திருக்குறளில் பெண்ணுரிமைச் சிந்தனைகள்
திருக்குறளில் பெண்கள் இழிவாகக் கருதப்பட்டுள்ளனர்
என்று ஓர் இதழில் சில
குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. திருக்குறளில் பெண்களை யாரும் உயர்த்திக்
கூறமுடியாத அளவுக்கு உயர்த்தியும் - அதே நேரத்தில் தீயவற்றுக்குத்
துணை போகும் வேளையில் தாழ்த்தியும்
கூறியுள்ளதைத் திருக்குறளை ஆழ்ந்து படிப்பவர்கள் உணருவார்கள்
உணர முடியும், திருவள்ளுவர் பெண்களை உயர்வாகக் கூறியுள்ளதைப்
பின் வருமாறு வகைப்படுத்தலாம். அவை,
1. நல்லதாய் 2. நல்லமனைவி 3. நல்ல காதலி
நல்லதாய்
தாய் என்று சொன்னால்
பத்து மாதம் சுமந்து பிள்ளையைப்பெறுவதனால்
மட்டும் உயர்புடைவர்களாகக் கருதப்பட மாட்டார். அவள் வயிற்றில் பிறந்த
குழந்தை அறிவறிந்த நன்மக்கட் பேறுடையதாக இருக்கவேண்டும் என்று கூறுவர் திருவள்ளுவர்.
அறிவுடைய குழந்தையைப் பெற வேண்டிய தாய்
பண்புள்ளவளாக ஒழுக்கமுள்ளவளாக கற்றறிந்த சான்றோராக இருந்தால் மட்டுமே அவளின் உடல்
திசுக்கள் பரம்பரை அணுக்களின் - இரத்தங்களின்
வழி அவளுக்குப் பிறந்த குழந்தை அவளைப்
போன்று இருக்கும்.
பண்புடைய தாய்க்குப் பிறக்கும் குழந்தை சான்றோனாக வருவது
தடையாக இராது. தன் மகன்
அறிவுடையவனாக விளங்குகின்றான் என்பதைத்தான் பார்த்து – கேட்டது மட்டுமின்றி, பலரும்
புகழ்வதோடு அவையில் அறிவு சார்ந்த
மூத்தோர்கள் புகழ்வதைக் கண்டும் - காதால் கேட்டும் தான்
பெற்றெடுத்த அந்தக் காலத்தினும் பெரிதும்
மகிழ்வாள். இதனையே திருவள்ளுவர்,
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய்' (குறள்.
69)
என்கிறார்.
இதற்குப் பொருள் கூறும்போது பிறர்
சொல்ல கேட்ட தாய் என்று
கூறுவர். இது முரண்பாடுடையது என்பதை
மேற்கண்ட சான்றுகளினால் அறியலாம்.
வறுமையிலும்
அறம்
ஒரு தாய் தன்
மகன் அறிவுள்ளவனாக சான்றோனாக இருந்தான் என்று கொள்வோமானால் அவனுக்கு
வறுமை வராது. அறிவுடையவன் உழைத்து
உண்ணுவானே தவிர பிறர் உழைப்பில்
உண்ண மாட்டான். அவ்வாறு உழகை;காமல்
வறுமையில் வாடுவானேயானால் அவனின் தாய் பிறர்
போலக்கருதுவாள். அவள் உண்மையாகப் பாதிக்கப்பட்டு
அறத்தின்வழி வறுமையில் வாடுவானேயானால் அவனின் தாய் மகனைப்;
போற்றுவதோடு பல உதவிகளைச் செய்து
பாதுகாப்பாள். இதனை வள்ளுவர், இதனை
வள்ளுவர்,
'அறஞ்சாரா நல்குரவு
ஈன்றதா யானும்
பிறன்போல
நோக்கப் படும் (குறள். 1047)
என்று
கூறுகிறார்.
கள்ளுண்ணல்
எதிர்ப்பு
பத்து மாதம் சுமந்து
பெற்றதாய் தன் மகன் துடிக்கும்
பொழுது துடிப்பாள். தவறு செய்தால் தண்டிப்பதுபோல
நடிப்பாள். தன் குழந்தையை – மக்களை
அடிக்கவும் மாட்டாள். அப்படிப்பட்ட தாயைத் திருவள்ளுவர் சான்றோருடன்
ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். அனைத்தையும் பொறுக்கும் தாயின் முன் கள்
குடித்து மகன் வந்தான் என்றால்
அவளுக்குப் பெருந்துன்பம் ஏற்படும். அவ்வாறாயின் குற்றங்களை வெறுக்கும் சான்றோர் முன் களித்தல் என்னவாகும்?
என்பதை,
'ஈன்றாள் முகத்தேயும்
இன்னாதால் என்மற்றுச்
சான்றோர்
முகத்துக் களி' (குறள்.
923)
என்கிறார்.
பசியிலும்
தூய்மை
பெற்றதாய் பசியோடிருப்பதை எந்த மக்களும் பார்த்துக்
கொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் தாயில்லையென்றால் இப்பூவுலகில் தோன்றியிருக்க முடியுமா? திருவள்ளுவர் பெற்றதாய் பசியோடிருப்பதை ஏற்காதவர். ஆனால் சான்றோர் பழிக்கும்
வினை செய்து அந்தப் பசியைப்
போக்க நினைக்காதே, அறத்தின் வழியில் பெற்ற பொருளைக்
கொண்டு பசியாற்று என்று அறிவுரை கூறுகிறார்.
இதனை,
'ஈன்றாள் பசிகாண்பான்
ஆயினும் செய்யற்க
சான்றோர்
பழிக்கும் வினை' (குறள்.
656)
என்ற
குறளிலே குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட சான்றுகளின் வழி சில முடிவுகளைக்
கூறலாம்.
1. திருவள்ளுவர்
தம் குறட்பாக்களில் அறிவுள்ள – பண்புள்ள – ஒழுக்கமுள்ள தாணை படைத்துக் கூறியுள்ளார்.
2. மக்களின்
வறுமையில் கூட அறத்தைப் பார்க்கும்
தாயாகப் படைத்துள்ளார்.
3. கள்ளுண்ணும்
மக்களை எதிர்க்கும் தாயாக விளங்குவதைக் காண
முடிகிறது.
4. பசியிலும்
தூய்மை காணும் தாய் - மக்கள்
உறவை இனங்காண முடிகிறது.
கட்டுரைத்
தொகுப்பு – 2
திருக்குறளில் பெண்களுக்குச் சிறப்பு நிலையினைக் கொடுத்துள்ளார்
திருவள்ளுவர். தாழ்வாக - இழிவாகக் கூறியுள்ளார் என்று சில குற்றச்சாட்டுகளும்
வந்து கொண்டிருக்கின்றன. திருக்குறளை முழுமையாகத் திருவள்ளுவரின் நோக்கத்தோடு காணும் பொழுது இதற்கு
மறுப்புகள் கிடைக்கின்றன.
தெய்வந்தொழாள்
'தெய்வந்தொழாள்
கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப்
பெய்யும் மழை'
என்னும்
குறளில் பெண்கள் தம் கணவனை
தன்னைக் காத்து, குடும்பத்தைக் காத்து,
சோர்விலாத பெண்ணாக இருக்க வேண்டும்
எனக் குறிப்பிடுகின்றது என்று சிலர் கூறுகின்றனர்.
மனைக்குத் தக்க மாண்புடையவளாகி, தன்னைக்
காத்து, குடும்பத்தைக் காத்து, சோர்விலாத பெண்ணாக
இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். மேலும் 'சிறைகாப்பு| என்ன
செய்யும்? என்று ஆண் சமூகத்திற்கு
எதிர்க்குரல் எழுப்புகிறார். மகளிரின் நிறை காக்கும் காப்பேதலை
என்று விடையும் தருகிறார். பெண்ணை வீட்டில் அடைத்து
வைக்கும் செயலை 'சிறை' என்று
கோபம் கொண்டு கூறியவர். மேலும்,
பெண்ணின் விடுதலையைப் பாருக்கு முதன் முதலில் உணர்த்தியவர்
வள்ளுவரே. ஊலகில் அந்தக் காலத்தில்
வள்ளுவர்போல் யாரும் கூறாத முதல்
பேச்சு இதுதான்.
கணவன் - மனைவி இருவரின்
உடன்பாடு, மன ஒற்றுமை, கருத்து
வேறுபாடில்லாமை, காதல், அனைத்தையும் ஒரு
முகப்படுத்தியே தெய்வத்தைக் கூட தொழாள் தன்
கணவனையே தெய்வமாக நினைப்பாள். வாழ்வாள். ஆவள் பெய்னெச் சொன்னால்
பெய்யும் மழை என்று அவளின்
ஒருமன கற்புக்கு வலிமையும் சேர்க்கிறார். ஆக மனைவி தெய்வத்தைத்
தொழக்கூடாது. ஆக மனைவி தெய்வத்தைத்
தொழக்கூடாது என்று பொருள் அல்ல.
