிழ்தல்

    கண்ணன் மாடு மேய்க்கச் சென்று திரும்பி வருகின்றான். அப்பொழுது அவன் அழகைக் கண்டு தாய் யசோதை மகிழ்வதாகப் பெரியாழ்வார் தம் பாடல்களில் கூறுவார். ஆதனை இக்கட்டுரையில் காண முற்படுவோம்.

உலகில் ஞாலத்துப் புத்திரனைப் பெற்றவள் நானே
    என் மகன் வரும் அழைகப் பாருங்கள். ஊலகில் நல்ல பிள்ளைகளைப் பெற்றவள் நான் ஒருத்தியே என்பாள் யசோதை. ஒரு காதில் சீலைத் தக்கையையும் மற்றொரு காதில் செங்காந்தளையும் அணிந்து அரையில் ஆடையையும், அது நழுவாமைக்கு கோடால் கச்சுப் பட்டையும், குளிர்ந்த முத்திலாலான ஆரத்தையும் உடையவனாய்க் கன்றுகளின் பின்னே என் மகன் வருகின்றான் என்று யசோதை மகிழ்கின்றாள்.
சிலைக் குதம்மை ஒருகாது ஒருகாது
செந்நிற மேற் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சும் கூறை – உடையும்
குளிர்முத்தின் கோடாலமும்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கையீர்
நானே மற்று ஆரும் இல்லை.  (நாலா. 244)

விடியற்காலையிலே உணவு கொடுத்து
    கண்ணா, விடியற்காலையிலேயே உனக்கு உண்ண உணவு கொடுத்து மாடு மேய்கக் அனுப்பினேனே. என்னைப்போல் கல்மனம் கொண்டவள் யாரும் இல்லை. திருவரங்கத்தில் உள்ள பெருமாளே என்று யசோதைப் புலம்பலாக பெரியாழ்வார் கூறுவார்.
            உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே
ஊட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை
என் குட்டனே முத்தம் தா.  (நாலா. 245)

கன்றுகளை தவறாது கொணர்ந்தாய் - நீராடி உன் தந்தையுடன் உண்க
    காடுகளில் கன்றினை தவறவிடாமல் திருப்பிப் பத்திரமாகக் கொண்டுவந்தாய். ஊன் உடம்பில் கன்றகள் பின்வந்ததால் அவைகள் எழுப்பிய தூசுகள் படிந்துள்ளது. உடம்பை நீராடி, உன் தந்தையுடன் உணவை உண்க என்பள் யசோதை. உனக்காக உன் அப்பனும் உணவு உண்ணவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் கூறுவதாக பெரியாழ்வார் கூறுவார்.
காடுகள் ஊடு பேய்க் கன்றுகள் மேய்த்து
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்
    தூளிகாண் உன்உடம்பு
பேடைமயில் சாயற்பின்னை மணாள
    நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்
    ஊன்னோடு உடனே உண்பான்       (நாலா. 246)

திருவடிகள் கொப்பளித்தன – கண்களும் சிவந்தன
    பேரன்புடையவனே! பெருமாளே கன்றுகளின்பால் பேரன்பு உடையவனே! நீ குடை, செருப்பு, குழல் வாங்கிக் கொள்ளாமல் கன்றுகளின் பின் சென்றாய். ஆதனால் காட்டின் வெப்பத்தால் உன் அடியும் வெதும்பியது. உன் கண்களும் சிவந்தது. உடம்பும் இளைத்தது என்று யசோதை கண்ணனைப் பார்;த்து வருந்துகிறாள்.
            குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
                கொள்ளாதே போனாய், மாலே
            கடிய வெங்கானிடைக் கன்றின்பின் போன
                சிறுக் குட்டச் செங்கமல
            அடியும் வெதும்பி, உன் கண்கள் சிவந்தாய்
                அசைந்திட்டாய், நீ எம்பிரான்        (நாலா. 247)

சிற்றாடையும் சிறுபத்திரமும் கட்டில்மேல் வைத்து
    சீதை மணாளா – கோவிந்தா நீ காட்டிற்குக் கன்றுகளை மேய்க்கச் செல்லும்போது சிறிய ஆடையையும் சிறிய கத்தியையும் கட்டிலின்மேல் மறந்துவிட்டு சென்றாய் என்பாள் யசோதை.
            சிற்றாடையும் சிறுபத்திரமும் இவை
கட்டிலின்மேல் வைத்துப் போய்  (நாலா. 248)

காளியனுடன் சண்டையும் வயிறு மறுக்கியும்
    கண்ணான காளியன் கிடந்த பொய்கையில் சண்டை செய்து அடக்கினாய். அப்பொழுது என் வயிறு கலங்கியது. கஞ்சன் மனதுக்கு ஏற்றபடியே செய்து வருகிறாய். உனக்குக் கொஞ்சமும் அச்சமில்லையே என்று தாய் யசோதை தன் மகனின் வீரத்தைக் கூறுகிறார்.
            நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
                நான் உயிர் வாழ்ந்திருந்தேன்
            என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய்
                ஏதும் ஓர் அச்சமில்லை
            கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்.    (நாலா. 249)

இந்திரனுக்கு அனுப்பிய சோறும் கறி, தயிரும் உண்டாயா?
    கண்ணா, கோவலர்கள் இந்திரனுக்கு வழிபட சோறும், கறியும், தயிரும் கொண்டு சென்றதை நீ, ஒருவனே உண்டதாகக் கூறுகிறார்கள். உன்னை வளர்க்க எனக்குப் பயமாக இருக்கின்றது. ஆதனால் உன்னைக் கண்டு அஞ்சுகிறேன். பெருவயிறுடைய உன்னைப் பேணி வளர்க்க என்னிடம் முதலுமில்லையே என்று யசோதை கண்ணனிடம் கேட்டு அறியாதன கேட்கின்றேன் என்பதாகப் பெரியாழ்வார் யசோதையின் கூற்றாகக் கூறுவர்.
            கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா
                கோவலர் இந்திரற்குக்
            காட்டிய சோறும் கறியும் தயிரும்
                கலந்து உடன் உண்டாய்
            ஊட்ட முதல் இலேன் உன்தன்கை; கொண்டு
                ஒரு போதும் எனக்கு அரிது     (நாலா.251)

திருவோணமும் காட்டிற்கு வேண்டாம் எனலும்
    கண்ணா நீ பிற்ந்த திருநாளான திருவோணம் இன்றைக்கு ஏழாம் நாளாகும். கண்ணாலம் செய்ய கறியும் அரிசியும் கலந்து சேமித்து வைத்தேன். உன்னை ஒப்பனை செய்து கொண்டு வீட்டிலேயே இரு என்றும் காட்டிற்குச் செல்ல வேண்டாம் என்றும் யசோதை கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுவார்.
            கண்ணாளம் செய்யக் கறியும் கலத்தது
                அரிசியும் ஆக்கி வைத்தேன்
            கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின்
                பின்போகேல் கோலம் செய்து இங்குஇரு.        (நாலா. 252)

ய5.கண்ணன் கோலம் கண்ட மகளிர்

    கண்ணன் கானகத்திற்குக் கன்றின்பின் சென்றவன் மாடுகள் மேய்த்துவிட்டு திரும்பிவரும் கோலத்தைக் கண்டு மகளிர் மகிழ்ந்தனர். ஆவர்கள் எப்படியெல்லாம் மகிழ்ந்தார்கள் என்பதைப் பெரியாழ்வார் கூறுவதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
உள்ளம் விட்டு ஊண் மறந்து
    கண்ணன் வரும் அழகில் மயங்கிய மகளிர் உண்ணுதலை மறந்தனர். உள்ளத்தை அவன்பால் செலுத்தினர். தழைகளும் இலைகளுமாக சேர்ந்து வேய்ங்குழல் இன்னிசை எங்கும் பரவியது. முகில்கூட்டங்கள் மண்மேல் வருகின்றதோ என்று நின்றனர். இவ்வாறாக கண்ணனின் உருவத்திலும், இசையிலும் மயங்கி நின்றார்கள் மகளிர் என்பதை அறியலாம்.
            குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்ற என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல்பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
உள்ளம் விட்டு ஊன் மறந்து ஒழிந்தனரே     (நாலா. 254)

வளையல்களை இழக்காதீர்
    தன் இடையிலே உடை உடுத்திப ல்லி இருப்பதுபோல வாளை இடுப்பில் செருகிக் கொண்டு நாறுபோல் அணிந்துகொண்டு ஆயர் சிறவர்களின் நடுவில் கண்ணன் வருவான். அவனைப் பார்த்த அழகில் பெண்கள் வளையல்களைக் கழலும்படி செய்துவிடாதீர்கள் என்று பெரியாழ்வார் கண்ணன் திரும்பிவரும் அழகைக் கூறுவார்
            வல்லிநுண் இதழ்அன்ன ஆடைகொண்டு
                வசைஅறத் திருவரை விரித்து உடுத்து
            பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்தி
                பணைக்கச்சு உந்தி, பலதழை நடுவே
            முல்லைநல் நறுமலர் வேங்கைமலர்
                அணிந்து பல்ஆயர் குழாம் நடுவே     (நாலா. 255)

அருகே நின்றாள் - ஊர் புணர்க்கின்றதே
    சுரிகைக் கத்தி, விளையாடும் வில்லும், கோலும், மேலோடையையும் தோழர்கள் எடுத்து வந்தனர். தோழனின் தோள் மீது கண்ணன் ஒரு கையை வைத்தான். மற்றொரு கையால் பசு நிரை மீளும்படி ஊதின சங்கைப் பிடித்துக் கொண்டிருந்தான். மேலும், காட்டில் மாடுகள் மேய்த்த களைப்புடன் இருந்த கண்ணனின் மஞ்சள் பூசியிருந்த மேனியைக் கண்டாள் என் பெண். அருகில் நின்றாள். ஊராரோ அவளைப் பற்றிக் காதல் கொண்டதாகக் கூறுகின்றனர் என்று ஒரு தாய் கூறுவதாக பெரியாழ்வார் கூறுவர்.
            சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும்
மேலாடையும் தோழன்மார் கொண்ட ஓட
ஒருகையால் ஒருவன் தன்தோளை ஊன்ற
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
மஞ்சளும் மேனியும் வடிவம் கண்டான்
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டான்
அதுகண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே  (நாலா. 256)

ஆடையும் வளையலும்
    கோவர்த்த மலையைக் குடையாக்கிப் பசுக்களைக் காத்தவன் கண்ணன். ஆவன் காட்டில் கன்றுகளின் பின்னால் சுற்றித் திரும்பி வந்துள்ளான். இவன்போல ஒருவனை இதுவரை கண்டறியேன் என்பள் ஒருத்தி. ஆவன் அழகில் மயங்கியதால் ஆடை அவிழ்கிறது. வளையலும் கையில் நிற்கவில்லை என்று பெண் ஒருத்தி கண்ணன் அழகைக் கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுவர்.
            குன்று எடுத்து ஆநிரை காத்தபிரான்
கோவலனாய் குழல் ஊதி ஊதி
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு
கலிந்து உடன்வருவானைத் தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்
கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில்  (நாலா. 257)

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
    பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசஒட்டேன்
    மாலிருஞ் சோலை எம்மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
    கொடுமின்கள் கொடீராகீர் கோழம்பே (நாலா. 258)

வீதி போதுமாகில் பந்துகொண்டான் என்று வளைத்து
    நெற்றியில் சிந்துரத்தால் திருமண் இட்டு குழலுடன், தோழர்களுடன் வரும் கண்ணன் வளைகோல் வீசவும், தெரிந்தே எங்கள் வீதிவழியே வருவான். பந்தைக் கொண்டான் என்று நாங்கள் கூறி வளைத்து, அவன் பவளவாயினால் முறுவலுடன் செல்வதைக் காண்போம் என்பர் பெண்கள்.
                சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
                    வரும் ஆயரோடு உடன் வளைகோள்வீச
                அந்தம் ஒன்று இல்லாத ஆயப்பிள்ளை
                    அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
                பந்து கொண்டான் என்று வளைத்துவைத்துப்
                    பவளவாய் முறுவலும் காண்போம்.    (நாலா. 259)

