Wednesday, 10 June 2015

இறைமையும் பண்பாடும் குறித்த தொன்மங்கள்

                             இறைமையும் பண்பாடும் குறித்த தொன்மங்கள்

ஆலமரத்தின் கடவுளுக்கு பலிச்சோறு
        ஆரமரத்தடியிலே கடவுளுக்குப் படைத்த பலிச்சோற்றைத் தின்ற தொகுதியான விரல்களையுடைய காக்கையானது, துன்பந் தருகின்ற மாலைக் காலத்திலே, அவ்விடம் விட்டு நீங்கித் தன்னுடைய சுற்றமிருக்கும் இடத்தைச் சென்று அடையும். புpரிந்தாரை வருத்தும் படைத்துணையோடு வந்துள்ள, நோயைச் செய்யும் இம்மாலைக் காலமானது நம்மைக் கைவிட்டு, அருமையான பொருளினை விரும்பி பிரிந்து செ;னறுள்ள நம் தலைவனின் நாட்டில் உண்டாவதில்லையா? ஏன்ற தலைவி பிரிவு துன்பம் தங்காது வருந்துவாள்.
        நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து
        உகுபலி அருந்திய தொகுவிரல் காக்கை
        புன்கண் அந்திக் கிளைவயின் செறியப்
        படையொடு வந்த பையுள் மாலை
        இல்லைகொள் வாழி – தோழி – நத்துறந்து
        அரும்பொருட் கூட்டம் வேண்டிப்
        பிரிந்துறை காதலர் சென்ற நாட்டே (நற்றிணை. 343)
மேற்கண்ட சான்றின் மூலம் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், தமிழக மக்களின் தொன்மப் பண்பாடான ஆலமரத்தடியில் இறைவன் உள்ளதையும், அதற்கு உணவ படைத்து காக்கைக்கு இடுவதையம் எடுத்துக்காட்டுவதைக் கடவுள் குடியிரு;ககுமிடம் ஆலமரம் என்பது தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளதைக் காணலாம். மேலும் ஆலமர்ச் செல்வன் என்பது சிவபிரானைக் கறிக்கம். வுழிபட விரும்புவர்கள் ஆலமரத்தடியில் படையலிட்டு போற்றுவது வழக்கம். மேலும், பிற மகளிர் தத்தம் காதலர் வந்த மகிழ்ச்சியினால் காக்கைக்குப் பலியிட்டுள்ளனர். நும் தலைவன் மட்டும் வரவில்லையே என்று தலைவி வருந்துவதைக் காணலாம்.
எழுமீன்
    தலைவனைக் கண்ட தோழி, அவன் உள்ளத்தில் தலைவியை மணந்துகொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தை ஊட்டக் கருதினாள். துலைவிக்குச் சொல்வாள் போல, தலைவனுக்குக் கேட்குமாறு கூறும் பொழுது தமிழ் மக்களின் தொன்மங்களான எழுமீன் பற்றி கூறுகின்றாள் என்று நற்றிணை 231 ஆம் காடல் இளநாகனார் கூறுகின்றார்.
    மாசற விளங்கிய நீலமணியின் நிறத்தை ஒத்த வானத்திடத்தே தோன்றி, உலகத்தாரால் கைகூப்பி தொழப்படுகின்ற மரபினையுடையது எழுமினை மண்டிலம் என்னும் சப்த ரிஷpகள் மண்டிலம். ஆதைப் போல தோன்றுமாறு சிறுவெண் காக்கைகள் பலவும் தத்தம் துணையோடும் கூடியவையாக உள்ளன. இதனைக் காணும்போது துன்பந்தருவதாக உள்ளது என்பள் தோழி. மையற என்பர் ஆசிரியர். மேகங்களால் மறைக்கப்பட்டிராத நட்சத்திரங்கள் தெளிவாகத் தோன்றுகின்றன என்பர். எழுமீன் என்பது ஏழு நட்சத்திரக் கூட்டம் எனப்படும் சப்தரிஷp மண்டிலம். இவர்கள் தம்முடைய தவத்தாலும் ஒழுக்கத்தாலும் விண்மீன்களாகும் உயர்நிலை பெற்றவர். இவர்களைத் தொழுவதால் நன்மையுண்டு என்பது பழந்தமிழரின் நம்பிக்கையாகும். இதனோடு தொடர்;புடையத அருந்ததியைக் குறிக்கும்.
    இன்றுவரை மகளிர் தம் கற்புக்குச் சான்றாக அருந்ததியைக் காட்டி தொழுவதை மரபாகக் கொண்டுள்ளதை அறியலாம். இது திருமணச் சடங்குகளுள் ஒன்றாகவே உள்ளது.
        மையற விளங்கிய மணிநிற விசும்பின்
        கைதொழு மரபின் எழுமீன் போலப்
        பெருங்கடல் பரப்பின் இரும்புறந்தோயச்
        சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும். (நற்றிணை. 231)   
                                   

No comments:

Post a Comment