கடவுள் வாழ்திலே கடவுள் வணக்கத்தையும், அதனை
வணங்காவிட்டால் உறுப்புகளினால் பயனில்லை என்று வலியுறுத்தியும் கூறியுள்ளார்
திருவள்ளுவர்.
மேற்கண்ட சான்றிலிருந்து திருவள்ளுவர், மனைவி – கணவனுடன் ஒருமனப்
பெண்டிராக வாழ வேண்டும் என்பதற்காக
'தெய்வந்தொழாள்' என்று கூறினார் என்பதை
எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
இருமனப்
பெண்டிர்
கற்புடைய ஒழுக்கமுள்ள மகளிரை ஒரு மனப்பெண்டிர்,
என்றும் தீய ஒழுக்கமுடைய பெண்களை
இருமனப் பெண்டிர் என்றும் கூறுகின்றார். மது,
மாது, சூது என்ற மூன்று
தீய பழக்கங்களும் சமூகத்தில் இருக்கக் கூடாது என்ற முதல்
குரல் கொடுத்தவரே வள்ளுவர் தான்,
'இருமனப் பெண்டிரும்
கள்ளும் கவரும்
திருநீக்கப்
பட்டார் தொடர்பு'
என்ற
குறளில் பொருளில்லாதவரின் தொடர்பில் கள்ளும், கவறும், இருமனப்பெண்டிரும் இருப்பர்
என்கிறார். திருவள்ளுவர் பெண்களை இழித்துக் கூறுகிறார்
என்று பொருள் கொள்ளக் கூடாது.
ஆவர் இருமனப் பெண்டிரைத்தான் எதிர்த்து,
குறை கூறினாரே தவிர ஒருமனப் பெண்டிரை
அல்ல.
ஒருமனப் பெண்டிரைப்போல ஒழுக
வேண்டும் என்று ஆணுக்கு அறிவுரை
கூறுகிறார் வள்ளுவர். ஆண் சமுதாயத்திற்கு ஒரு
மனப்பெண்டிரை எடுத்துக்காட்டாகக் கூறி பெண்ணைச் சமூகத்தில்
சிறப்பித்துக் கூறுவதை யாரும் மறக்க
மறுக்க முடியாது.
கட்டுரைத்
தொகுப்பு – 3
சான்றோன்
திருவள்ளுவர் பெண்களைத் தாழ்த்திக் கூறியுள்ளார் என்ற குற்றசாட்டுகளுள் ஒன்று
சான்றோன் என்னும் தொடர். இத்தொடர்
வழி சான்றோர் எனக் கூறாமல் சான்றோன்
என்று ஆடவரை மட்டுமே கல்வி
– கேள்வியுள்ளவர்களாகத் திருவள்ளுவர் படைத்துள்ளார் என்பது ஒரு சிலரின்
ஐயம்.
சான்றோன்
சான்றோன் என்ற தொடரில் இரு
வினாக்கள் உண்டு. பெற்ற தாய்
தன் மகனை அறிவுடைய சான்றோன்
என கேட்கவே முடிந்தது என்பதனால்
கல்வி அறிவு அற்றவள் எனக்
கூறுவதும் உண்டு. மற்றொன்று மகளிரைவிட
மகன்களையே கல்வி அறிவுடையவர்களாகப் பெற்றோர்கள்
உருவாக்கினார்கள் என்று கூறுவதும் உண்டு.
தாய்க்கல்வி
திருவள்ளுவர் கூறுகின்ற தாய் கல்வி அறிவுடையவளாகவும்
- மாட்சியமையுடையவளாகவும்
- சிந்தித்து வாழ்பவளாகவும் அமைந்துள்ளதைத் திருக்குறளின் வழி நாம் காணலாம்.
மனைக்குத் தக்க மாண்புடையவளாகவும், தன்
கணவனின் வளத்தைப் பெருக்கபவளாகவும் சிறை காக்கும் காப்பை
விட நின்ற காப்பதே தலையாயது
என்று எண்ணுகின்ற தாய்மையுடைய பெண்ணுக்குக் கல்வி அறிவு இல்லை
என்பது முறையுற்றதாகவே அமைகிறது. மேலும் தம்மின் தம்மக்கள்
அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்று தன்
மக்கள் அறிவுடைமையினால், வாழுகின்ற நாட்டுக்குப் பெருமை என எண்ணுகின்ற
தாய் கல்வியறிவுடையவளாகத்தான் இருப்பாள்.
'கேட்டதாய்' என்பதைக் கொண்டு வள்ளுவவர் கூறும்
தாய் கல்வியறிவு அற்றவள் என்று முடிவுக்கு
வரக்கூடாது. ஒரு தாய் பத்துமாதம்
சுமந்து பெற்றெடுக்கின்ற இன்பம் அளவிடற்கரியது. அதனினும்
இன்பம் தம் மக்கள் அறிவுடைமை
என்று பிறர் கூறக்கேட்பதாகும். தானே
தன் மக்களை அறிவுடையவன் என்பதை
விட சான்றோர் அவையில் பாராட்டுவதைக் கேட்கின்றபொழுது
அளவிடற்கரிய இன்பம் அடைகிறாள் தாய்.
தன் கணவனின் செல்வ
வளத்தைப் பெருக்குவதிலும், அவன் நலத்தில் அக்கறையுள்ள
இந்தத் தாய் தன் மக்களின்
கல்வியறிவுவூட்டுகின்ற கடமையில் இருந்திருப்பாள் என்பதை மறந்துவிடக்கூடாது.
மக்கள்
கல்வி
பிறக்கின்ற குழந்தை 'நன்மக்கட்பேறாக' இருக்க வேண்டும் என்ற
வள்ளுவர் கூறுகின்றார். மேலும் 'அறிவறிந்த மக்கட்
பேற்றினையே' விரும்பகின்றார். இவற்றுள் ஆண் குழந்தை, பெண்
குழந்தை என்ற பாகுபாட்டை காணமுடியாது.
எனவே குழந்தைகள் கல்வியறிவுடனும், ஒழுக்கமுடனும் இருக்க வேண்டும் என்ற
சிந்தனை ஒன்றையே திருக்குறளில் காணலாம்.
சான்றோன் என்பதில் ஆண்பாற் பெயரையே கூறப்படுகிறது.
பெண்பாற் பெயர் இடம் பெறவில்லை
என்பது பலருடைய வினா. திருவள்ளுவர்
பல்வேறு இடங்களில் ஆண்பாற் பெயரை முதன்மைப்படுத்திக்
கூறியுள்ளதைப் பல குறட்பாக்களில் காணலாம்.
அவை முறையே,
'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்' (301)
'பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல்' (196)
'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை' (476)
'கொல்லான் புலாலை, மறுத்தானை (260)
'ஐயப்படாது அகத்தது உணர்வானை (702)
'அழுக்காறுடையான் (135)
'உடுக்கை இழந்தவன் (788)
'அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்
எஞ்ஞான்றுஞ்
திறனறிந்தான்' (635)
'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
அவனை
இகல்வெல்லல் (647)
'தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான்' (318)
மேற்கண்ட குறட்பாக்கள் அனைத்தும் ஆண்பால் குறித்தே வருகின்றன.
ஆனாலும் ஆண் - பெண் இருவர்க்கும்
பொதுவான கருத்திலேயே வருவதை எண்ணிப்பார்க்க முடிகிறது.
திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில் ஆணுக்கும்
பெண்ணுக்கும் பொதுமையாகவே கூறியுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. சான்றாண்மை
போன்ற சிறந்த பண்புகளும் ஆண்
- பெண் இருவர்க்கும் பொதுவாகவே கூறப்பட்டுள்ளதைக் குறள்களின் வழி தெற்றென உணரலாம்.
மேற்கண்ட சான்றுகளின் வழி திருவள்ளுவர் கூறும்
தாய் கல்வி அறிவுடையவளாக இருக்கின்றாள்
என்பதையும், வள்ளுவர் காட்டும் மக்கள் ஆண்-பெண்
இருவரும் கல்வியிலும் அறிவிலும் சிறந்து ஓங்குவதற்கு பெற்றோர்கள்
துணையாக இருந்திருந்தார்கள் என்பதையும், ஆணுக்கு மட்டும் கல்வியறிவைக்
கூறி ஆணாதிக்கச் சிந்தனை வள்ளுவரிடத்தில் காணப்படுகிறது
என்பது முரணானது என்பதையும் அறியமுடிகிறது.
கட்டுரைத்தொகுப்பு
– 4
நல்ல
மனைவியின் குணநலன்கள்
பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த தாய், குழந்தை முதல்
மணமகளாகும் வரை வளர்த்த தந்தை,
அன்புடைய சகோதரன், சகோதரி, தான் பிறந்து
வளர்ந்து ஓடி ஆடி, சுதந்திரமாக
பறந்த வீடு, நண்பர்கள் அனைவரையும்
பிரிந்து முன்பின் தெரியாத அல்லது சில
மாதங்களில் காதலித்தவனுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கைத் துணையாக வரும் பெண்
நல்ல மனைவியாகிறாள்.
தன்னையும்-பிறரையும் எண்ணிய இவள், இன்றைக்கு
கணவனையும்- இல்லத்திலுள்ள மாமன் - மாமி – சுற்றத்தினர்
அனைவரையும் நினைக்கிறாள்.