குழல் ஊதி இசைப்பாடிய அழகு கண்டு
    பசுக்கூட்டங்களுக்குப் பின்னே தன் உடல் அழகு மிளர, கண்ணனின் கண்கள் மிளிர குழலை ஊதி இசையால் பாடி நடையழுகு காட்டி இடைக்குலப் பிள்ளை தோழர்களோடு வருவான். மேலும், கண்ணனின் அழகைக் கண்டு என் மகள் கண்ணன் மீது காதல் கொண்டாள் என்று தாய் கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுவர். 
            சாலப் பல்நிரைப் பின்னே தழைக்காலின் கீழ்த்
தன் திருமேனி நின்று ஒளிதிகழ
கோலச் செந்தாமரைக் கண்மிளிரக்
குழல் ஊதி இசைபாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே    (நாலா. 260)

இந்திரன் போல வரும் ஆயப்பிள்ளை
    சிந்துரத்தைத் தலையிலே அழகுபட அப்பி, நெற்றியில் இளந்தளிர் இலையால் நாமம் இட்டு, இந்திரன் வருவதுபோல வந்தக் கண்ணனைக் கண்டு வளையல்களை இழக்காதே என்று கூறினேன். ஆனாலும் கண்டாள். ஆதனால் வளையலும் ஆடையும் கழல்கின்றதே என்று தாய் கருத்தாகப் பெரியாழ்வார் கூறுவர். 
            சிந்துரப் பொடிகொண்டு சென்னி அப்பித்
திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்
இந்திரன் போல வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்று அஙகு இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை      தன்
துகிலொடு சரிவளை கழல்கிறதே (நாலா. 261)

வலங்காதில் மேல் தோன்றிப்பூ அணிந்தவன்
    கண்ணனின் அழகில் ஆசைப்பட்ட என் மகள் மயங்கினாள். ஆதனால் அவள் உடல் மெலிந்தது என்பாள். மேலும், வலக்காதில் மேல் தோன்றிப்பூ அணிந்தும், காட்டு மல்லிகையைத் தன்மார்பில் அணிந்தும் குழல் ஊதியும் ;வரும் அழகு கண்டு என்மகள் மெய் மெலிந்தாள் என்று தாய் கூறுவதாகப் பெரியாழ்வார் கூறுகிறார்.
   
            வலங்காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து
                 மல்லிகை வனமாலை மௌல் மாலை
அலங்காரத்தால் வரும் ஆயப்பிள்ளை
அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்
வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே (நாலா. 262)


மேற்கண்ட பெரியாழ்வார் பாடல்களபை; பாடும் பக்தர்கள் பரமான வைகுந்தத்தை அடைவர் என்று பாடலின் பயனை அறியலாம்.


        பெரியாழ்வார் பாடல்களில் கோவர்த்தன மலை
    நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களில் பெரியாழ்வார் பாடல்கள் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. அதில் பல நிலைகளில் பல எடுத்துக்காட்டுகளுடன் தன் பக்திக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக கோவர்த்தன மலையைப் பற்றி தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். ஆதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குறப்பெண்களும் இளமான்களும்
    கோவர்த்தன மலை பாதுகாப்புடையது. மேலும், குழந்தைகளைக் காப்பாற்றும் பண்புடையது என்பர் பெரியாழ்வார். குறப்பெண்கள் மான்குட்டிகளைப் பிடித்து அதற்குப் பாலூட்டி காப்பாற்றுவர் என்ற தகவலைப் பதிவு செய்கிறார் ஆழ்வார். அது மட்டுமின்றி இந்திரனுக்குக் கோபத்தை மூட்டி மழைப் பகையை உண்டாக்கி கருங்கடல்; கண்ணன் தாங்கிய மலை கோவர்த்தன மலை என்பர். கண்ணன் நிறம் போன்று மழை பெய்யும் நல்ல மலை என்பதையும், மான்குட்டிகளை தாயைப் போல பாதுககாக்கும் குறமகளிர் உள்ள இடம் என்றும் கூறி கோவர்த்த மலை அனைத்துயிர்களைப் பாதுகாக்கும் சிறந்த இடம் என்பர் ஆழ்வார்.
            பொட்ட துற்றி மாரிப் பகைபுணர்த்த
                பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை
            வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
                வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
            கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
                கோவர்த்தனம் எனும் கொற்றக் குடையே (நாலா. 264)

பெண்யானையும் சிங்கக்குட்டியும்
    ஒரு தாய் தன் குழந்தையை அன்புடனும், அருளுடனும் பார்த்துக் கொள்வாள். இதேபோன்று பெண் யானைக் குட்டியை ஒரு சிங்கக்குட்டி கொல்ல நெருங்கியது. ஆப்பொழுது தாய் யானையானது தன்குட்டியைக் கால்களுக்கு இடையே நடுவே இடுக்கிக் கொண்டு சிங்கக்குட்டியை எதிர்த்துப் போர் செய்தது என்பர் ஆழ்வார். அதாவது ஏழு நாட்கள் தொடர்ந்து விடாமழை. கோவர்த்தன மலையில் மக்களும், விலங்குகளும் துன்பப்பட்டனர். கண்ணன் பெண் யானைப் போன்று காப்பாற்றினான் என்பர் பெரியாழ்வார்.

            மழை வந்து எழுநாள் பெய்து மாத்தடுப்ப
                மதுசூதன் எடுத்த மறித்த மலை
            இழவு தெரியாதது ஓர் ஈற்றுப்பிடி
                இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
            குழவி இடைக்கால் இட்டு எதிர்ந்துபொரும்
                கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (நாலா. 265)

    பெண் யானை போன்று கண்ணன் மக்களையும், விலங்குகளையும் காப்பாற்றினான். அத்தகைய மலை கோவர்த்தன மலை என்று சிறப்பிக்கிறார் ஆழ்வார்.



கோவர்த்தனமும் - குறவர் வில்லும் - சரணமும்
    கோவர்த்தன மலையைக் கண்ணன், இடையர்களையும், ஆய்ச்சியர்களையும் காப்பாற்ற பயன்படுத்தினான். மலையால் மக்கள் பயன்பெற்றனர். அதுமட்டுமின்றி குறவர்கள் தங்கள் மனைவியரை அழைத்துத் தினைப்புனத்தில் மேயும் மான்களைக் காட்டி, அவற்றின்மேல் அம்புகளை விடுவதற்காகப் பெரிய தோளையுடைய குறவர் விற்களை வளைத்து நிற்கும் இடம் கோவர்த்தனம் என்பர் ஆழ்வார். முலையின் இரண்டு பயன்களை ஆழ்வார் கூறுவர். ஒன்று மலையே ஆயுதமாகக் கொண்டு கண்ணன் மக்களைக் காப்பாற்றியது. இரண்டாவது குறத்தியரை மகிழ்விக்கும் குறவர்களைக் கொண்ட வீரம்மிக்கவர் வாழும் மலை என்பதை குறிப்பால் கூறுகிறார் ஆழ்வார்.
            அம்மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
                ஆனாயரும் ஆநிரையும் அலறி
            எம்மைச் சரண் என்றுகொள் என்று இரப்ப
                இலங்கு ஆழிக் கைஎந்தை எடுத்த மலை
            தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்
                புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று
            கொம்மைப் புயக் குன்றர் சிலைகுனிக்கும்
                கோவர்த்தனம் எனும் கொற்றக்குடையே (நாலா. 266)

மதயானை  சோற்றுக்கவளம் போல
    மதம் பிடித்த யானைக்குச் சோற்றுக் கவளம் தரும் பாகனைப் போல இடையர்களும், விலங்குகளும் துன்புற்றபோது மதி மயங்கிய நிலையின்போதும் கண்ணன் கோவர்த்தன மலையைக் கொண்டு காத்தது என்பர் ஆழ்வார். யானைக்கு உதவிய பாகனைப்போல இடையர்களுக்குப் பாதுகாப்பான காவலன் கண்ணன் என்பர் ஆழ்வார். மேலும், கடலிலுள்ள நிரைமேகங்கள் பெற்று, பின்னர் குடங்களிலிருந்து கொட்டினால் போற் ஏழுநாள்கள் நின்று மழை பெய்த மலை என்பர்.

            கடுவாய்ச் சின வெங்கண் கறிற்றினுக்குக்
                கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன்போல்
            அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு
                அமரர் பெருமான் கொண்டு நின்றமலை
            குடவாய்ப் பட நின்று மழைபொழியும்
                கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே (நாலா. 267)

வலிமை உள்ளீரோ?
    ஆழ்வார் கண்ணனின் வலிமையைக் கூறுகிறார். வானத்தில் உள்ளவர்களே, நீங்கள் கோவர்த்தன மலையை உங்கள் கைகளில் வாங்கிப் பாருங்கள் என்பவன் போல் கூறுவர். இதன்மூலம் வலிமையுள்ள ஓரே இறைவன் திருமால் மட்டுமே என்பதை அறியலாம்.
            வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல்
                அறையோ வந்து வாங்குமீன் என்பவன் போல் (நாலா. 268)

யானையும் இழந்த கொம்பும்
    பன்றியாகி நிலத்தைக் கோட்டினாலே எடுத்த மலை கோவர்த்தன மலை காட்டில் திரியும் யானை, தன் கொம்பு முறிந்தது. மதநீர் ஒழுகிக் கொண்டே இருந்தது. அதனை ஆற்றாமையால் இழந்த கொம்பைத் தேடியது. கோவர்த்தன மலையில் நின்று கொண்டு நிலவை தன் கொம்பாக நினைத்து எடுக்க முயற்சி செய்தது என்பர் ஆழ்வார்.

            ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை
                இடவன் எழவாங்கி எடுத்த மலை
            கானக் களியானை தன்கொம்பு இழந்து
                கதுவாய் மதம் சோரத் தன் கையெடுத்துக்
            கூனற் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும்
                கோவர்த்தனம் கொற்றக் குடையே (நாலா. 268)

ஐகவிரல் ஐந்தால் கவித்த மலை
    கோவர்த்தன மலையை கண்ணன் குடையாகப் பிடித்ததைப் பெரியாழ்வார் கூறும் பாங்கு சிறப்புடையது. திருமால் செந்தாமரைக் கையின் ஐந்து விரல்களையும் மலையாகிய குடைக்கு காப்புகளாகப் பொருந்தி, தன் நீண்ட தோளைக் காம்பாகக் கொடுத்து தலைகீழாகக் கவிழ்த்த மலை என்பர் ஆழ்வார்

            செப்பாடு உடைய திருமால் அவன்தன்
                செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்
            கப்பு ஆக மடுத்து மணிநெடுந்தோள்
                காம்பு ஆகக் கொடுத்து கவித்த மலை (நாலா. 269)

சுனைநீரும் முத்துச்சட்டையும்
    கோவர்த்தனமலை சுற்றி இடைவிடாது சுனைநீர் பெருகி வழிகின்றது. இது முத்துவடங்கள் போல் உள்ளன. இது கண்ணனுக்கு முத்தாலான் சட்டை அணிந்தது போல் இருந்தது என்பர் ஆழ்வார்
            எப்பாடும் பரந்து இழி தௌ;ளருவி
                இலங்கு மணி முத்துவடம் பிறழக்
            குப்பாயம் என நின்று காட்சிதரும்
                கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (நாலா. 269)

மேற்கண்ட சான்றின் மூலம் ஆழ்வாரின் இயற்கையைப் போற்றும் - மகிழும் உள்ளத்தைக் காணமுடிகின்றது.

அனுமன் புகழ்பாடி பாலூட்டும் தாய்க்குரங்கு
    அழிக்க முடியாது எனக்கூறும் இலங்கையை அதன் கட்டழித்துப் பெருமையைச் சீரழித்தவன் அனுமான். ஆவனின் புகழைக் கூறி குரங்குகள் தம் குட்டிகளைக் கைகளிலே ஏந்திப் பெண் குரங்குகள் சீராட்டிப் பாலூட்டி உறங்கச் செய்யும் இடம் கோவர்த்தனம் என்பர் ஆழ்வார்.

            அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த
                அனுமன் புகழ்பாடித் தம்குட்டன்களைக்
            குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
                கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே (நாலா. 270)

ஆதிசேடன் போல் தாமோதரன் தாங்கிய மலை
    ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடன் நிலஉலகைத் தாங்கிக் கிடக்கின்றன. அதைப்போல கண்ணன் தன் ஐந்து விரல்களை விரிய வைத்து தாங்கிய மலைதான் கோவர்த்தனம்.

            படங்கள் பலவும் உடைப்பாம்பு – அரையன்
                படர்பூமியைத் தாங்கிகஸ கிடப்பவன் போல்
            தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
                தாமோதரன் தாங்குத் தடவரையன் (நாலா. 270)

அருந்தவ முனிவர்களும் சினப்புலிகளும்
    இலைக் குடில்கள் அமைத்து அருந்தவ முனிவர்கள் ஓரிடத்தில் குழுவாக இருக்கும்பொழுது, அவர்கள் நடுவே கொல்லும் ஆற்றல் கொண்ட சினப் புலிகள் சென்று உறங்குவதற்கு ஏற்ற இடம் கோவர்த்தனம் என்று கூறுவர் பெரியாழ்வார். முனிவர்களுடன் புலிகளும் தங்குகின்றன எனில் அன்புக்கு அளவேது என்பதை பெருமாளின் அருளுடன் நினைவு கூர்கிறார் ஆழ்வார்.

            இலை வேய் குரம்பைத் தவ மாமுனிவர்
                இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்
            கோலை வாய்ச்சின வேங்கைகள் நின்று
                உறங்கும் கோவர்த்தனம்         (நாலா. 271)

குரங்குகள் பயிற்சி அளிக்குமிடம்
    குரங்கு கூட்டங்கள் தம் குட்டிகளை முதுகிலே கட்டிக்கொண்டு போய் ஒரு கொம்பிலிருந்து மற்றொரு கொம்பிற்கு குதிக்கும்படி காட்டிய பயிற்சி அளிக்கும் இடம் கோவர்த்தனமலை என்பர் ஆழ்வார்.

            முன்பே வழிகாட்ட முகக் கணங்கள
                முதுகிற் பெய்து தம்உடைக் குட்டன்களைக்
            கொம்பு ஏற்றி இருந்து குதிபயிற்றும்
                கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே (நாலா. 272)

கோவர்த்தனம் பெயரும் பெருமாளும்
    வலிய தூணைப் போல் நின்று காட்டிய பெருமாளின் மீது பற்றுக்கொண்டும், கோவர்த்தனத்தைத் தொட்டதால் அதன் பெருமையையும் மனதில் கொண்டு மக்கள் தம் குழந்தைகளுக்கு கோவர்த்தனம் என்று பெயரிடுகின்றனர் என்று ஆழ்வார் மகிழ்கிறார்.

           
தன் பேர் இட்டுக்கொண்டு தரணி தன்னில்
                தாமோதரன் தாங்கு தடவரை தாள்    (நாலா. 272)

ஏழு நாட்களும் கண்ணன் அழகு அழியவில்லை
    கோவர்த்தன மலையை கண்ணன் ஏழு நாட்களும் குடையாகத் தூக்கிப் பிடித்தான். அதனால் அவன் நிறம், செவ்வி, மென்மை, திருக்கை விரல்கள் அனைத்தும் இயல்பான அழகில் குறையவில்லை. சுமை தூக்கும்போது இயல்பாக அழகும், உடல் மென்மை, நிறம் மாறும் என்பதை ஆழ்வார் மனதில் கொண்டு கூறினார். வாட்டம் அடையவில்லை. ஆழகிய நகங்கள் நோகவில்லை. மலையும், அவன் எடுத்த செயலும் ஒரு மருட்கையாகும். இவ்வாறு பெரியாழ்வார் கோவர்த்தன மலையைத் தூக்கியபொழுது கண்ணனின் உடலழகும் குறையவில்லை என்பர்.

கொடி ஏறு செந்தாமரைக் கைவிரல்கள்
    கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல
    மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் (நாலா. 273)

முடிவுரை
1.    கோவர்த்தனமலையில் நல்ல குறத்தாயைக் காணமுடிகின்றது.
2.    குட்டியானையைக் காக்கும் தாய் யானையை காணலாம்.
3.    வீரமுடைய குறவர்கள் வாழ்வதைக் காணமுடிகின்றது.
4.    மதயானைக்குப் பாகன் உணவளிப்பதையும் தாய்மை உணர்வையும் காணமுடிகின்றது.
5.    தேவரிடம் வலிமை உள்ளதா என கேள்வி கேட்கும் நிலையைக் காணமுடிகின்றது.
6.    யானையும் இழந்த கொம்பும், மலையைத் தூக்கிய ஐந்துவிரல்கள், சுனைநீர், தாய்க்குரங்கு, பயிற்சி, முனிவர்களும் புலிகளும் என கோவர்த்தனமலையில் நடக்கும் சிறப்பினைக் காணலாம்.







      பெருமாளின் வெற்றியைப் பாடி உந்தியே பற இன்னப் பூ வலியப் பறித்திட்ட வலிமையைப் பாடு
    கண்ணன் தன் மனைவிக்கு கற்பகப் பூவை தன் பெரிய திருவடியாலே வலிந்து பிடுங்கியதைப் பாடி உந்தியே பற என்பர் பெரியாழ்வார்.
            என்நாதன் தேவிக்கு அன்பு இன்பப்பூ ஈயாதாள்
            வன்நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
            என்நாதன் வன்மையைப் பாடிப் பற    (நாலா. 307)

இராமனின் வில் வலிமையைப் பாடு
    பரசுராமனை எதிர்த்து வில்லை முறித்த இராமனையும், விசுவாமித்திரன் வேள்வியைக் காக்க தாடகியின் உயிரைப் போக்கிய இராமனின் வலிமையையும் உந்தியே பாடிப் பற என்பர் பெரியாழ்வார்.
            என்வில்வலி கண்டுபோ என்று எதிர்வந்தான்
முன்வில் வலித்து முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற          (நாலா. 308)

உருக்மனை சிதைத்த கண்ணனின் வலிமையைப் பாடு
    உருக்மினியைத் தேரிலே ஏற்றினான் கண்ணன். உருக்மன் தன் தங்கையைக் கொண்டு போவதைத் தடுத்தான். ஆவன் வீரம் கெடும்படி கண்ணன் சிதைத்தானே. அந்த வீரத்தைப் புகழ்ந்து பாடு என்பர் பெரியாழ்வார்.
            உருப்பிணி நங்கையைத் தேர்ஏற்றிக் கொண்டு
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற  (நாலா. 309)

கூற்றுத் தாய் சொல்ல சீற்றம் இலாதனைப் பாடு
    ஒரு பெண் ஆசைப்பட்ட அரசு உனக்கு வேண்டா என்றும் யாரும் ஆசைப்படாத வனத்திற்குச் செல் என்று இராமனிடம் சுமத்திரை கூறினாள். ஆனால், கோசலையோ மகனே, காட்டிற்குச் சென்றபின் உன்னை எப்படி பிரிந்து வாழ்வேன் என்றாள். அத்தகைய நிலையிலும் சீற்றமில்லாத இராமனை உந்தியே பாடிப் பற என்பர் பெரியாழ்வார்.
            மாற்றுத்தாய் சென்று வனம்போதே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இல்லாதனைப் பாடிப் பற  (நாலா. 310)
           
பஞ்சவர்க்கு தூதனும் - நாகத்திற்கு அருள் செய்தவனையும் பாடு
    பாண்டவர்களுக்குத் தூதாக சென்று பாரதப்போரை நடத்தியவனும், காளிங்கன் மேல் பாய்ந்து நடனமாடி பின் அருள் செய்த கண்ணனின் புகழைப் பாடி உந்தியே பற என்பர் பெரியாழ்வார்.
            பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள் செய்த  (நாலா. 311)

பரதனுக்குத் தன் திருவடிகளை அளித்த பெருமாளைப் பாடு
    ராமா, நீ நாடாளவேண்டும் என்று பரதன் கெஞ்ச, மறுத்து பின் தொடர்ந்து வந்தபோதும் தன் திருவடிகளை அளித்து அருள் செய்த அயோத்தி கோமானின் புகழைப் பாடி பற என்பர் பெரியாழ்வார்.
            முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற   (நாலா. 312)

சூர்ப்பணகை செவியோடு மூக்கு அரிந்தானைப் பாடு
    கைகேயின் சொல்லைக் கேட்டு கானகம் சென்ற இராமன் சூர்ப்பணகையைச் செவியுடன் மூக்கையும் அரிந்தான். அத்தகைய வீரனின் புகழை உந்தியே பாடிப் பற என்பர் பெரியாழ்வார்.
            தார்க்கு இளந்தம்பிக்கு அரசுஈந்து தண்டகம்
சூர்ப்பணகாவைச் செவியோடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற        (நாலா. 314)

ஆநிரை மேய்த்தானை – சகடம் உதை;தானைப் பாடிப் பற
    அசுரனை உருவம் மாய உதைத்தான். உரலால் மருத மரங்களை விழும்படிச் செ;யதான். பசுக்கூட்டங்களைக் காத்து குழல் ஊதினான். அத்தகைய பசுக்கூட்டத்தை மேய்த்தவனும் கோபாலர்களின் தலைவனான கண்ணனின் புகழைப் பாடி உந்திப ற என்பர் பெரியாழ்வார்.
            மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்துஅணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற   (நாலா. 315)

இராவணனின் முடியறுத்து – தம்பிக்கு அரசு தந்தவனைப் பாடு
    கடலில் அணை கட்டி, இராவணனுடன் போர் செய்து, அவன் பத்துத் தலையையும் அறுத்து, அவன் தம்பி வீடணனுக்கு ஆட்சியை அளித்த வீரன். இராமனின் புகழை உந்தியே பாடிப் பற என்பர் பெரியாழ்வார்.
            காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
            ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
            நேரா அவன் தம்பிக்கே நீள் அரசுஈந்த
            ஆரா அமுதனைப் பாடிப்பற        (நாலா. 316)

திருமாலின் சுவடு உரைத்தலும் பெரியாழ்வாரும்
    இராமனும், கண்ணனும் வாழ்ந்த இடங்களைப் பார்த்தால் அவர்களின் சுவடுகள் இருக்கும் என்று பெரியாழ்வார் தன் பாடல்களில் குறிப்பிடுகிறார். அதனை இக்கட்டுரையில் காண முற்படுவோம்.
இரணியனைப் பிளந்தக் கண்ணனைக் கண்டோர் உளர்
    இராமன் இருக்கும் இடத்தைப் பார்க்க  விரும்பினவர் தம் இரணியன் மார்பினைச் சிங்க உருக்கொண்டு இருபிளவாக்கி, குடலைப் பிடுங்கிக் குருதி அளைந்த கையோடு இருந்தவனைக் காண விரும்பினாலும் அதனைப் பார்த்;தவர்கள் அடியார்கள் இன்றும் உள்ளனர் என்று பெரியாழ்வார் தம் பாடலில் கூறுவர்.
            எதிரில் பெருமை இராமனை
இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழற்பொருதோள் இரணியன்
ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை
உள்ளவா கண்டார் உளர்          (நாலா. 328)

சனக மன்னனின் வேள்விச் சாலையைக் கண்டோர் உளர்
    இராமனின் ஆயுதங்கள் உடைவாள், திருச்சார்ங்கம் அடிக்கும் தண்டு, வில், திருவாழி ஆகியவையாகும். இதனைக் காண விரும்பினால் சனகனின் வேள்விச் சாலையில் கண்டவர்  உள்ளார்கள். இராமன் சீதையை மணக்க சனகனின் வில்லை ஒடித்த செய்தியைக் கூறி, வேள்விச் சாலைகள் பற்றி அறிவதன் மூலம் சுவடுகளைப் பெரியாழ்வார் கூறுவார்.
            நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச்
                சார்ங்கம் திருச்சக்கரம்
            ஏந்து பெருமை இராமனை இருக்கும்
                இடம் நாடுதிரேல்
            காந்தள் முகிழ்விரல் சீதைக்கு ஆகிக்
                கடுஞ்சிலை சென்று இறுக்க
            வேந்தர் தலைவன் சனகராசன்தன்
                வேள்வியிற் கண்டார் உளர்     (நாலா. 329)