திருமணம் முடிந்ததும் கணவனுடன் வாழ புறப்படும் மனைவி
இதுவரை இருந்த நிலை மாறி
சில குணங்கள் - பண்புகளை உள்ளத்தில் உருவாக்கிக் கொள்கிறாள்.
திருவள்ளுவர் மனைவிக்குரியவற்றை தம் திருக்குறளிலே அழகாக
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கூறியுள்ளவற்றை இன்றைக்குக்
காணும்பொழுது மனம் பேருவகை அடைகின்றது.
நல்ல மனைவியைப் பற்றி
திருவள்ளுவர் கூறியுள்ளதை மூன்று பிரிவுகளாகக் கூறலாம்.
அவை 1. முனைவியின் குணநலன். 2.மனைவியின் குறிக்கோள் 3. குணவனின் நல்ல துணை என்பதாகும்.
குணநலன்
மனைவி குணநலனை முதற்கொண்டே
அந்த குடும்பத்தில் மகிழ்வு இருக்கும். அனைவரிடமும்
சிரித்துப் பேசி, உறவுகளை ஏற்படுத்திக்
கொண்டால் அவள் பிறந்த வீட்டினைக்
காட்டிலும் புகுந்த வீடு சிறப்பும்
- மகிழ்வையும் - அன்பையும் தரும். எனவே அவள்
சிரித்து மகிழும் குணநலனையுடையவளாக இருக்க
வேண்டும்.
இனிய வார்த்தைகளால் தான்
புகுந்த வீட்டிலுள்ளவர்களின் இதயத்தில் இடம் பெறவேண்டும். ஆக
மனைவி பேசுவதிலும், உறவு கொள்வதிலும் மட்டுமின்றி
உதவி செய்பவளாகவும் - சோர்வின்றி உழைக்கக்கூடிய சுறுசுறுப்புள்ளவளாகவும் - குணத்தையும் உடையவளாக இருக்க வேண்டும்.
மனைக்குத் தக்க மாண்புள்ள சிரித்துப்
பேசுதல், இனியவை கூறல் போன்றவற்றை
உள்ளடக்கியே
'மனைத்தக்க மாண்புடையாள் ஆகி' (குறள். 51)
என்று
மனைவிக்குரிய குணநலனைக் கூறுகிறார்.
மேலும், சோர்வு இன்றி
சுறுசுறுப்புடன் மனைவி இருக்க வேண்டும்
என்பதைத் திருவள்ளுவர்,
'சோர்வு இலாள் பெண்' (குறள்.56)
என்று
கூறுகிறார்.
மேற்கண்ட சான்றுகளின் வழியே நல்ல குணநலன்களையுடைய
மனைவியை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகின்றது.
குறிக்கோள்
வள்ளுவர் காட்டும் மனைவி சில குறிக்கோள்களை
உடையவளாக இருக்க வேண்டும்.
மனைமாட்சி
தன் குடும்பச் சிறப்பில்
கண்ணும் கருத்தும் கொண்டவளாக மனைவி அமைய வேண்டும்.
அவளால் அந்தக் குடும்பம் சிறப்பு
பெற வேண்டுமெனில் குடும்ப வளத்தில் அக்கறையுள்ளவளாகவும்,
சிறக்க வைக்க வேண்டும் என்ற
குறிக்கோளையுடையவளாகவும் மனைவி அமைய வேண்டும்.
இதனை,
'மனைமாட்சி இல்லால்கண் இல்லாயின் வாழ்க்கை
எனை
மாட்சித்தாயினும் இல்' (குறள். 52)
என்று
வள்ளுவர் கூறுகிறார். மனைவியின் பண்புகளாலும், அவளின் குடும்ப வளர்ச்சியின்
அக்கறையில் கட்டுப்பாடுடன் - ஒழுக்கத்துடனும்-அறத்துடனும் வாழும் பொழுது குடும்பம்
மாட்சியுடையதாக அமையும்.
மேற்கண்ட சான்றின் வழி மனைவி மனைக்குத்
தக்க மாட்சியை உருவாக்கும் எண்ணமுடைய – குறிக்கோளுடைய மனைவியாக இருக்க வேண்டும் என்று
வள்ளுவர் இனங்காட்டுவதைக் காணமுடிகிறது.
கற்பு
மனைவி கற்பு என்னும்
திண்மையுடையவளாக இருக்க வேண்டும். கற்பு
என்னும் மனக்கட்டுபாடு உடைய மனைவியைவிடப் பெருமைக்குரியன
வேறு எவை உள்ளன? என்பதை
வள்ளுவர்
'பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்புஎன்னும்
திண்மைஉண்
டாகப் பெறின்' (குறள். 54)
என்கிறார்.
இவற்றிலிருந்து கற்பைக் காக்கும் உறுதியுடைய
– குறிக்கோளுடையவளாக மனைவி அமைய வேண்டும்
என்பதை அடையாளங் காண முடிகிறது.
புகழ்
முனைவி புகழ் உடைவளாக
இருக்க வேண்டும். அதனால் கணவணுக்கு புகழ்
உண்டாகும். எனவே, மனைவியானவள் தன்
செயல் - பண்பு மூலம் புகழுடன்
இருக்க வேண்டும் என்னும் குறிக்கோளினை உள்ளத்தில்
அமைத்துக் கொள்ள வேண்டம். இல்லையெனில்
கணவன்-தன்னை இகழ்பவர் முன்
சிங்கம் போன்ற பெருமிதமாக நடக்க
முடியாது என, திருவள்ளுவர்,
'புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல்
பீடு நடை' (குறள். 59)
என்ற
குறளில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
கணவனின்
துணை
மனைவி முதலில் தன்னைக்
காத்துக் கொள்ள வேண்டும். பின்னர்
தன் கணவனின் நலத்தில் அக்கறை
கொண்டு அவனைப் பாதுகாக்க வேண்டும்.
இதனை,
'தற்காத்துத் தற்கொண்டான் பேணி' (குறள். 56)
என்று
வள்ளுவர் கூறுவதனைக் காணலாம்.
கணவனின் வினையாற்றுகின்ற செயல்பாடுகளில்
பங்குகொண்டு, அவன் வளத்தினைப் பெருக்கும்
துணையாக மனைவி அமைய வேண்டும்
என்பதை,
'.............
தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' (குறள். 51)
என
வள்ளுவர் கூறுகிறார்.
மேற்கண்ட சான்றுகளின் வழியே மனைவி நல்ல
குணநலன்களையுடையவளாகவும் நல்ல குறிக்கோளை உடையவளாகவும்,
கணவனின் நல்ல துணையாகவும் வள்ளுவர்
கூறியுள்ளதைக் காண முடிகின்றது.
திருக்குறளில்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
நல்ல
மனைவியின் குணநலன்கள்
பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்,
குழந்தை முதல் மணமகளாகும் வரை
வளர்த்த தந்தை, அன்புடைய சகோதரன்,
சகோதரி, தான் பிறந்து வளர்ந்து
ஓடி அடி சுதந்திரமாக பறந்த
வீடு, நண்பர்கள் அனைவரையும் பிரிந்து முன்பின் தெரியாத அல்லது சில
மாதங்களில் காதலித்தவனுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கைத் துணையாக வரும் பெண்
நல்ல மனைவியாகிறாள்.
தன்னையும் - பிறரையும் எண்ணிய இவள், இன்றைக்கு
கணவனையும் - இல்லத்திலுள்ள மாமன் - மாமி – சுற்றத்தினர்
அனைவரையும் நினைக்கிறாள். திருமணம் முடிந்ததும் கணவனுடன் வாழ புறப்படும் மனைவி
இதுவரை இருந்த நிலை மாறி
சில குணங்கள் - பண்புகளை உள்ளத்தில் உருவாக்கிக் கொள்கிறாள்.
திருவள்ளுவர் மனைவிக்குரியவற்றை தம் திருக்குறளிலே அழகாக
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு தம் திருக்குறளிலே அழகாக
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கூறியுள்ளவற்றை இன்றைக்குக்
காணும்பொழுது மனம் பேருவகை அடைகின்றது.
நல்ல மனைவியைப் பற்றி திருவள்ளுவர் கூறியுள்ளதை
மூன்று பிரிவுகளாகக் கூறலாம். அவை, மனைவியின் குணநலன்
மனைவியின் குறிக்கோள், கணவனின் நல்ல துணை
என்பதாகும்.
குணநலன்
மனைவி குணநலனை முதற்கொண்டே
அந்த குடும்பத்தில் மகிழ்வு இருக்கும். அனைவரிடமும்
சிரித்துப் பேசி, உறவுகளை ஏற்படுத்திக்
கொண்டால் அவள் பிறந்த வீட்டினைக்
காட்டிலும் புகுந்த வீடு சிறப்பும்
- மகிழ்வையும் - அன்பையும் குணநலனையுடையவளாக இருக்க வேண்டும்.
இனிய வார்த்தைகளால் தான்
புகுந்த வ Pட்டிலுள்ளவர்களின்
இதயத்தில் இடம் பெற வேண்டும்.
ஆக மனைவி பேசுவதிலும், உறவு
கொள்வதிலும் மட்டுமின்றி உதவி செய்பவளாகவும் - சோர்வின்றி
உழைக்கக்கூடிய சுறுசுறுப்புள்ளவளாகவும் - குணத்தையும் உடையவளாக இருக்க வேண்டும்.
'மனைக்குத் தக்க மாண்புகளான சிரித்துப்
பேசுதல், இனியவை கூறல் போன்றவற்றை
உள்ளடக்கியே
'மனைத்தக்க மாண்புடையாள் ஆகி' (குறள்.
51)
என்று
மனைவிக்குரிய குணநலனைக் கூறுகிறார்.
மேலும், சோர்வு இலாள்
பெண்' (குறள்.
56)
என்று
கூறுகிறார்.
மேற்கண்ட சான்றுகளின் வழியே நல்ல குணநலன்களையுடைய
மனைவியை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகின்றது.
குறிக்கோள்
தன் குடும்பச் சிறப்பில்
கண்ணும் கருத்தும் கொண்டவளாக மனைவி அமைய வேண்டும்.
அவளால் அந்தக் குடும்பம் சிறப்பு
பெற வேண்டுமெனில் குடும்ப வளத்தில் அக்கறையுள்ளவளாகவும்,
சிறக்க வேண்டும் என்ற குறிக்கோளையுடையவளாகவும் மனைவி அமைய
வேண்டும். இதனை,
'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
ஏனை
மாட்சித்தாயினும் இல். (குறள்.
52)
என்று
வள்ளுவர் கூறுகிறார். மனைவியின் பண்புகளாலும், அவளின் குடும்ப வளர்ச்சியின்
அக்கறையில் கட்டுப்பாடுடன் - ஒழுக்கத்துடனும் - அறத்துடனும் வாழும் பொழுது குடும்பம்
மாட்சியுடையதாக அமையும்.
மேற்கண்ட சான்றின் வழி மனைவி மனைக்குத்
தக்க மாட்சியை உருவாக்கும் எண்ணமுடைய – குறிக்கோளுடைய மனைவியாக இருக்க வேண்டும் என்று
வள்ளுவர் இனங்காட்டுவதைக் காணமுடிகிறது.
கற்பு
மனைவி கற்பு என்னும்
திண்மையுடையவளாக இருக்க வேண்டும். கற்பு
என்னும் மனக்கட்டுப்பாடு உடைய மனைவியைவிடப் பெருமைக்குரியன
வேறு எவை உள்ளன? என்பதை
வள்ளுவர்,
'பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பு என்னும்
திண்மை
உண்டாகப் பெறின்' (குறள்
- 54)
என்கிறார்.
இவற்றிலிருந்து கற்பைக் காக்கும் உறுதியுடைய
– குறிக்கோளுடையவளாக மனைவி அமைய வேண்டும்
என்பதை அடையாளங் காண முடிகிறது.
புகழ்
மனைவி புகழ் உடையவளாக
இருக்க வேண்டும். அதனால் கணவனுக்கு புகழ்
உண்டாகும். எனவே, மனைவியானவள் தன்
செயல் - பண்பு மூலம் புகழுடன்
இருக்க வேண்டும். இல்லையெனில் கணவன் - தன்னை இகழ்பவர்
முன் சிங்கம் போன்று பெருமிதமாக
நடக்க முடியாது என, திருவள்ளுவர்,
'புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல்
பீடு நடை' (குறள்.
59)
என்ற
குறளில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
கணவனின்
துணை
மனைவி முதலில் தன்னைக்
காத்துக் கொள்ள வேண்டும். பின்னர்
தன் கணவனின் நலத்தில் அக்கறை
கொண்டு அவனைப் பாதுகாக்க வேண்டும்.
இதனை,
'தற்காத்துத் தற்கொண்டான் பேணி' (குறள்.
56)
என்று
வள்ளுவர் கூறுவதனைக் காணலாம்.
கணவனின் வினையாற்றுகின்ற செயல்பாடுகளில்
பங்குகொண்டு, அவன் வளத்தினைப் பெருக்கும்
துணையாக மனைவி அமைய வேண்டும்
என்பதை,
'................
தற்கொண்டான்
வளத்தக்கான்
வாழ்க்கைத் துணை' (குறள்.
51)
என
வள்ளுவர் கூறுகிறார்.
மேற்கண்ட சான்றுகளின் வழியே மனைவி நல்ல
குணநலன்களையுடையவளாகவும் நல்ல குறிக்கோளை உடையவளாகவும்,
கணவனின் நல்ல துணையாகவும் வள்ளுவர்
கூறியுள்ளதைக் காண முடிகின்றது.
கட்டுரை
– 5
திருவள்ளுவர் நல்ல தாய், நல்ல
மனைவியைக் கூறியதைப் போன்று நல்ல காதலியையும்
தம் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். பல்லாண்டு காலமாக காதல் பற்றி
பல இலக்கியங்கள் பேசுகின்றன. இன்றும் பேசிக்கொண்டு தான்
உருவாகுகின்றன. ஆனால், வள்ளுவர் காட்டிய
காமத்துப்பாலில் காதல் ஆழமாக – உயிரோட்டமாக
உள்ளதை ஆழ்ந்து படிக்கின்ற போதுதான்
அறியமுடியும்.
நல்ல
காதலி
காதல் என்பது பருவத்தின்
உணர்வு, இக்காலத்தில் பெற்ற தாய், தந்தையரைக்
காட்டிலும் காதலன் மீது, காதலிக்கும்
பெண்ணுக்கு ஆழமான அன்பிருக்கும். இருக்கவேண்டும்.
இருந்தால்தான் அவர்களின் காதல் புனிதமாகும். புனிதமான
பிறகு எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது.
இந்தக் கோட்பாடு திருக்குறளில் காணும் காதலியிடம் பல்வேறு
குறட்பாக்களில் உள்ளது.
எப்போதும்
தலைவனின் நினைவு
காதலி எப்போதும் தலைவன்
நினைவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
அவளின் நெஞ்சில் பிற ஆடவரின் காம
உணர்வுகள் இடம்பெறாது. இக்கால இலக்கியங்கள் சூழ்நிலைகளையும்,
காலத்தையும், இடத்தையும் கருத்தில் கொண்டு பெண்டிர். துவறான
பாதையில் செல்வதைக்கூட நியாயப்படுத்துகின்றன. ஆனால், திருக்குறளில் உறுதி
கொண்ட காதலியைப் படைத்து, கற்புடைய மாதராக உருவாக அடித்தளம்
அமைத்துப் படைத்துள்ளதை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே
அறிய முடியும். மேலும், 1. இமைக்கும்போது நினைத்தல் 2. ஒப்பனை செய்யும்போது நினைத்தல்,
3. உண்ணும்போது நினைத்தல் என மூன்று வகைப்
பிரிவுகளாகத் திருக்குறள் கூறும் காதலி காதலனின்
நினைவாக உள்ளாள்.
இமைக்கும்போது
நினைத்தல்
கண் இமைப்பது இயல்பு,
இது உடலின் இயற்கையான செயல்பாடு.
ஆனாலும், திருக்குறளில் வரும் காதலியோ, என்
காதலன் என் கண்ணுள்ளேயே இருக்கிறார்.
இமைத்தாலும் வெளியே செல்வது இல்லை
என்கிறாள். இவளின் நினைப்பு காதலன்
தன்னை விட்டுப் பிரியான் என்ற உறுதியாகும். இதனை,
கண்ணுள்ளின் போகார் (குறள்.
1126)
என்னும்
குறளின் வழிகாணலாம். மேலும், கண் இமைக்கலாம்
என்றால் மறைந்துவிடுவார் என்பதற்கு அஞ்சி இமைப்பதே கிடையாது.
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் (குறள். 1129)
என்கிறாள்.
மேற்கண்ட குறட்பாக்களின் வழி, வள்ளுவக்காதலி கண்
இமைக்கும் போதும் தன் காதலனின்
நினைவாக இருந்துள்ளதைக் காண முடிகிறது.
ஒப்பனையின்போது
நினைத்தல்
மகளிர் பல்வேறு வகையான
ஒப்பனைகளைச் செய்துகொள்வர். அவற்றுள் ஒன்று கண்ணுக்கு மை
தீட்டிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், காதலன் உண்டானவுடன்,
காதலனுடன் பழக்கம் ஏற்பட்டது முதல்
கண்ணுக்கும் மை தீட்டுவதை நிறுத்துவிடுகிறாள்,
ஏனென்றால் கண் உள்ளே காதலன்
இருக்கின்றானாம். மை தீட்டுவதனால் காதலன்
மறைக்கப்பட்டு விடுவானாம். இல்லை மறைந்துவிடவானாம். இதனை,
கண்உள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து (குறள்.
1127)
என்னும்
குறளின் வழி ஒப்பனையின் போதும்
தன் திருக்குறள் காதலி காதலன் நினைவாக
உள்ளதை அறிய முடிகின்றது.