ஏழு மராமரங்களை அழித்தவனை காண விரும்பினால்
    குவலயா பீடத்தின் கொம்புகளைப் பறித்து அசுரர்களை அழித்தும், சுக்ரீவனின் ஐயத்தைப் போக்க ஏழு மராமரங்களை வில்லால் துளைத்த இராமனைக் காணவிரும்பினால், வானர்கள் மலையை கடலில் அணையாக்க அதனைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் பெருமான் குடியிருக்கும் ஊர்களில் உள்ளனர். அதைவைத்து பெருமாளின் சுவடை அறியலாம் என்பர் பெரியாழ்வார்.
            கொலையானைக் கொம்பு பறித்துக்
கூடவர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச்
சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று
தடவரை கொண்டு அடைப்ப
அலை ஆர்கடற்கரை வீற்றிருந்தானை
அங்குத்தைக் கண்டார் உளர்  (நாலா. 330)
           
நப்பின்னையை அடைந்தவனை காண விருப்பமா?
    உலகத்தை உள்ளடங்கிய சின்னஞ்சிறு குழந்தையானக் கண்ணனைத் தேடுகின்றீர்களா? நப்பின்னையை அடைய ஏழு காளைகளை அடக்கிய குறுவியர்ப்பு அரும்பிய வடிவுடன் உள்ள கண்ணனைக் கண்டவர்கள் ஆயர்பாடியில் உள்ளனர். அங்கே சென்றால் சுவடுகளைக் காணலாம் என்பர் பெரியாழ்வார்
            மாயக் குழவி அதனை நாடுறில்
வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி
ஆடல்விடை ஏழினையும்  (நாலா. 331)

உருக்மணியைப் வலியப் பிடித்தானைக் காண விருப்பமா?
    சிவனும், நான்முகனும் முறையாக துதிக்கும் திருமாலைக் காண விரும்புகிறீர்களா? உருக்மணியை வலியப் பிடித்த கண்ணன் தேரில் ஏற்றிக் கொண்டு எதிரிகளை வீழ்த்தியபின் திருமணக் கோலத்தோடும் வீரத்தோடும் கண்டவர்கள் உள்ளனர். அப்பகுதிக்குச் சென்றால் அந்தச் சுவட்டைக் காணலாம் என்பர் பெரியாழ்வார்.
                நீர்ஏறு செஞ்சடை நீலகண்டனும்
நான்முகனும் முறையால்
வார்ஏறு கொங்கை உருப்பிணியை
வலியப் பிடித்துக் கொண்டு
தேர்ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச்
சிக்கெனக் கண்டார் உளர்   (நாலா. 332)

துவாரகையில் கண்டவர்கள்
    பூதனையை அழித்தவன், நரகாசுரனைக் கொன்றபின் பதினாறாயிரம் தேவியருடன் துவாரகையில் இருக்கும்போது கண்டவர்கள் அனைவரும் உள்ளனர் என்பர் பெரியாழ்வார். இதனால் துவாரகையில் பெருமாளைக் காணும்போது அந்தச் சுவடுகள் வெளிப்படுத்துகின்றன. 
            பொல்லா வடிவுடைய பேய்ச்சி துஞ்சப்
வல்லானை மா மணிவண்ணனை
பல்லாயிரம் பெருந்தேவியரரொடு
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே   (நாலா. 333)

கண்ணனை பாரதப்போரில் கண்டவர்
    வெண்சங்கையும் திருவாழியையும் ஏந்தியும் வெண்குதிரைகள் பூட்டி குரங்குச் சின்ன வெற்றிக்கொடி பறக்கும் பார்த்தன் பாரதப் போரை நடத்தும்போது கண்டவர் உள்ளனர் என்பர் பெரியாழ்வார். பெருமாளின் உருவத்தையும், சின்னம், குதிரைகள் பூட்டிய பாங்கு அனைத்தும் திவ்ய தேசங்களில் காணகிடைக்கின்றன. இதனால் பெருமாளின் சுவடுகளை எளிதில் உணரலாம்.
            வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்ச் திருச்சக்கரம்
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடி தேர்மீசை
கள்ளப் படைத்துணை ஆகி பாரதம்   (நாலா. 334)

சயத்திரதன் தலையைப் பாழில் உருள
    சயநாதனைக் காப்பாற்ற முப்பது நாழிகைகள் கழிந்தது என்று தோன்ற பரிதியை மறைத்த கண்ணன் அவன் தலை பாழிடத்திலே உருளும்படி செய்த பார்த்திபன் அருகில் இருந்ததைக் கண்டவர்கள் உள்ளார்கள் என்று பெரியாழ்வார் கூறுவர். கண்ணன் சயத்திரதனை அழித்த சுவடுகள் இன்றும் திவ்யதேசத்தில் காணக்கிடப்பதை அறியலாம்.  
            நாழிகை கூறுஇட்டுக் காத்து நின்ற
            ஆழிகொண்டு அன்று இரவி மறைப்ப
            பாழில் உருளப் படை பொருதவன்        (நாலா. 335)

மண்னும் மயலயம் விழுங்கியவன்
    நிலம், மலை, கடல் அனைத்தையும் விழுங்கியவனை தேடும் எண்ணமுடையீர், பன்றியாய் உலகை அண்டச் சுவரிலிருந்து எடுக்க நிலமகளை மணந்தவனைச் கண்டவர்கள் உள்ளனர் என்பர் பெரியாழ்வார்.
            மண்ணும் மலையும் மறிகடல்களும்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை
இருநிலம் புக்கு இடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானை  (நாலா. 336)

பெரியாழ்வார் போற்றும் திருக்கோட்டியூர்

    பெரியாழ்வார் தம் பாடல்களில் பல திவ்ய தேசங்களைப் புகழ்ந்து கூறியுள்ளார். குறிப்பாக திருக்கோட்டியூர் என்னும் திவ்யதேசத்தையும் அங்குள்ள பெருமாளையும் புகழ்ந்து பாடியுள்ளார்.
நற்சொல் கூறுதலும் விருந்தோம்பலும்
    திருக்கோட்டியூர் என்னும் ஊரில் நல்ல சொற்களையே பேசுபவர்கள் உள்ளனர். நாள்தோறும் விருந்தோம்பலைச் செய்கின்றனர்.  தேவகாரியம் செய்தும் வேதம் பயின்றும் அவ்வூரிலே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருமாலை சிந்தித்து வழிபடாதவர்களைப் பெருமாள் ஏன் தான் படைத்தானோ அறிகிலேன் என்பார் பெரியாழ்வார்.
            நாஅகாரியம் சொல் இலாதவர்
நாள்தோறும் விருந்து ஒம்புபவர்
தேவகாரியம் செய்து வேதம்
பயின்று வாழ் திருக்கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும்
முதல்வனைச் சிந்தியாத அப்
புhவகாரிகளைப் படைத்வன்          (நாலா. 360)

குருவுக்குப் பணிந்தும் - தாயர் வயிறும்
    குற்றமின்றி  குரக்களுக்குப் பணிந்த மக்களும், பொறாமை இல்லாத வள்ளல்களும் வாழும் ஊர் திருக்கோட்டியூர். பெருமாளைத் தொழாதவரின் தாய் வயிறுக்கு, தாங்க முடியாத நோய் செய்தவர்கள் என்று பெருமாளை வணங்காதவர்களை இகழ்ந்து கூறுவர் பெரியாழ்வார்.
            குற்றம் இன்றி குணம் பெருக்கிக்
குருக்களுக்கு அனுகூலராய்ச்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்
தூற்றி ஏழ் உலகு உண்ட தூமணி
வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு
நோய்செய்வான் பிறந்தார்களே     (நாலா. 361)



பெருமாள் வடிவத்தை எண்ணுவதற்கே விரல்கள்
    திருக்கோட்டியூரிலே திண்ணைகள் பல உள்ளன. பெருமாளின் நாமங்களை ஒவ்வொன்றாய் இன்ன வடிவம், குணம் என்று எண்ணுவதற்காக உண்டாக்கப்பட்டதே விரல்கள். ஒரு கணப்போதும்கூட எண்ணாமல் புறம்பே சென்று உடல் வளக்க கவளம் கவளமாக ஊத்தை வாய்க்குள் செலுத்துகின்றார்களே என்று பெரியாழ்வார் வேதனைப்படுகிறார்.
            திண்ணை சூழ்ந்திருக் கோட்டியூர் திரு
மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களாய் இறைப்
போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
கவளம் உந்துகின்றார்களே   (நாலா. 362)

பருகும் நீரும் உடுத்த உடையும் பாவம் செய்ததோ?
    செந்தாமரை நிறைந்த வயல்சூழ்ந்த திருக்கோட்டியூரிலே உள்ள பெருமாளைத் தம்முடைய நாவினால் திருப்பெயர்களைக் கொண்டு அழைக்காத மானிடர்கள் உண்ணும் உணவும், பருகும் நீரும் உடுக்கும் உடையும் பாவத்தைச் செய்ததோ என்பர் பெரியாழ்வார்.
            நாகநாகனை நாவிற்கொண்டு அழை
                    யாத மானிட சாதியார்
பருகு நீரும் உடுக்குங் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ.  (நாலா. 363)

உண்ணும் சோற்றில் புல்லைத்திணி
    திருமாலை எண்ணாத, வணங்காத மக்கள் இப்பூமியில் இருப்பது பாவம் என்பர் பெ;ரியாழ்வார். மேலும், அவர்கள் உண்ணும் சோற்றைப் பிடுங்கி வாயில் புல்லைத் திணிக்க வேண்டும் என்று பெரியாழ்வார் கோபத்துடன் கூறுவார். 
                நேமி சேர் தடங்கையினானை
நினைப்பு இல வலிநெஞ்சு உடைப்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை
வாங்கிப் புல்லைத் திணிமினே       (நாலா. 364)

வைணவர்களின் பாதத்துளியும் - உலகம் பேறு பெறுதலும்
    ஐம்பூத உடலாலும், ஐவகை வேள்வியாலும், ஐம்புலன்களாலும், ஐம்பொறிகளாலும் ஒரு குற்றமுமின்றி கொடைத்தன்மையோடு பொருந்திய அடியார்கள் வாழும் திருக்கோட்டியூர் என்பர் பெரியாழ்வார். நரசிங்கனை ஏத்தி வழிபாடு செய்யும் வைணவர்கள் உலவும் பாத தூளிபடுவதால் இவ்வுலகம் பேறுபெற்றதாகின்றது என்று பெருமை கொள்வார் பெரியாழ்வார்.
            பூதம் ஐந்தோடு வேள்ளி ஐந்து
புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று
ஏத்துவார்கள் உழக்கிய
பாத தூளிபடுதலால் இவ்
உலகம் பாக்கியம் செய்ததே     (நாலா. 365)

திருவிழா – வழிபாடு செய்தவர்கள் - எத்தகைய தவமோ?
    குருந்த மரத்தை முறித்த கண்ணனை நினைத்து ஆடிப்பாடி, திருவிழா செய்து, வழிபாடு செய்து வாழும் ஊர் திருக்கோட்டியூர். இந்த ஊரிலிருப்பவர்கள் என்ன தவம் செய்தார்களோ? அறியேன் என்று திருக்கோட்டியூரில் பிறந்து கண்ணனை வழிபாடு செய்யும் பக்தர்களைப் பாராட்டுகிறார் பெரியாழ்வார்.
            குருந்தம் ஒன்று ஒசித்தானோடும் சென்று
கூடி ஆடி விழாச் செய்து
திருந்து நான்மறையோர் இராப்பகல்
ஏத்திவாழ் திருக்கோட்டியூர்
கருந் தடமுகில் வண்ணனைக் கடைக்
கொண்டு கைதொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர்    
    எத்தலங்கள் செய்தார் கொலோ     (நாலா. 366)

தானியமும் அரக்கர்கள் ஆற்றலின்மையும்
    குளிர்ச்சி பொருந்தியும், நீதியில் மலைபோல் நிற்பவர்களும், அன்புடன் பெருமாளுக்கு அடியவராகவும் திருக்கோட்டியூரிலே மக்கள் வாழ்கின்றனர். ஆவர்களின் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரக்கர்களும் உரிமை கொள்ள முடியாமல் ஆற்றலற்றவர்களாக இருப்பர் என்று பெரியாழ்வார் கூறுவர்.
            குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம்
பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர்
மீது கொள்ளகிலார்களே.         (நாலா. 367)