உண்ணும்போது
நினைத்தல்
உயிர் வாழ்வதற்கு உணவு
தேவை, உணவு உண்பது இயற்கையான
செயல்தான், அவற்றிலும் சூடான உணவு, உண்ணுவதற்கு
இதமாக நன்றாக இருக்கும். ஆனால்,
திருக்குறள் காதலி, சூடான உணவை
உண்பதற்கு அஞ்சுகிறாள். ஏனென்றால்,
'நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும்
வேபாக்கு அறிந்து (குறள்.
1128)
என்கிறாள்.
நெஞ்சிலே நிறைந்திருக்கும் காதலனின் மீது சூடான உணவு
பட்டதும் சுடுவதை நினைக்கின்றாள் உண்ணும்போதும்
காதலனின் நினைவோடு உண்ணும் உள்ளமுடைய காதலியாக
திருவள்ளுவர் இனங்காட்டியுள்ளதை மேற்கண்டவற்றில் காணமுடிகின்றது.
திருவள்ளுவர் கண்ட காதலி, கண்
இமைக்கும்போதும். ஒப்பனை செய்யும்போதும், உணவு
உண்ணும் போதும் காதலன் நினைவாக
இருந்துள்ள உணர்வை – உயரிய காதல் பண்பினை
– உயரிய கற்புக்கு வழிவகுக்கும் உள்ளத்தினை மேற்கண்ட சான்றுகளின் வழி இனங்காண முடிகின்றது.
தன்
நலனைத் துறக்கும் பண்பு
திருக்குறளில் - இடம் பெறும் காதலி
தன் காதலுக்காக தன் நலனைத் துறக்கும்
உள்ளத்தினளாக படைக்கப்பட்டுள்ளாள்.
ஒப்பனையில்
ஒப்பனை செய்வது மகளிர்க்கு
அழகு. ஆனால் திருக்குறள் காதலி
தன் கண்ணில் உள்ள காதலன்
மறைந்துவிடுவானோ என நினைந்து தன்
காதலனின் நலனுக்காக (குறள். 1127) மை தீட்டுவதை நிறுத்துகிறாள்.
இச்செயல், அவளின் உண்மை அன்பினையும்
காதலனுக்காகத் தன் நலத்தினையும் துறக்க
முயலும் உள்ளத்தின் உணர்வை இனங்காண முடிகின்றது.
உண்ணும்
போது
இளம் வயது – பருவ
உணர்வு – துடிப்புள்ள இரத்தம். சூடான உணவை உண்ண
ஆவலான ஏக்கம். ஆனால், காதலன்
நெஞ்சத்திலே குடியிருப்பதால், சூடான நல்லுணவினை உண்பதை
நிறுத்தி, சூடு குறைந்தவுடன் உண்கிறாள்.
உடலின்பத்தினையும், பசியின்பத்தினையும் துறந்து, காதலுக்காக தியாகம் செய்யும் உயரிய
காதலியினை (குறள். 1128) திருக்குறளில் காணமுடிகின்றது. தன் காதலன் நெஞ்சிலே
குடியிருப்பதால் உண்ணும் சூடான உணவு
காதலனை வருத்துமே என்று அஞ்சி, உண்ணும்
உணவிலும் தியாகம் செய்யும் நல்ல
காதலியினைத் திருக்குறளில் காணமுடிகின்றது.
பார்க்கும்
போது
கண் இமைப்பது உடலுடன்
கூடிய இயற்கை. இமைக்காமல் இருந்தால்
கண் எரியும். கண்ணீர் வரும். குண்ணை
இமைத்தால் தான் தூக்கம் வரும்.
கண் இமைக்காமல் போனால் கண் நோய்க்கு
ஆளாகி இறுதியில் பழுதுறும் இதையெல்லாம் அறிந்து திருக்குறள் காதலி
காதலுக்காக கண் இமைப்பையே செய்வதில்லையாம்
(குறள். 1129). இமைத்தால் காதலன் மறைந்து விடுவானாம்.
குhதலில் தன் சுகங்களை
மறந்து, காதலனுக்காக வாழும் உணர்வுடைய தலைவியாக
சமூகத்திற்கு வழிகாட்டும் நல்ல கற்புடைய பெண்டிராக
திருக்குறளில் படைக்கப்பட்டுள்ளதை மேற்கண்ட சான்றுகளின் வழி உணரலாம்.
மேற்கண்டவற்றிலிருந்து சில முடிவுகளைக் கூறலாம்.
1. திருக்குறளில்,
காதலி தன் காதலனின் நினைவாக
எப்போதும் இருக்கின்ற உண்மை அன்பினையுடைய பண்புள்ளவளாக
இருப்பதை அறியமுடிகின்றது.
2. தன்
காதலனுக்காக, தன் நலத்தினையும் துறக்கும்
பண்புள்ள காதலியாக இருப்பதைக் காணமுடிகின்றது.
கட்டுரை
– 6
திருவள்ளுவர் பெண்களை அறிவற்றவர்கள் என்றும்,
ஆண்களை அறிவுடையவர்கள் என்று தம் குறட்பாக்களில்
குறிப்பிட்டள்ளார் என குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர்
- கூறிக்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தை அறிவுடையவனாக இருக்க
வேண்டும் என்பதில் ஆண்குழந்தையை மட்டுமே வள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைச்
சான்று காட்டுவார். வேளிபடையாக – நேரிடையாக பார்ப்பதற்கு அப்படித்தான் தோன்றும். ஆனால், வள்ளுவரின் கருத்துகளை
ஆழமாக சிந்திக்கும்பொழுதும் வள்ளுவரின் கருத்துகளை ஆழமாக சிந்திக்கும்பொழுதும் வள்ளுவரின் பொதுமை
எண்ணம் - நோக்கு தெற்றென விளங்கும்.
மக்கட்பேறு
மனித வாழ்க்கையில் இல்லறம்
புனிதமானது. இந்த இல்லறத்திற்கு மக்கட்பேறு
இன்றியமையாதது. மக்கட்பேறில்லா மனைவி, மலடி என்று
வெறுக்கப்படுவாள். குழந்தை இல்லாதக் குடும்பம்
மகிழ்வோடு இருக்காது. கொள்ளி போட பிள்ளை
வேண்டும் என்ற வழக்கு சமூகத்தில்
இன்றைக்கும் உண்டு. தாய்க்கு தலைப்பிள்ளையும்,
தந்தைக்கு கடைசி பிள்ளையும் பெற்றோர்
இறந்தபின் கொள்ளி இடுவது வழக்கம்.
பதினாறு செல்வங்களுள் ஒன்றாக மக்கட்பேறு விளங்குவதை
அனைவரும் அறிவோம். எனவே, மக்கட்பேறு என்பது
சிறப்புக்குரிய ஒன்றாகும். குழந்தைகள் இருந்தாலே அனைத்து இன்பங்களையும் பெற்றதற்கு
ஒப்பாகும் என சங்க இலக்கியங்களும்
கூறுகின்றன. குறிப்பாக,
படைப்பு பல படைத்து
உடைப்பெருஞ் செல்வராயினும்
இடைப்பட குறுகுறுநடந்து
(புறம்)
என
புறநானூற்றுப் பாடலில், மயக்குறு மக்களை உடையோர்க்கு பயக்குறை
இல்லை தாம் வாழும் நாளே
என மக்கட்பேற்றின் அருமையைக் கூறுகின்றது.
வள்ளுவர் மக்கட்பேற்றைக் கூறும்போது ஆண் - பெண் என
பாகுபாட்டோடு கூறவில்லை. அறிவுடைய குழந்தைகளாகவும், நல்ல மக்கட்பேறாகவும், பண்புடைய
குழந்தைகளாகவும், உலக உயிர்களுக்கு எல்லாம்
இன்பந் தரக்கூடிய குழந்தையாகவும் கூறியிருப்பதைக் குறட்பாக்களிலே காணலாம்.
அறிவுடைய
குழந்தை
திருவள்ளுவர் குழந்தைப்பிறந்ததும் ஆண் - பெண் என
பார்க்க விரும்பவில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக
இருந்தாலும் கவலையில்லை. ஆனால், அறிவுடைய குழந்தையாக
விளங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். குழந்தை அறிவற்றதாக
இருக்குமாயின் குடும்பத்திற்கும் - சமூகத்திற்கும் என்று வலியுறுத்துகின்றார். குழந்தை அறிவற்றதாக
இருக்குமாயின் குடும்பத்திற்கும் - சமூகத்திற்கும் - நாட்டிற்கும் தீயவர்களாக – பயனில்லாதவர்களாக அமைவார்கள். எனவே தான், வள்ளுவர்
குழந்தை அறிவுடையதாகப் பிறக்க வேண்டும் என்கிறார்.
இதன் நோக்கம் என்னவெனில். பிறக்கின்ற
குழந்தையை அறிவுடையவர்களாக உருவாக்க தாய் - தந்தையர் அணியமாக
வேண்டும் என்பதாகும். இதனையே,
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற (குறள். 61)
என்னும்
குறளில் காணலாம். பொதுவாக, குழந்தைகள் அறிவுடையதும், அறிவற்றதும் உண்டு. ஆனால், அறிவறிந்த
மக்கட்பேறே சிறப்பு என வள்ளுவர்
கூறியுள்ளதைத் தெளிவாகக் காணலாம்.
நன்
மக்கட்பேறு
குழந்தை பெறுவது புனிதமானது.
சமுதாய மதிப்பினைத் தருவது. குழந்தை பெறுவதன்
மூலம், தாய் - தந்தை என்ற
உறவு உருவாகின்றது. அதிலும் சிலர் இவர்
வயிற்றில் ஒரு காய், பூ
பூக்கக்கூடாதா என்று குழந்தைப் பிறக்க
வேண்டும் என வேண்டுவதைக் காணலாம்.
அப்படியானால், குழந்தை பிறந்தாலே போதும்
என சமூகத்தில் மக்கள் நினைத்துக் கொண்டு
வருகின்றனர். ஆனால், திருவள்ளுவர்,
மங்கலம் என்ப மனைமாட்சி
மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள்.
60)
என
குழந்தை நல்லவர்களாக அமைய வேண்டம் என
விரும்புவதை – தம் நோக்கமாக குறிப்பிடுவதைக்
காணலாம். ஆகவே, குடும்பத்திற்கு மேலும்
அழகு சேர்ப்பது நல்ல மக்கட்பேறு என்பதை
மேற்கண்ட குறளின் மூலம் உணரலாம்.
ஏனெனில் தீய மக்கட்பேறும் உண்டு.
அதனைத் திருவள்ளுவர் விரும்பவில்லை என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
பண்புடைய
மக்கட்பேறு
குடும்பத்தில் பெற்றொர்கள் பண்புடையவர்களாக இருக்க வேண்டம். அப்படி
அமைவார்களானால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் பண்பு நலன் நல்லனவாக
அமையும். இதற்கும் மெலாக பெற்றொர் குழந்தைகளை
பண்பு நலன் உள்ளவர்களாக உரவாக்க
வெண்டம்;. உரவாக்கவில்லையெனில் தியவை என திருவள்ளுவர்
எச்சரிக்கின்றார். இதனை,
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடைய மக்கள் பெறின் (குறள். 62)
என்னும்
குறளில் காணலாம். பண்புடைய மக்களைப் பெறும் பெற்றொரை எழுபிறப்பும்
தீயவை தீண்டாது என்பதை மேற்கண்ட குறளில்
உணரலாம்.
உயிர்களுக்கு
இன்பம்
குழந்தைகள் பிறந்து, வளர்ந்து பணம் சேமித்து, சுகத்துடன்
வாழ்ந்தால் மட்டும் போதாது. புகழுடன்
விளங்கவேண்டும். அதற்கு அறிவுடையவர்களாக – முதன்மை
சார்ந்த தகுதியுள்ளவர்களாக விளங்க வேண்டும். அதனால்
மன்னுயிர்க்கு எல்லாம் இன்பம் தருகின்ற
பேறு கிடைக்கும். எனவே தான்,
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது (குறள். 68)
என்று
வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். தம் குழந்தை அறிவுடையவர்களாக
இருப்பதன் மூலம் தமக்கு மட்டுமல்ல
– தான் வாழும் நாட்டுக்காக மட்டுமல்ல
– உலக மக்களுக்காக – அனைத்த உயிர்களுக்காக என்பதைப்
பெற்றோர்கள் அறிதல் வேண்டும். எனவே.
தம் மக்களை அறிவுடையவர்களாக உருவாக்க
வேண்டும் என திருவள்ளுவர் பெற்றோர்களுக்கு
அறிவுரையாக – வேண்டுகோளாக விடுப்பதைத் தெளிவாக அறியலாம்.
தம்
பொருளே மக்கள்
குடும்பத்திலுள்ள கணவன் - மனைவி உழைக்க
வேண்டும். உழைத்து, அதற்கேற்ற வருமானத்தில்தான் இல்லறம் நடத்த வேண்டும்.
இதற்கு மாறாக, அறத்தின் தன்மையில்
நடுவு நிலைமை நீங்கிப் பொருள்
சேர்க்கக் கூடாத. பொருள் சேர்ப்பின்
அதற்குத் தக்கவாறே குழந்தைகள் பிறக்கும் என வள்ளுவர் எச்சரிக்கின்றார்.
இதனை,
தம் பொருள் என்ப
தம்மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்
(குறள். 63)
என
கூறுகின்றார். எனவே, கணவன் - மனைவியரின்
வினைகள் எப்படியோ – அவர்கள் உருவாக்கும் பொருள்களின்
அறநிலை எப்படியோ – அப்படியே மக்கட்பேறும் அமையும் என்பதை மேற்கண்ட
சான்றுகளின் வழியே உணரலாம்.
குழந்தைகள்
உறவு
குழந்தை மொழி கொஞ்சும்
மொழி, தட்டுத் தடுமாறி சிதைந்தும்,
அரைகுறையாகப் பேசும்மொழி. உணர்வு நிலையில் இது
பேரின்பம் தரும். ஆனால், அறிவு
நிலையில் சிரிப்பு வரும். இருப்பினும், தம்
குழந்தைகளோடு அளவளாவும் உறவு பேரின்பம் ஆகும்.
இதனை,
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (குறள்.
64)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு (குறள். 65)
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள். 66)
என்ற
குறட்பாக்களில் காணலாம். மேற்கண்ட குறட்பாக்களில் குழந்தைகள் உணவு உண்ணுமத் போதும்
- தொட்டுத் துழாவி கட்டியணைக்கும் போதும்
- பேசுகின்ற பேச்சும் என வரும், குழந்தை
– தாய் - தந்தையர் உறவு இன்பத்திலும் இன்பமான
பேரின்பத்தைத் தருவதாக அமைவதைக் காணமுடிகின்றது.
முடிவுரை
மேற்கண்ட சான்றுகளின் மூலம் சில முடிவுகளைக்
கூறலாம்.
1. திருவள்ளுவர்
மக்கட்பேற்றில் ஆண், பெண் குழந்தை
என வேறுபாடு பார்க்கவில்லை – குறிப்பிடவில்லை என்பதை உணர முடிகின்றது.
2. மக்கட்பேற்றைக்
கூறும்போது நல்லவர்களாக – அறிவுடையவர்களாக – பண்புடையவர்களாக – உலக உயிர்களுக்கு இன்பந்
தருபவர்களாக – நல்ல வழிகாட்டிகளாக திருவள்ளுவர்
கூறியுள்ளதைக் காணலாம். இத்தகு நலன்கள் அனைத்தும்
உடைய குழந்தையில் பெண் குழந்தை ஆண்
குழந்தையினும் பின்வாங்காது – தாழ்ந்துவிடாத – அறிவற்றதாக அமையாது என்பதைத் தெளிவாக
அறிய முடிகின்றது.
3. குழந்தையின்
பெற்றோர்களைப் பொதுமையாகக் கூறினாரே தவிர தாய் - தந்தையர்
என வேறுபாட்டுடன் நோக்கவில்லை என்பதை உணரவேண்டும் - அறியவேண்டும்.
இங்கு ஆண் - பெண் வேறுபாட்டைக்
கூறாததைக் காணலாம்.
4. மக்கட்பேற்றினை
நல்லவர்களாக – பண்புள்ளவர்களாக வல்லவர்களாக – அறிவுள்ளவர்களாக உருவாக்க தாய் - தந்தையர் இருவரின்
கடமையாகப் பொதுவாகக் கூறியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
5. தந்தையின்
கடன் மக்கள் மட்டுமே சான்றோனாக்குதல்
என்பது கிடையாது. தாயின் உணர்வு மகன்
அறிவுடையவன் - சான்றோன் எனக் கேட்பது மட்டுமல்ல
என்பதை மேற்கண்டவற்றில் காணலாம்.
கட்டுரை
– 7
முன்னுரை
திருக்குறளில் பெண்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகள் பல இடங்களில் காணப்படுகின்றன.
இவற்றை ஆழந்து நோக்கும் போதுதான்
திருக்குறளின் நுட்பமான கருத்துகள் புலனாகும். திருவள்ளுவர் காதலியைக் காட்டும் பொழுது அழகுடையவளாக காமத்துப்பாலின்
முதற்குறளில் அறிமுகப்படுத்துகிறார். அவற்றில் பொன் நகையையோ. நுல்ல
ஆடை அணிகலன்களையோ அணிந்தவள் என கூறாமல்,
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள்.
1081)
என
குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். அழகிய உருவத்தினையும், மயில்
போன்ற சாயல் நடை, மென்மையினையும்,
கனத்த கூந்தலினையும் உடைய காதலியைக் கூறுவதை
மேற்கண்ட குறளிலே காண்கின்றோம். வள்ளுவர்
குறிப்பிடும் காதலி இயற்கையான உடல்
அழகுடன் இருந்துள்ளமையையே காணமுடிகின்றது. அது மட்டுமின்றி காதலனின்
நெஞ்சத்தினை வருத்துபவளாக காதலி அமையவேண்டும் என்பதையும்
உணரமுடிகின்றது. அது மட்டுமின்றி காதலியானவள்
தன்பார்வையாலே காதலனின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல்
மிக்கவளாக இருக்க வேண்டும் என்னும்
விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
பார்வை
பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனாலும்,
ஓராயிரம் பார்வையினுள்ளும் காதலியின் பார்வை தன் காதலனை
ஈர்க்கச் செய்யவெண்டும் அப்பொழுததான் பிற மகளிர் நினைவின்றி
கற்புடன் வாழ வழிவகுக்க முடியும்.