எம்பெருமானின் அடையாளங்களும் வைணவர்களைக் காணவும்
    குயில் இணங்கள் தாமாகவே திருமாலைப் பாடும் இயல்புடைய ஊர் திருக்கோட்டியூர். பெருமாளை நவின்று வணங்குவார்களை நான் கண்டால் பெருமாளின் சின்னங்கள் என்று தம் ஆசையைத் தீர்த்துக் கொள்வேன் என்று பெரியாழ்வார் திருக்கோட்டியூரைப் புகழ்வார்.
            கொம்பின் ஆர் பொழில்வாய்க் குயிலினம்
                கோவிந்தன் குணம் பாடு சீர்
            நம்பனை நரசிங்கனை நவின்று
                ஏத்துவார்களைக் கண்டக்கால்
            எம்பிரான் தன் சின்னங்கள் இவர்
                இவர் என்று ஆசைகள் தீர்வனே      (நாலா. 368)


காசுக்கு நெல் விற்றலும் - விருந்து தரலும்
    காசுக்கு நெல் விற்குங் காலத்திலும் தம் விளைச்சலை மறைக்காமல் பசித்தவர்களுக்கு சோறு வழங்கும் மக்கள் வாழும் ஊர் திருக்கோட்டியூர். பெருமாளின் சிறப்பைப் பாடும் அடியார்களுக்கு அடியவன், அவர்கள் எங்களை விலைக்கு விற்கவும் உரியவர்களாவோம் என்பர் பெரியாழ்வார்.
            காசின் வாய்க்கரம் விற்கிலும் கர
                வாது மாற்றுஇலி சோறுஇட்டு
            கேசவா புருடோத்தமா கிளர்
                சோதியாய் குறளா என்று
            பேசுவார் அடியார்கள் எம்தம்மை
                விற்கவும் பெறுவார்களே.      (நாலா. 369)

           


                .பெரியாழ்வார் பாடல்களில் பெயர்வைத்தலும் தாய்மையும்



    தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடம்பெற்று சிறப்புற்று விளங்குவது பக்தி இலக்கியம். புக்தி இலக்கியத்தில் வைணவக் கோட்பாடுகளைக் குறித்து பன்னிரு ஆழ்வார்கள் தம் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். அவர்களுள் குறிப்பாக பெரியாழ்வார் வைணவத்தைப் பரப்பும் நோக்கில் தீவிரமாக சிந்தித்து பல கருத்துக்களைக் கூறியுள்ளார். அவற்றுள் மனிதர்களிடத்தில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது மனிதப் பெயரை வைக்காமல் திருமாலின் பெயரையே வைக்க வேண்டும் என்றும், அதனால் குழந்தையைப் பெற்ற தாய் நரகம் புகாள் என்றும் அறிவுறுத்திக் கூறியுள்ளவற்றை இக்கட்டுரை ஆய்வு செய்ய முனைகின்றது.

பெயர்கள்
    வைணவத்தை மக்கள் சார்ந்து வாழ வேண்டும் என்று பெரியாழ்வார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆதற்கு எத்தகைய வழிமுறையில் மக்களுக்கு அறிவுறுத்தியும், ஆலோசனை கூறியும் பெயர் வைத்தல் மூலம் மனமாற்றத்தைக் கொண்டுவர முயல்கிறார். குறிப்பாக மக்களே நீங்கள் பெருமாளின் பெயரைத் தம் குழந்தைகளுக்கு வையுங்கள் என்பதோடு பெயர்ப்பட்டியலையும் குறிப்பிடடுள்ளார்.
1.    கருமுகில் வண்ணன் நாமமே (நாலா. 387)
2.    கேசவன் பேர் இட்டு (நாலா.381)
3.    கோவிந்தா என்று அழைத்தக்கால் (நாலா. 384)
4.    சிரீதரா என்று அழைத்தக்கால் (நாலா. 382)
5.    தாமரைக்கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால் (நாலா.388)
6.    தாமோதரா என்று நாடுமின் (நாலா. 386)
7.    நாயகன் நாரணன் (நாலா. 381)
8.    மாதவா (நாலா. 384)
மேற்கண்ட பெயர்ப்பட்டியலைப் பெரியாழி;வாரின் பாடலில் காணமுடிகின்றது. பேயரை இடடும் அழைக்கும் நோக்கில் தாயரின் எண்ணங்களும், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணமும் மாற்றமடையும் என்பதை பெரியாழ்வார் நம்புகிறார். இதனால் பெருமாளின் சிந்தனைகள் குடும்பம், சமூக மக்களிடையே பரவுவதற்கு பெரும் வாய்ப்பாக அமைகின்றது.
    பெயரை அழைத்தல் என்பது மக்களிடையே கட்டாயமாகின்றது. மேலும், பேச்சு வழக்கில் திருமாலின் பெயரையுடையவன் திருமாலுக்குச் சமமாக பண்புடையவன் என்ற நம்பிக்கை மக்களிடையே உண்டாகும். மேலும், பெயர்க்காரணம் குறித்து வினா எழுப்புவர். அப்பொழுது வைணவ வரலாறு கூறவும் வாய்ப்பு வரும். இதனால் பெருமாள் பக்தி வளரும் என்ற நம்பிக்கையில் பெரியாழ்வார் பெயர் வைத்தலில் பெருமாளின் பெயரை வைக்குமாறு அறிவுறுத்தியதை அவர்தம் பாடல்களில் அறியமுடிகின்றது.
பெயர் வைத்தலும் அன்னைக்குப் பயனும்
    குழந்தை பெற்றால்தான் ஒரு பெண்ணுக்குத் தாய்மை தகுதி சமூகம் அளிக்கின்றது. இல்லையென்றால் மலடி என்று பட்டம் தந்து குழந்தைப் பேறில்லா பெண்ணை ஓரங்கட்டுகின்றது. எனவே, குழந்தை பெற்றாலும் தாய்க்குப் பெருமை வேண்டம் என்றால் குழந்தைக்குப் பெருமாளின் பெயரை வைத்தால் மட்டுமே பெருமை என்கிறார் பெரியாழ்வார். இல்லை என்றால் சாதாரண மக்களின் பெயரை வைத்தால் வீடுபேறு கிடைக்காமல் நரகம் புகுவாள் என்று தாய்க்கு வலியுறுத்துவர்  பெரியாழ்வார். இதனை ஒன்பது பாடல்களில் பதிவு செய்துள்ளார்.
            'கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ
 நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்';(நாலா.381)
            'செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
             நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்' (நாலா.382)
            'நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்' (நாலா. 383)

தாய் நரகம் புகக்கூடாது என்பதில் தந்தையும், குடும்பமும் விழிப்புடன் இருந்து குழந்தைக்கு நாரணன் பெயர்வைக்க வேண்டும் என்று பெரியாழ்வார் வலியுறுத்துவதைக் மேற்கண்ட சான்றுகளின் மூலம் உணரலாம்.
மனிதப் பெயரும் பொதுப்பலனும்
    மனிதப் பெயர் வைப்பதால் கிடைக்கும் பயன்களையும் தீமைகளையும் பெரியாழ்வார் ஐந்துவகையாய் பிரித்துக் கூறுகிறார். குறிப்பாக மானுட இனம்,
1.    இயல்பான பொருட்களுக்காக பெயர்வைத்தல்
2.    மனித உடலின் தன்மைக்குப் பெயர்வைத்தல்
3.    மண்ணாய்;ப் போகும் உடலுக்குப் பெயர்வைத்தல்.
4.    மனிதசாதிக்குப் பெயர்வைத்தல்
5.    பெயர்களைக் கேலி செ;யதல்.

இயல்பான பொருட்களுக்குப் பெயர்வைத்தல், காசு, ஆடை, நெற்கதிருக்குப் பெயரா?
    மனிதன் தன் குழந்தைக்குப் பெயர் வைப்பதைப் பற்றிக் கூறும் பெரியாழ்வார் இயல்பாகக் கிடைக்கும் பொருட்களுக்குப் பெயர் வைத்தலால் குழந்தைக்குப் பயன் ஒன்றும் கிடைக்காது என்பர். நாலிரண்டு காசுகளும் கறையையுடைய துணிகளும் ஒரு கட்டு நெற்கதிர் கிடைக்கும் என்னும் ஆசையால் அறிவற்றவர்களே மனிதப் பெயரை வைக்காதீர்கள் என்கிறார் ஆழ்வார். பணம் தரும் வள்ளல்கள். அரசர்களைப் பற்றி கூறி இடித்துரைப்பதைக் காணமுடிகின்றது.
                காசும் கறை உடைக்கூறைக்கும் அங்குஓர் கற்றைக்கும்
ஆசையினால் அங்குவைத்துப் பேர்இடும் ஆதர்காள்
 (நாலா. 381)
                அங்கு ஒரு கூறைஅரைக்கு உடுப்பதன் ஆசையால்
                மங்கிய மானிட சாதியின் பேர்இடும் ஆதர்காள் (நாலா.382)

எண்ணெய், நெற்றிச்சுட்டி, வளைக்காக பெயரா?
    சிலர் தமக்கும் தம் குழந்தைக்கும் தடவ எண்ணெயும், நெற்றியிலே அணிய சுட்டியையும், கைகளுக்கு இடுவதற்காக வளைகளையும் தந்தார்கள் என்பதற்காக அவர்களின் அன்புக்கும், பண்புக்கும் பாசம் வைத்து நன்றி செய்கிறோம் என்று மானிடப் பெயர்களைத் தம் குழந்தைக்கு வைக்காதீர்கள் என்பர் பெரியாழ்வார்.
            உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள்! ஏன் செய்வான் பறிர்பேர் இட்டீர்
   (நாலா. 383)

மானிட சாதி பெயரால் மறுமை கிடையாது
    மனித இனத்தில் தோன்றி, மக்களுக்கு சிறந்த மக்களின் பெயரே இட்டு அழைத்தாலும் மறுபிறவியில் வீடுபேறு கிடைக்காது என்பர் பெரியாழ்வார்.
            மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை.   (நாலா. 384)

நாடும் நகரமுமறிய பேரிட்டாலும்
     நாட்டிலும் நகரத்திலும் தம் குழந்தை சிறப்புடையவன் என்று அறிய மனிதர் பெயரையிட்டுத் தாழ்ந்து விழுந்த குழியில் விழுந்துதான் வாழவேண்டும். எனவே, மனிதப் பெயரையிடுதல் வேண்டா என்பர் பெரியாழ்வார்.
            நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டுக்
            கூடி அழுங்கிக் குழியில் வீழ்ந்த        (நாலா.)

மல ஊத்தைக்கு மலமுடைய உயிரின் பெயரா?
    மனித  உடலானது மும்மலங்களை உடையது. மற்றொரு மல ஊத்தைக்கு மலமுடைய ஒரு உயிரின் பெயரை இட்டழைத்தால் மறுமைக்கு ஒரு பயனும் இல்லை என்பர் பெரியாழ்வார்.
            மலம்உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர்மல ஊத்தையை
மலம்உடை ஊத்தையின் பேர்இட்டால் மறுமைக்கு இல்லை
  (நாலா. 385)

ஊத்தைக் குழியில்அமுதம் பாய்ந்தாற் போல



கண்டம் எனும் பெருமாளின் திருப்பதி புகழ்
    திருமாலின் கண்டம் என்னும் திருப்பதியின் புகழைப் பெரியாழ்வார் பலவாறு பாராட்டுகிறார். ஆதன் தன்மையும் அங்கு குடியிருக்கும் பெருமாளின் புகழை இக்கட்டுரையில் காண முற்படுவோம்.
தாசரதி இருக்கை கண்டமே
    சூர்ப்பனகை மூக்கினையும், இராவணன் தலைகளையும் அறுத்த இராமன் மீண்டும் பதினோராயிரம் ஆண்டுகள் அரசாட்சி செய்த இடம் கண்டம் என்னும் திருப்பதியாகும் என்பர் பெரியாழ்வார். மேலும், எங்கு நீராடினாலும் கங்கை கங்கை என்று நீராடினால் அதனால் தீவினை போக்கவல்ல கங்கையின் கரைமேல் கையெடுத்துத் தொழும்படி நின்ற கண்டம் என்னும் திருப்பதியே எனப் புகழ்வார் பெரியாழ்வார்.
            தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
தடந்த என் தாசரரதி
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே          (நாலா. 391)

கொன்றைப் பூக்களும் - திருத்துழாய் மலர்களும்
    சிவபிரான் அணியும் கொன்றைப் பூக்களும், திருமாலின் திருவடியில் இருக்கும் திருத்துழாய் மலர்களும் கலந்து வருகிற ஒளியைப் பெற்ற கங்கைக்கரையின் மீதுள்ள கண்டம் திருப்பதி சிறப்புடையது என்பர் பெரியாழ்வார்.
            நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
                நாரணன் பாதத் துழாயும்
            கலந்து இழி புனலால் புகர்படு கங்கை     (நாலா. 392)


புருடோத்தம்மன் இருக்கையும் கதிர்முகம் மணியும்
    வலம்புரியை வாயில் வைத்து ஊதியும், தீ உமிழ் திருவாழியை எறிந்தும், அசுரர்களின் தலைகளை உருட்டிய புருடோத்தமன் இருப்பிடம் கண்டம் என்னும் திருப்பதியாகும். பிரம்மாவின் கையிலும், திருவடியிலும், சிவபிரான் சடையிலும் ஒளி வீசும் மணிக்கற்களைக் கொண்டது என்றும் பெரியாழ்வார் கூறுவர்.