குhதலனைத் தூய்மையாக்க – ஒருவனுக்கு
ஒருத்தி நோக்கிலான கற்புடனாக்க காதலி சில முயற்சிகளை
இயற்கையாகவே செய்யவேண்டும் என வள்ளுவர் தம்
குறட்பாக்களில் கூறியுள்ளார். அவற்றுள் பார்வையும் ஒன்று. பார்வை அமையும்,
துன்பத்தையும் மாறி மாறிதரும். இதனைத்
திருவள்ளுவர் ஏழு வகைகளாகக் கூறுகிறார்.
அவையாவன, 1. நோய் தரும் பார்வை
2. நோய் நீக்கும் பார்வை, 3. சிறுநோக்கம் 4. பார்க்காத போது பார்த்தல் 5. குறிக்கொண்டு
நோக்காமை, 6. ஒரு கண் சிறக்கணித்தல்
போல பார்த்தல் 7. வெறுத்தவர் போல பார்த்தல்
நோய்
தரும் பார்வை
காதலி, தன் பார்வையால்
காதலனின் உள்ளத்தில் தாக்குதலை ஏற்படுத்த வேண்டும். அதனால், அவன் காதலியின்
நினைவோடு பிதற்ற வேண்டும் என்னும்
நோக்கிலேயேஈஸஷ
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மனஇவள் கண்
(குறள். 1086)
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து (குறள்.
1082)
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்
பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண் (குறள்.
1084)
என்னும்
குறட்பாக்கள் அமைந்துள்ளன. மேற்கண்ட குறட்பாக்களில் தலைவியின் பார்வை. உள்ளம் நடுங்கச்
செய்யும் துன்பத்தைத் தரக்கூடியதாகவும். வருத்தும் ஆற்றலுள்ள தெய்வத்தின் படையைப் போன்றும், உயிருண்ணும்
ஆற்றலுடையதாகவும் காண முடிகின்றது. காதலியின்
பார்வையினால் உண்டாக்கும் துன்பமே, தூய்மையான கற்புடைய காதலுக்கு முதற்படி ஆகும்.
நோய்
நீக்கும் மருந்து
நோய் தந்தால் மட்டும்
பார்வை சிறப்புடையதாகாது. நோய் தந்த அதே
பார்வை, நோயை நீக்கும் மருந்தாகவும்
அமைய வேண்டும். காயம் பட்ட காதலனின்
உள்ளத்திற்கு இப்பார்வை மருந்தாக அமைதல் வேண்டும். அப்பொழுதுதான்
அவன் உள்ளத்தில் தலைவியின் அவசியமும் பயனும் தெரியும் - அருமை
புரியும். இதனை ஒட்டியே
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோய்க்கொன்று அந்நோய் மருந்து (குறள்.
1091)
என்ற
குறட்பா எழுந்தது. துலைவியின் நோக்கு மருந்தாகவும் உள்ளது
என்று தலைவன் பிதற்றுமாறு, தலைவி
தன் பார்வையினைச் செலுத்த வேண்டும்.
சிறுநோக்கம்
நோக்குதலில் சிறுநோக்கம், பெருநோக்கம் என இருவகையுண்டு. அவற்றுள்
பெருநோக்கம் என்பது, ஒருவரை ஒருவர்
வைத்தகண் வாங்காமல் பார்ப்பது. சிறுநோக்கம் என்பது நொடிப் பார்வையாகும்.
குhதலி சிறுநோக்குச் செய்வதும்
காதலனுக்கு பெருமகிழ்வைத் தரும் என்பதை,
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம்
காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது (குறள்.
1092)
என்ற
குறளில் காணலாம். காதலி, இப்பார்வையின் மூலம்
தன் காதலனுக்கு மகிழ்வையூட்ட வேண்டும் என்ற கருத்தினை உணரலாம்.
பார்க்காத
போது பார்த்தல்
காதலி, தலைவி நேராகப்
பார்ப்பதற்கு வெட்கப்படுவாள். வெட்கப்பட வேண்டும்.
கட்டுரை
– 8
முன்னுரை
திருவள்ளுவர் காட்டும் காமத்துப்பால் காதலி சாதாரணப் பெண்
அல்லள். ஊலக இயல்புகளையும், மக்களின்
சிந்தனைகளையும் தன் காதலனின் பண்பு
நலன்களையும் அறிந்தவளாகப் பண்பு நலன்களையும் அறிந்தவளாகப்
படைக்கப்பட்டுள்ளாள். இதனை இக்கட்டுரையில் பல
சான்றுகள் தந்து விளக்கியுள்ளோம்.
உறவுகள்
தேவை
ஒவ்வொருவரும் தாம் வாழும் பகுதியில்
வாழுகின்ற மக்களுடன் வேற்றுமை கருதாது ஒற்றுமையுடன் வாழவேண்டும்.
இல்லையெனில் துன்பங்களால் தாக்கப்பட்டு நிம்மதி இழந்துவிடுவோம். இதற்குத்தான்
'ஊருடன் பகை வேருடன் கெடும்'
என்று பழமொழியும் நம் நாட்டில் வழங்கப்படுகின்றது.
இத்தகைய சிந்தனை, திருக்குறள் காதலியிடம் காணப்படுகிறது. இதனை,
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்
அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு (குறள்
- 1158)
என்னும்
குறளிலே காணலாம். உறவினர்கள் இல்லாத ஊரில் வாழ்வது
துன்பமானது. இல்லாத உரில் வாழ்வது
துன்பமானது என்ற கருத்தினை, திருக்குறள்
காதலி அறிந்தவளாக இருப்பதை மேற்கண்ட குறளில் அறியமுடிகின்றது. காதலோடு
சமூக உறவும் தேவை என்ற
கருத்தினை அழகாக உணர்த்தியுள்ள பாங்கை
மேற்கண்ட சான்றில் தெளிவாக உணரமுடிகின்றது.
எனக்கே
துன்பமா?
என் முன் நிற்கும்
இவள் தெய்வ மகளோ? ஆராய்ந்து
படைக்கப்பட்ட மயிலோ? திரண்ட கூந்தலையுடைய
மானிடப் பெண்னோ? என் மனம்
மயங்குகிறதே! என்று காதலியைப் பார்த்துப்
பிதற்றியவன். அதுமட்டுமா, அவள் பார்வையை எமனுக்கு
ஒப்பாகவும் கூறியவன். போர்க்களத்தில் பகைவரும் அஞ்சும்படியான என் வலிமை, இவளின்
ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்றுவிட்டதே என்றெல்லாம் காதலியின் அழகிலே மயங்கி உழன்றவன்.
இன்றைக்குக் காதலியைப் பிரிந்து சென்று விட்டான். அவனுக்கு
விடைதர மனமில்லாமலும் தவிர்க்க முடியாமலும் காதலி பிரிவுக்கு உடன்பட்டாள்.
காதல் உணர்வு பசலை
நோயைத் தந்துவிட்டது. அதனால் காதலி வேதனைப்படுகின்றாள்.
என் அழகிலே மயங்கி, என்னை
உயிராகவும், மதித்தவன். அப்படிப்பட்டவனே எனக்குத் துன்பம் தருகின்றான் எனில்,
பகைவர்க்கு எப்படித் துன்பம் தருகின்றான் எனில்,
பகைவர்க்கு எப்படித் துன்பம் தருவானோ? என்பதை,
'துப்பின் எவன் ஆவர் மற்கொல்
துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர் (குறள் - 1165)
என்ற
குறள்வழி காதலி கூறுவதாகத் திருவள்ளுவர்
கூறுகிறார். காதலன், தன்னிடம் மென்மையான
– அன்பு கலந்த பண்புடன் இருப்பினும்,
பகைவர்க்கு வன்மையானவன் என்ற காதலனின் பண்பு
நலன் அறிந்தவளாகக் காண்ப்படுவதை மேற்கண்ட குறளின் வழியே அறியலாம்.
ஊராரினை
எதிர்க்கும் உள்ளம்
ஊராரினை எதிர்த்து வாழமுடியாது.
ஆனாலும் உள்ளத்தளவிலே ஊராரினை எதிர்த்துப் பேசும்,
உள்ள உணர்வைத் திருக்குறள் காதலியிடம் உணரமுடிகின்றது. ஏனெனில் காதலனை ஊரார்
பழிக்கும் சொல்லினை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனை,
உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர் (குறள்.
1130)
என்னும்
குறள் வழியே காணலாம். என்
உள்ளத்துள் அவர் எப்போதும் விருப்பத்தோடு
வாழ்கிறாh. ஆதை அறியாத ஊரார்,
அவரை அன்பில்லாதவர் என்கின்றார்களே? இது நீதியா? ஏன்று
ஊராரைப் பழிக்கின்றாள்.