            அதிர் முகம் உடைய வம்புலி குமிழ்த்தி
அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்
சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முகம் மணிகொண்டு இழிபுனற் கங்கை
கண்டம் என்னும் கடிநகரே       (நாலா. 393)

நாந்தகம் எனும் வாளும் இருங்கடல் அளவும்
    அசுரர்களை அழிக்க நாந்தகம் என்னும் வாளை வீசி அழித்தவன் நகரம் கண்டம் எனும் திருப்பதியாகும். மேலும், இமயம் தொடங்கி பெரிய கடல்போன்ற கங்கையில் குளித்து தத்தம் பாவம் போக்கும் நகரம் கண்டம் என்னும் திருப்பதி என்பர் பெரியாழ்வார்.
            இமையவர் இறுமாந்து இருந்து அரசாள
எற்று வந்து எதிர் பொருசேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்
நம் புருடோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்
இருகரை உலகு இரைத்து ஆட
குமை உடைப்பெருமை கங்கையில்  (நாலா. 394)

ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் கழுவிடும்
    கலப்பை, உலக்கை, வில், திருஆழி, சங்கு, மழு, வாள் உடையவன் திருமால். ஏழு பிறப்புகளிலும் பெற்ற பாவங்கள் அனைத்தையும் கங்கையிலே மூழ்கியவர்களுக்குப் போக்குபவன் வாழும் இடம் கண்டம் எனும் திருப்பதி என்பர் பெரியாழ்வார். 
                உழுவது ஓர்படையும் உலக்கையும் வில்லும்
                    ஒண்சுடர் ஆழியும் சங்கும்
                எழுமையும் கூடி ஈண்டிய பாவம்
                    இறைப் பொழுது அளவினில் எல்லாம்
                கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்   (நாலா. 395)

அருந்தவ முனிவரும் குடைந்து ஆடலும்
    மழையை கோவர்த்த மலையைக் கொண்டு மறைத்தவனும், வடமதுரையை ஆண்டவனுமான கண்ணன் நகரம் கண்டம் எனும் கடிநகர் என்பர் ஆழ்வார். அரிய தவம் செய்யும் முனிவர்கள் யாகங்களின்பின் திருமுழுக்குச் செய்து அதன்பின் கலப்பைகளைக் கொண்டு போகும் இடம் கண்டம் என்னும் திருப்பதியாகும்.
            மலைப் பெருங் குடையால் மறைத்தவன்
மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்
அவபிரம் குடைந்து ஆடக்
கலப்பைகள் கொழிக்கும் கங்கை   (நாலா. 396)
அரமகளிர் சாந்தும் கற்பகப் பூக்களும்.
    வில்லை முறித்தும், குவலயா பீடத்தின் கொம்புகளை சிதற அடித்து, சாணூர மல்லர்களை அழித்தவன் பெருமாள் என்றும் அவன் வாழுமிடம் கண்டம் என்பர் பெரியாழ்வார். வெள்ளை யானையின் மதநீரும், அரமகிளர் சாந்தும் அவர்கள் சூடிய கற்பக மலர்களும் உடைய கண்டம் என்னும் நகர் என்பர் பெரியாழ்வார்.
            விற்பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி
மேல் இருந்தவன் தலை சாடி
மற்பொருது எழப்பாய்ந்து அரையனை
உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும்
அவர் இளம்படியார் ஒண்சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழிகங்கை   (நாலா. 397)

கேள்வித் தூண்களும் வேள்விப் புகையும்
    துவாரகை வேந்தன் கண்ணன் பாண்டவர்க்கு அரசாட்சி செய்தவன் உறையும் இருப்பிடம் கண்டம் என்னும் கடிநகர். தூண்கள் ஒழுங்காக அமையப் பெற்றும் இரு கரைகளிலும் ஒரே அளவாக வேள்விப் புகை மணம் வீசும் சிறப்பிடம் பெற்றது கண்ணன் வாழும் கண்டம் என்னும் திருப்பதி என்பர் பெரியாழ்வார். 
            திரை பொருகடல் சூழ் திண்மதில் துவரை
அரசினை அவிய அரசினை அருளும்
நிரை நிரையாக நெடியன யூபம்
    நிரந்தம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை    (நாலா. 398)

பகீரதனும் கங்கையும்
    வடக்கு திசையிலுள்ள மதுரை, சாளக்கிராமம், வைகுண்டம், துவாரகை, அயோத்தி, பத்ரி ஆகிய பகுதிகளில் வாழ்பவன் திருமால். அவன் தங்குமிடம் கண்டம் எனும் நகரே என்பர் பெரியாழ்வார். மேலும், பகீரதன் தவ வலிமையால் மலைகளும் அதிர, நிலம் விண்டு விழ மரங்களை மோதி கடலும் கலங்கும்படியாயும் கங்கைக் கரையின் மேலே உள்ள திருப்பதி கண்டம் ஆகும்.
            வடதிசை மதுரை சாளக்கிராமம்
                வைகுந்தம் துவரை அயோத்தி
            தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
                தலைப் பற்றிக் கரைமரம் சாடி
            கடலினைக் கலங்கக் கடுத்து இழிகங்கை      (நாலா. 399)

மூன்று எழுத்தும் மூன்று அடியும்
    மூன்று சொல்லால் ஆன அகரம், உகரம், மகரம் என்பது ஓம்கார மந்திரம் ஆகும். அதை மூன்றெழுத்துக்களால் பிரித்து அதையே பிரணவத்தையே திரு எட்டெழுத்தாக்கியவன் பெருமாள். மூவடி அளந்து தஞ்சம் என வந்தாரைக் காப்பான். இத்தகையவன் இருப்பிடம் கண்டம் எனும் திருப்பதியாகும் என்பர் பெரியாழ்வார்
            மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
                மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
            என்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு
                உடைய எம்புருடோத்தமன் இருக்கை.
            மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி
                மூன்றினில் மூன்று உரு ஆனான்.      (நாலா. 400)

           


       .பெரியாழ்வார் தன் தகவின்மையை அறிவித்தல்;
    பெருமாளைப் புகழ்ந்து பாடவும் பேசவும் குறிப்பிட்ட தகுதி வேண்டும். அந்தத் தகுதிகள் தனக்கு உள்ளதா இ;ல்லையா என்று தன்னைத்தானே ஆழ்வார் கேட்டுக்கொள்வதை இக்கட்டுரையில் காணலாம்.
வாக்கும் - நாக்கும் - காக்கையும்
    பெருமாளே, என் வாக்கில் தூய்மை இல்லை, உன்னைப் போற்றத் தகுதியற்றவன். சுவை அறிந்த என் நாக்கு உன்னைத் தவிர மற்றவரைப் பேசாது, ஆனாலும் அஞ்சுகிறேன். இவன் மூடன் என்று கோபப்பட்டாலும் படுக. நாக்கின் பதற்றத்தை என்னால் ஆற்றமுடியாது. காக்கை வாய்ச் சொல்லையும் நற்சொல்லாக அறிவினர் ஏற்பர் என்பர் பெரியாழ்வார்
            வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை
                வாய்க் கொள்ள மாட்டேன்
            நாக்கு நின்னை அல்லால் அறியாது
                நான் அது அஞ்சுவன் என்வசம் அன்று
            மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று
                முனிவாயேனும் என் நாவினுக்கு ஆற்றேன்
            காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்            (நாலா. 433)

வெறுங்கவிதையும் - பொறுப்பது பெரியோர் கடனும்
    கண்ணா உன்னைப் பற்றி, என் பொல்லாத நாக்கினால் வெறுங் கவிதைகளைச் சொன்னேன். புpழை செய்தாலும் தம் அடியவர்களைப் பொறுப்பது பெரியவர் கடமை அல்லவா? திருநோக்கினைத் தவிர வேறொன்றையும் அறியேன். மானுக்கு ஒரு புள்ளி கூடுதலாக இல்லை என்பதை அறிவாய். என்னைப் பொறுத்தருள்க என்பர் பெரியாழ்வார்.
            சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்
            பிழைப்பர் ஆகிலும் தம் அடியார்சொல்
            பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
            விழிக்கும் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால்
            வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
            உழைக்கு ஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்       (நாலா. 434)


வைட்டனவன் என்னும் வன்மை
    திருமாலே, நாரணா என்று அழைப்பதைத் தவிர வேறு நன்மை, தீமைகள் ஒன்றையும் அறியவில்லை இயல்பான சிறுமையால் வஞ்சகச் சொற்களைச் சொல்லிப் புகழமாட்டேன். தொடர்ந்து நமோநாராயணா என்றுரைப்பேன் எனக்கு வைட்டனவன் என்னும் மிடுக்குண்டு. ஏனெனில் உன் கோயிலில் வாழ்ந்து வருவதால் என்பர் பெரியாழ்வார்
            நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
                நாரணா என்னும் இத்தனை அல்லால்
            புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
                புகழ்வான் அன்று கண்டாய். திருமாலே
            உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
                ஓவாதே நமோ நாரணா என்பன்
            வன்மை ஆவது உன்கோயிலில் வாழும்
                வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே     (நாலா. 435)

குடிமையும் அடிமையும்
    பெருமாளே வாமனனாக வந்து ஏழு உலகங்களை அளந்தாய், கம்சனைக் கொன்றாய். ஊன் தந்தை வசுதேவருடைய கால்களில் பூட்டிய விலங்கை முறித்தாய். உனக்கு அடிமையாக என்னை ஏற்றுக் கொள்ள ஐயப்படாதே உடையையும், சோறையும் உன்னிடம் கேட்கமாட்டேன். ஊன் அரச குலப் பெருமையால் அவை தானாகவே எனக்குக் கிடைத்துவிடும் என்பர் பெரியாழ்வார்
            நெடுமையால் உலகேழும் அளந்தாய்
குடிமை கொள்வதற்கு ஐயற வேண்டா
கூறை சோறு இவை வேண்டுவதில்லை
அடிமை என்னும் அக்கோயின்மையாலே
அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை
கோத்த வன்தளை கோள் விடுத்தானே   (நாலா. 436)

மானிடரிலிருந்து உன்பக்கம் சேர்த்துக்கொள்
    பெருமாளிடம் பெரியாழ்வார், உலக வாழ்க்கையிலிருந்து மீட்டு தன்னைப் பெருமாள் பக்தியில் ஈடுபட வைக்குமாறு வேண்டுகிறார். தோட்டம், மனைவி, பசு, தொழுவம், குளம், விளைநிலம், கிணறுமாகிய இவை எல்லாம் உன் திருவடியிலே திரள வகுத்துக் கொண்டிருந்தேன். அதனால் நாட்டிலுள்ள மாதர்களோடு பழகுவது பொறுப்பதற்கு அரியதாக உள்ளது. ஆனால் பலர் இதனை விரும்புகிறார்கள். ஏனக் கொம்புகளால் நிலத்தைத் தாங்கியும், யானையின் கொம்புகளை முறித்தவனே நாட்டு மானிடர் பக்கத்திலிருந்து மீட்டு என்னை உன்பக்கம் இணைத்துக் கொள் என வேண்டுகிறார்.
தோட்டம் இல்லவள் ஆத்தொழ ஓடை
துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கிழே
வளைப்பு அகம் வகுப்பு கொண்டிருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது
நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக்
கோட்டு மண்கொண்ட கொள்கையினானே
குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே   (நாலா. 437)

உண்ணாத நாள்களும் பசியின்மையும்
    பெரியாழ்வார் சில நாட்களில் தனக்குப் பசி ஏற்படுவதில்லை என்றும் அன்றைய நாட்களில் உணவும் உண்ணுவதில்லை என்று கூறுவர். ஏனெனில் அன்றைய நாட்களில் நமோ நாராயணா என்று எண்ணாத நாளாகும். மேலும், நான்கு வேதங்களையும் கூறி அலர்ந்த மலர்களைக் கொண்டு திருவடிகளைப் போற்றாத நாட்களாகும் என்பர். வேதங்களைக் கொண்டும், மலர்தூவியும், நமோ நாராயணா என்ற மந்திரத்தையும் நினைத்து வழிபாட்டால் மட்டுமே உணவு உண்ணும் போக்கைக் காணலாம்.
            உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்க எசூச் சாம
வேத நாள்மலர்க் கொண்டு உன்பாதம்
நண்ணா நாள் அவை தத்துறமாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே (நாலா. 438)

பாம்பு மெத்தையில் கள்ள நித்திரையில் காணமுடியுமா?
    கண்ணா பாம்பை மெ;ததையாகக் கொண்டு, அப்படுக்கையில் கள்ளத் தூக்கம் செய்வதைக் காணமுடியும் என்ற ஆசையில் உள்ளம் மகிழ்கின்றது. வாயில் சொல் வரவில்லை. உடல் மயிர்க் கூச்செறிகிறது. கண்ணீர் வழிந்தோடுகிறது. அதனால் உறக்கத்தைக் கைவிட்டேன். எனவே, கண்ணா உன்னை அடைய வழிகூறுக என்பர் பெரியாழ்வார்.
            வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை
                மெத்தையாக விரித்து அதன்மேலே
            கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
                காணவாங்கொல் என்று ஆசையினாலே
            உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி
                உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள்
            துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன்
                சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே    (நாலா. 439)

நாள்தோறும் போற்ற அருள் செய்
    கோவர்த்தன மலையைக் குடையாக்கி மழையிலிருந்து பசுக்களையும் ஆயர்களையும் காத்தாய், மத அசுரனை அழித்தாய், கசேந்திரனை முதலையின் பிடியிலிருந்து விடுவித்தாய். குவலாயர் பீட யானையைக் கொன்றாய். உன்னை எண்ணுகின்றவர் துயரங்களைப் போக்கினாய். ஆதனால் அடியேன் நாள்தோறும் உன்னைப் போற்றும் அருள் செய்க என்பர் பெரியாழ்வார்.
                வண்ணமால் வரையே குடையாக
                    மாரி காத்தவனே மதுசூதா
                கண்ணனே கரிகோள் விடுத்தானே
                    கரணா களிறு அட்ட பிரானே
                எண்ணுவார் இடரைக் களைவானே
                    எத்தரும் பெருங்கீர்த்தியினானே
                நண்ணி நான் உன்னை நாள்தோறும் ஏத்தும்
                    நன்மையே அருள்செய் எம்பிரானே   (நால. 440)

ஏழையேன் இடரைக் களைக
    பெருமாளே உன்னை வாயாரச் சொல்பவர்களைக் காக்கின்றாய். ஆளரியாய் தோன்றினாய், மூவுலகை அளந்தாய், கசேந்திரனை விடுவித்தாய். திருப்பாற் கடலைக் கடைந்தாய். இப்படி அனைவர்க்கும் அருள் செய்த நீ இந்த ஏழையின் இடரையும் களைக என்கிறார் பெரியாழ்வார்.
            நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள்
                நாதனே! நரசிங்கமது ஆனாய்
            உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்
                ஊழி ஆயினாய் ஆழிமுன் ஏந்திக்
            கம்ப மாகரி கோள் விடுத்தானே
                காரணா! கடலைக் கடைந்தானே
            எம்பிரான் என்னை ஆள உடைத்தேனே   
ஏழையேன் இடரைக் களையாயே (நாலா. 441)

பெருமாள் பெயரைக் கருதி உரைத்தால் வைகுந்தம்
    கண்ணா, நீ மன்மதனுக்குத் தந்தை, பகைவர்க்கு அரிமா, காண்பதற்கு இனிய கருங்குழல் சிறுவன், வாமனன் பச்சை நிறத்தவன், மாதவன், மதுசூதனன் ஆகிய பெயர்களுடன் உள்ளாய். உன்னை இவ்வாறு பாடிய தம் பாசுரங்கள் பத்தையும் கூறினால் வைகுண்டத்தை அடைவர் என்பர் பெரியாழ்வார்
            காமர் தாதை கருதலர் சிங்கம்
                காண இனிய கருங்குழற் குட்டன்
            வாமணன் என் மரகத வண்ணன்
                மாதவன் மதுசூதனன் தன்னைச்
            சேமநன்கு அமரும் புதுவையர் கோன்
                விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும்
            நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
                நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே.    (நாலா. 439)

முடிவுரை
1.    வாக்கும் - நாக்கும் பற்றியும் காக்கை கரைதலையும் உண்மையென நம்புவதைப் போல தன் கூற்றையும் ஏற்க என்கிறார் பெரியாழ்வார்
2.    வெறுங்கவிதையும் பொறுப்பது பெரியோர் கடன் என்பதைக் கொண்டு பெரியாழ்வாரின் அடக்கத்தைக் காணலாம்.
3.    வைட்டனவன் என்னும் பேறு சிறப்புடையது.
4.    குடிகளுக்கு மன்னனிடம் அடிமை என்றால் துன்பம் ஏது. அதுபோல இறைவனிடம் அடிமையானால் அனைத்தும் கிடைக்கும் என்பர் பெரியாழ்வார்.
5.    மானிடர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதிலிருந்து பிரித்து உன்னுடன் சேர்த்துக்கொள் என வேண்டுவதைக் காணலாம்.
6.    நாராயணா மந்திரம் சொல்லாத நாள் சோறு உண்ணாத போக்கைக் காணலாம்.
7.    பாம்பு மெத்தையில் கண்ணனைக் காண விரும்புவதைக் காணலாம்.
8.    நாள்தோறும் போற்ற வேண்டும் என்பதைக் காணலாம்.
9.    எல்லோருக்கும் உதவிய நீ எனக்கும் அருள் எனும் போக்கைக் காணலாம்.
10.    பெருமாள் பெயரை உரைத்தால் வைகுத்தம் கிட்டும்.
               
    18.பட்டினமாம் உயிரைக் காக்கும் பெருமாள்

    உடல் உபாதைகள், நோய்கள், ஆசை, பாசங்கள் அனைத்தும் மனித உடலில் தோன்றகின்றன. இதனால் நல்லதும் கெட்டதும் உண்டாகின்றன. கெட்டவைகள் போக்க வேண்டுமானால் நாராயணனை வணங்கி வீடுபேறுவது மட்டுமே ஒரே வழி. அப்படி வணங்கினால் பட்டினமாம் நம் உயிரை பெருமாள் காப்பான் என்கிறார் பெரியாழ்வார். இதனை இக்கட்டுரையில் காணமுற்படுவோம். 
நெய்க்குடமும் எறும்பும்
    நெய்க்குடத்தை அதன் வாசைன கருதி பயன்பெறும் நோக்கினால் எறும்புகள் அதன்மேல் ஏறி பயன்பெறும். அதுபோல என் உடம்பில் நிலைத்து நிற்கிற நோய்களே நீங்கள் பிழைப்புக்கு வேறு இடம் செல்லுங்கள், ஏனென்றால் பிரமனுக்கு வேதத்தை அருளியவனும், பாம்பு படுக்கையில் இருப்பவனுமான பெருமாள் என் உடலை அவரதாக்கினார். அதனால் என் உயிர் அவனால் காக்கப்பெறுகிறது என்பர் பெரியாழ்வார்.
            நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
                எறும்புகள் போல் நிரந்து எங்கும்
            கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்
                காலம் பெற உய்யப் போமின்
            மெய்க் கொண்டு வந்து புகுந்து
                வேதப் பிரானார் கிடந்தார் (நாலா. 443)

இரவும் பகலும் ஓதுவித்துப் பயிற்றிப் பணிசெய்ய
    பெருமாள் இரவும் பகலும் நல்லறிவைப் புகட்டினான். அதனைச் செயல்படுத்த அடியேனைக் கைக்கொண்டான். ஆதனால் வயிற்றில் சிறை கிடந்த கருவாழ்வு போனது. எமதூதர் கயிற்றால் கட்டி இழுக்க முடியாதபடி செய்தான். கோரைப் பற்களின் மீது உலகைத் தூக்கிக் காத்தவன் பெருமான் என்பர் பெரியாழ்வார்.
            வயிற்றில் தொழுவைப் பிரித்து
                வன்புலச் சேவை அதக்கிக்
            கயிற்றும் அக்கு ஆணிகழித்துக்
                காலிடைப் பாசம் கழற்றி
            எயிற்றிடை மண்கொண்ட எந்தை
                இராப்பகல் ஓதுவித்து என்னைப்
            பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் (நாலா. 445)



சித்திரகுப்தர் எழுத்தும் எமதூதுவர்களின் ஓட்டமும்
    மனிதர்கள் செய்யும் நன்மை, தீமைகளை சித்திரகுப்தன் எழுதி வைப்பார். ஆதனை அடிப்படையாகக் கொண்டு எமதூதர்கள் இறப்பைத் தருவர். அத்துடன் தண்டனையை வழங்குவான். ஆனால் பெருமாளை வணங்கியதால் எமதூதர்கள் ஓடியதாக பெரியாழ்வார் கூறுவர்.
            சித்திரகுத்தன் எழுத்தால்
தென்புலக்கோன் பொறிஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித்
    தூதுவர் ஓடி ஒளித்தார்
முத்துத் திரைகடல் சேர்ப்பன்
 மூதறிவாளர முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன்
பண்டு அன்று பட்டினம் காப்பே (நாலா. 444)

வினைகளால் வந்த நோய்களே – தொடுவது எளிதில்லை
    பெரியாழ்வார் பெருமாளை வணங்கினால் உடல் அவனிடம் சேர்ந்துவிடுகிறது. அதனை அவன் காக்கிறான். அதனால் உடலில் நோய்கள் தொடமுடியாது என்பர். அவமானப்படாமல் நோய்களே பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவர் பெரியாழ்வார்.
            மங்கிய வல்வினை நோய்காள்
உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின்
எளிது அன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான்
சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப் போமின்    (நாலா. 446)

இரண்டறக் கலத்தலும் ஐம்புலன்களின் ஓட்டமும்
    பெருமாளுடன் நான் இரண்டறக் கலந்துவிட்டேன். அதனால் நான் - அவன் என்ற வேறுபாடில்லை. ஐம்புலன்களாகிய குறும்பர்களே என்னைவிட்டு வேறிடம் செல்லுங்கள் என்பர் பெரியாழ்வார். ஏனென்றால் உயிர் அவனால் காக்கப்படுகிறது. 
                மாயன் என் மனத்துள்ளே
 பேணிக் கொணர்ந்து புகுத
வைத்துக் கொண்டன் பிறிதுஇன்றி
வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
 பாணிக்க வேண்டா நடமின்
பண்டு அன்று பட்டினம் காப்பே (நாலா. 447)

நோய்களே – வினைகளே நடமின்
    என்னை விடாமல் துன்புறுத்தும் நோய்களே, என் உடல் பசுக்களை மேய்த்த கண்ணனுடைய திருக்கோயிலாகிவிட்டது. பிறவிக் கடலை உண்டாக்கும் வினைகளே எனக்கு ஒருவிதப் பற்றுதலும் கிடையாது. நடங்கள், என் உயிர் பெருமாளால் காக்கப்படுகின்றது என்று பெரியாழ்வார் நோயையும், வினையையும் விரட்டுவதைக் காணலாம்.
            உற்ற உறுபிணி நோய்காள்
உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
ஆழ்வினைகாள்! உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின்         (நாலா. 448)

பெண்ணாசையிலிருந்துப் பிரித்துக் காத்தான்
    பெண்களின் மீது மோகங்கொண்டு பிரானை வணங்காமல் அழிந்துபோகும் வண்ணம் செய்யாமல் தன் வலிய வினையாலே என்னை மாற்றினான். பட்டினமாகிய உயிர் அவனால் பாதுகாக்கப்படுகிறது.
            கொங்கை சிறுவரை என்னும்
பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு
அழுந்திக் கிடந்து உழல்வேனை
வங்கக் கடல்வண்ணன் அம்மான்
வல்வினை ஆயின மாற்றிப்
பங்கப் படாவண்ணம் செய்தான்         (நாலா. 449)

என் மனக்குற்றங்களை நீக்கி – திருவடி முத்திரைப் பதித்தான்
    பெருமாள் வாழ்வுண்மை உணர்த்தும் ஆசிரியனாய் இருந்து, என் நெஞ்சில் நுழைந்து, என் மனதில் உள்ளக் குற்றங்களை நீக்கி என் தலைமீது தன் திருவடி முத்திரையைப் பதித்து அருளினான். ஆதனால் என் உயிர் அவனால் காக்கப்படுகிறது என்பர் பெரியாழ்வார்
            ஏதங்கள் ஆயின எல்லாம்
இறங்கல் இடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார்
பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம்
புகுந்து என் சென்னித் திடரிற்
பாத இலச்சினை வைத்தார்         (நாலா. 450)

பெருமாளின் படைகளே உடலை காவல் செய்க
    பெரியாழ்வார் தன் உடலை இறைவன் காக்கின்றான் என்பர். ஏனென்றால் தன் உடலில் - உள்ளத்தின் என அனைத்திலும் இறைவன் நீக்கமற இருக்கிறான். அதனால் தன் உடலை, திருவாழியே, வலம்புரியே, குற்றுடைவாளே, சாரங்க வில்லே, செண்டுப் படையே, எட்டுத் திசைகாக்கும் பாலகர்களே, கருடனே, உறங்காமல் எம்பெருமான் திருப்பள்ளியறையாகிய என் உடலை குறிக்கொண்டு காவல் செய்யுங்கள் என்பர் ஆழ்வார்
            உறகல் உறகல் உறகல்
ஒண்சுடர் ஆழியே! சங்கே!
ஆற எறி நாந்தக வாளே!
அழகிய சார்ங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த
எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல்
பள்ளியறை குறிக்கொண்மின்     (நாலா. 451)

முடிவுரை
    இறைவனை வணங்கினால் வீடுபேறு கிடைக்கும். ஆதனால் நோய்கள் - வினைகள் அண்டாது. அதுமட்டுமின்றி இறைவனைக் காப்பதுபோல் இறைவனின் படைகளும் நம்மைக் காக்கும். மனக்குற்றங்கள் அழியும். ஆணவங்கள் அழியும். ஐம்புலன்களும் அடங்கி நல்வழியில் செல்லும். எமபயம் போகும். கண்ணனை வணங்கினால் ஆசிரியனாய் உள்ளத்தில் புகுந்து நல்வழி காட்டுவான் என்னும் முடிவுகளை இவ்வியலில் காணலாம்.
           


               
        பெருமாளுக்கு அடிமையானதும் பெற்ற நன்மையும்

    பெரியாழ்வார் பெருமாளைப் பலவாறு புகழ்ந்து பாடுகிறார். குறிப்பாக பெருமாளுக்குத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தும் ஒப்படைத்து அடிமையானதால் பெற்ற பயன்கள் ஏராளம் என்கிறார். அப்படிப்பட்ட பயன்களை நாமும் அறிந்துகொள்ள இக்கட்டுரையில் முற்படுவோம்.
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
    உலகிலுள்ளோரை எல்லாம் காப்பாற்றும் திருமாலே அடியார்கள் செய்யும் குற்றங்களை நோக்காத திறம் உடையவா என் உயிர், உடல் உன் நினைவாகவே இருக்கின்றேன். ஆதனால் என் உடலில் சக்கரப் பொறிகளை ஒற்றிக்கொண்டு வாழ்கிறேன். அதனால் உன் பாதங்களே என் வாழ்க்கை என்று உறுதியாக இருந்ததைப் பெரியாழ்வார் கூறுகிறார்.
            என்னையும் என் உடைமையையும் உன்
                சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
            நின் அருளே புரிந்திருந்தேன்
                இனி என் திருக்குறிப்பே        (நாலா. 463)

பெரும்பதமும் அறிவை என்னும் அமுத ஆறும்
    கருட ஆழ்வான் மீது வரும் பெருமாளே, வேறு வழியின்றி என் உறுதிப்பாடான உன்னை வழிபட்டதால் ஏற்றுக்கொண்டு அடியவனாகும் பேறு தந்தாய். ஆதனால் பிறவி என்னும் பெரிய கடல் வற்றிப் போனது. மேலும், பெரிய வரம் பெற்ற உணர்வு கிடைத்துள்ளது. இவ்வுயிருடன் உள்ள பாவக்காடு தீயினால் கொளுத்தப்பட்டு வேகின்றதை உணர்கின்றேன். அறிவு என்னும் அமுத ஆறு பெருகிச் செல்வதை என்னுள் உணர்கின்றேன் என்று பெரியாழ்வார் கூறுகிறார்.
            பறவை ஏறு பரம புரடா
                நீ என்னைக் கைக்கொண்டபின்
            பிறவி என்னும் கடலும் வற்றிப்
                பெரும்பதம் ஆகின்றதால்
            இறவு செய்யும் பாவக்காடு
                தீக்கொளீஇ வேகின்றதால்
            அறிவை என்னும் அமுதஆறு
                தலைப்பற்றி வாய்க்கொண்டதே        (நாலா. 464)



பாவங்கள் புதர்களில் ஓடிப்போய் ஒளிந்தன
    மன்னா, குலத்தெய்வமே! என்னுடைய நாயகனே! பெருமாளே! உன்னை அடைந்தால் பெற்ற நன்மைகளை இந்த உலகில் யாரும் பெறவில்லை. பூத உருவம் தெரியாமல், துன்புறுத்தும் துன்பங்கள் போல, மனிதர்களை பாவங்கள் மூச்சுவிடாமல் அமுக்கும். ஐயா, உன்னை வணங்கி பேறு பெற்றதால் இவ்வுயிரோடு இருக்கும் பாவக்காடு தீயால் கொளுத்தப்பட்டு வேகின்றதை உணர்கின்றேன். அறிவு என்னும் அமுத ஆறு தலையின் மீது சென்று செல்வதை உணர்கின்றேன். இத்தகைய நன்மையை எப்படி மறப்பேன் என்கிறார் பெரியாழ்வார்.
            எம்மனா! என் குலதெய்வமே!
                என்னுடைய நாயகனே
            நின்னுளெனாய்ப் பெற்ற நன்மை இவ்
                உலகினில் ஆர்பெறுவார்
            நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
                நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
            சும்மெனாதே கைவிட்டு ஓடித்
                தூறுகள் பாய்ந்தனவே         (நாலா. 465)

உடல் உருகி வாய் திறந்து உன்னை நிறைத்தேன்
    மலை போன்ற தோளும், திருவாழியைக் கையிலும் சாரங்கத்தை வில்லாகவும் உடைய பெருமாளே, பாற்கடலைக் கடைந்து அமுதத்தை கலயத்தில் நிறைத்ததுபோல் உன்னை, உன் அருளை என் உடல் உருக்கி வாயைத் திறந்து தேக்கிக் கொண்டேன். இனி, யமனும் எனது செங்கோல் செல்லுமிடங்களில் அணுக முடியாது என்பர் பெரியாழ்வார்.
            கடல் கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைத்தாற் போல்
உடல் உருகி வாய் திறந்து
மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என்
கோல் ஆடி குறுகப் பெறா    (நாலா. 466)

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
    பொன்னை மாற்றரிய உரைகல்லில் இட்டு உரைப்பது போல் இனியனான உன்னை என் நாவினுள் உட்கொண்டு மாற்று அழியும்படி உரைத்துக்கொண்டேன். அரியவனான உன்னை என் நெஞ்சினுள் வைத்தேன். அடியேனை உனக்கு அடிமையாக்கினேன் என்பர்
                பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிறம் எழ உரைத்தாற் போல
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்    (நாலா. 467)

என் நெஞ்சில் உன் ஆக்கச் செயல்கள்
    பரசுராமனாய் எழுந்தருளிய குணாளா, உன் அரும்பெரும் ஆக்கச் செயல்களை என் நெஞ்சச் சுவரில் அழகு உயிரோவியமாய் எழுதிக்கொண்டேன். என்னை வீட்டு வேறு எங்கும் போக முடியாது என்பார் பெரியாழ்வார்.
            என்னுடைய நெஞ்சகம்பால்
சுவர் வழி எழுதிக்கொண்டேன்
என்னிடை வந்து எம்பெருமான்
இனி எங்குப் போகின்றதே     (நாலா. 468)

உருப்பொலிந்த நாவினேன்
    பனிமலையில் தனது கயல்சின்னத்தைப் பொறித்த பாண்டியன் போல தனது சிவந்த அடிகளை என் தலைமீது பொறித்து என்னை ஆட்கொண்ட பெருமானே யானைத் தந்தங்களை முறித்தும், சாணூர மல்லர்களை அழித்த உன் வீரச் செயல்களை – உன் பெயரை ஒலித்துக்கொண்டே இருப்பதால் என் நாக்கு தழும்பேறியதாயிற்று. நானும் உனக்கே உரியவனானேன் என்பர் பெரியாழ்வார்
            பருப்பதத்து கயல் பொறித்த ஃ பாண்டியர் குலபதிபோல்
            திருப்பொலிந்த சேவடி என் ஃ சென்னியின் மேல் பொறித்தாய்
            மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய்
                என்று என்று உன் வாசகமே
            உருப்பொலிந்த நாவினேனை
                உனக்கு உரித்து ஆக்கினையே      (நாலா. 469)

மற்றவர்களிடம் சிறிதும் என்னிடம் பெரிதும் அன்புடையாய்
    பெருமாளே திருவனந்தாழ்வானிடமும், பெரிய திருவடியிடத்தும் அன்பை மிகச் சிறிதே வைத்து என்னுள்ளத்தில் வந்து இருந்து பேரன்பு கொண்டு வாழ்வித்து வருகிறாய். இத்தகைய நன்றியை நெஞ்சில் வைத்து நெஞ்சுரகி, கண்ணீர் மல்கினேன். என் இடர் களைந்தது என்று பெரியாழ்வார் பெருமாளை நினைந்து போற்றுகிறார்.
                அனந்தன் பாலும் கருடன் பாலும்
ஐது நொய்தாக வைத்து, என்
மனந்தனுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய்;; எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
நேமி நெடியவனே!         (நாலா. 470)

உனக்கு ஏற்ற பல இடமிருக்க என்னுள் நீ
    பெருமாளே உனக்குத் தங்குதவற்கு பாற்கடல், ஒப்பற்ற கடல்கள், வானமும் இருக்க என் மனக்கடலில் தங்கிய பெருமாளே, இது எனக்குக் கிடைத்த பேரருள் என்று பெரியாழ்வார் பெருமாளைப் போற்றுகிறார்.
            பனிக்கடலில் பள்ளி – கோளைப்
பழகவிட்டு ஓடிவந்து, என்
மனக் கடலில் வாழவல்ல
மாய மணாள நம்பி
தனிக் கடலே தனிச்சுடரே
தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்து ஆக்கினையே      (நாலா. 471)

திருப்பாற்கடல் - வைகுண்டம் - துவாரகையை விட்டு என்னுள் நீ
    பெருமாளே, வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும், வைகுண்டமும், மதில்களையுமுடைய துவாரகையும் ஆகிய இடங்களை இகழ்ந்து என் நெஞ்சில் குடிபுகுந்தாய். இது என்மீதுள்ள உன் அன்பைக் குறிக்கும் என்பர் பெரியாழ்வார்.
            வடதடமும் வைகுந்தமும்
மதிற் துவாரபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால்     (நாலா. 472)


               
   
       







No comments:

Post a Comment