அன்பில்லாதவர் என்று சொன்னபோது சிறிதளவே
வருத்தப்பட்ட காதலி, தன் காதலனை
'கொடியர்' என்று கூறியதைக் கேட்டு
நொந்துவிட்டதாக,
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து (குறள்
- 1236)
மேற்கண்டவற்றின் மூலம் ஊராரினைத் தன்
காதலனுக்காக – பிரிந்திருந்து துன்பம் செய்தபோதும் விட்டுக்
கொடுக்காமல் - தம் காதலைப் பிறர்
தூற்றா வண்ணம் எண்ணுகின்ற உள்ளத்தை
உடையவளாகத் திருக்குறள் காதலி காணப்படுவதை அறியலாம்.
மேலும், ஊரார் 'கொடியர்' என்று
கூறிய போது உள்ளம் நொந்து
துடித்து அல்லல்பட்ட காதலியின் உள்ளத்தைக் காண முடிகின்றது.
நீதியா?
ஆணுக்குப் பெண் சமம் என்றுதானே
என்னைப் பசலை நோய் கொண்டாள்
என்று சொல்கின்றீர்களே தவிர, அவர் பிரிந்தார்
என்று யாரும் சொல்லவில்லையே? என்கிறாள்
காமத்துப்பால் காதலி, இதனை,
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல் (குறள்
- 1188)
என்ற
குறளிலே காணலாம். சமூகத்தில் பெண்களை மட்டும் குறைகூறும்
வழக்கம் இருக்கின்றதே ஒழிய ஆடவரைப் பெரும்பாலும்
குறிப்பிடுதல் இல்லை என்பதை மேற்கண்ட
சான்றின் மூலம் உணரலாம். இச்சான்றானது
சமூகத்தில் நீதிகேட்கும் பெண்களின் உரிமைக்குரல் போல் தோன்றுவதை ஆழமாகச்
சிந்தித்தால் புரியும்.
பசலை
படரட்டும்
என்னைப் பசலை நோய்
பற்றிக் கொள்ளட்டும். அதனை நான், தாங்கிக்
கொள்வேன். ஆனால், என் துணைவர்
நன்றாக இருக்க வேண்டும். அவரைப்
பிறர் பழிக்கக்கூடாது என்று திருக்குறள் காதலி,
இரு கருத்தினை முன் வைக்கின்றாள், இதனை,
பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார்
நல்நிலையர் ஆவர் எனின் (குறள். 1189)
பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் (குறள்
- 1190)
என்ற
குறட்பாக்களிலே காணலாம்.
கொடியவன்
தன் காதலனால் தாங்க
முடியாத அளவிற்குத் துன்பம் வரும்போது, 'கொடியர்'
என்று திருக்குறளில் உலாவரும் காதலி கூறுகிறாள். இதனை,
நனவினான் நல்காக கொடியார் (குறள் - 1217)
கொடியார் கொடுமை உரைக்கும் (குறள் - 1235)
என்ற
குறட்பாக்களில் காணலாம். ஆண்களுக்குத் துன்பம் செய்யும் போது
பெண்களை வசைபாடுவது போல, பெண்களுக்குத் துன்பம்
செய்யும் போது ஆண்களை வசைபாடலாம்
என்ற உணர்வை – சமநீதியை உணர்ததவே இவ்வாறு திருவள்ளுவர் கூறினார்
என்பதை எண்ணத் தோன்றுகிறது.
பழித்தல்
கூடாது
காதலன் தவறு செய்தால்
திருத்த வேண்டும். மாறாகபழிக்கக் கூடாது. அப்படிப் பழித்தால்
இழிவு ஏற்படுமாம். இதனை திருக்குறள் காதலியும்
அறிந்திருக்கிறாள், என்பதை,
எள்ளின் இளிவாம்என்று எண்ணி
அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு (குறள்
- 1298)
என்ற
குறளின் வழி உணர முடிகின்றது.
இக்கருத்து, பெண்கள் தம் கணவன்மார்களின்
- தவறானவற்றைத் திருத்த வேண்டுமே ஒழிய
பழிக்கக்கூடாது என்ற பொதுமைக் கருத்தினை
உணர்த்துவதைக் காணலாம். பழிக்கும் எண்ணம் வருமானால் உறவு
பிளவுண்டாகி தீராதத் துன்பத்தைத் தரும்.
பிறகு வாழ்வு என்பது மறைந்து
தாழ்வு உண்டாகம் என்பதால்தான் நெஞ்சமானது உயர்வையே நினைப்பதாகக் காதலி கூறுகிறாள்.
எம்
காதலன் எனக்கு மட்டுமே!
எம் காதலன் எனக்கு
மட்டுமே என்ற உணர்வினை உடையவளாக
வள்ளுவக் காதலி படைக்கப்பட்டிருக்கின்றாள். குறிப்பாக
நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள்
- 1311)ஸ
யாரினும் யாரினும் என்று (குறள் - 1314)
என்மறந்தீர் (குறள்
- 1317)
யாருள்ளித் தும்மினீர் (குறள்
- 1317)
என்ற
குறட்பாக்கள், தன் காதலன் பிறமகளிரை
உடலாலும், உள்ளத்தாலும் நினைக்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றன.
மேற்கண்ட சான்றுகளிலிருந்து சில முடிவுகளைத் தரலாம்.
முடிவுரை
1. திருக்குறள்
காதலி உறவுகள் தேவை என்பதை
அறிந்திருந்தவளாக உணர முடிகின்றது.
2. தன்
காதலன் பகைவர்க்குக் கொடியவன் என்பதை அறிந்தவளாக இருப்பதைக்
காணமுடிகின்றது.
3. ஊராரினைத்
தன் காதலனுக்காக எதிர்க்கும் உள்ளத்தினளாக அமைந்துள்ளதை அறியமுடிகின்றது.
4. ஆணுக்குப்
பெண் சமம் என்ற கருத்தில்
நீதி கேட்கும் நோக்கில் வள்ளுவக் காதலி குரல் கொடுப்பதைக்
காணமுடிகின்றது.
5. நல்லதற்காகத்
துன்பத்தையும் தாங்கும் உள்ளத்தினளாக காதலி படைக்கப்பட்டுள்ளாள்.
6. காதலனையும்
'கொடியவன்' என்று வசைபாடும் துணிவை
காதலிக்கு உருவாக்கியுள்ள உரிமையை இனங்காண முடிகின்றது.
7. தன்
காதலன் தனக்கு மட்டுமே என்ற
சிந்தனையுடன், காதலனை ஊடும் காதலியாகக்
காணப்படுவதை இன்ங் காணமுடிகின்றது.
கட்டுரை
– 9
திருக்குறளில் பெண்களுக்கு உரிமைகள் - விழிப்புணர்வுச் சிந்தனைகள் - வாழும் நெறிமுறைகள் அனைத்தையும்
போற்றி வாழ்த்தி விவரித்த திருவள்ளுவர் ஒழுக்கம் தவறி வாழும் பெண்களை
வசைபாடும் பொழுது யாரும் கூறமுடியாத
அளவுக்குக் கூறியுள்ளார் என்பதை வரைவின் மகளிர்
அதிகாரத்தை ஆழ்ந்து படிக்கும்பொழுது அறிய
முடிகின்றது.
'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை' என்று கூறிய
திருவள்ளுவர் அடுத்தவரியில் 'இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி' என்றார்.
பெண்களை புகழ்ந்து பலவாறு கூறிய திருவள்ளுவர்
வரைவின் மகளிரை பலவாறாக இகழ்ந்து
பேசுகிறார். ஒரு தீயவளால் பல
கற்புடை மகளிரின் வாழ்வுகள் வீணாகி – பாழாகி வறுமையடைகின்றது. அது
மட்டுமா மக்கட் பேற்றின் கல்வி
நலன், சமுதாயக் கடமை என பல
அறங்களும் அறிகின்றன. எனவே, இத்தகைய சிந்தனைகளை
ஒரு சிறிதும் சிந்திக்காமல் ஆடவர்கள் பலருடனும் இன்பங்கொண்டு பொருளைப் பெறும் பெண்களை மனம்
போனபடி இகழ்கிறார் திருவள்ளுவர்.
இதனை பின்வரும் சான்றுகளின்
மூலம் அறியலாம்.
அன்பு
இல்லாதவர்கள்
பொருட் பெண்டிர் அன்புடையவர்கள்
போலக் காண்பர். அவர்களுக்குப் பொருள் கிடைத்ததும், பொருளுக்கேற்றவாறு
இன்பந் தரவர். பொருள் இல்லையென்றால்
புறக்கணிப்பர். இதனை,
அன்பின் விழையார் பொருள்விழையும்
ஆய்தொடியார் (குறள் - 911)
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்புஇல் மகளிர் (குறள் - 912)
என்னும்
குறட்பாக்களில் காணலாம்.
பண்பு
இல்லாதவர்கள்
பெண்கள் என்றால் நல்ல
பண்பு நலன்களை உடையவளாக இருக்க
வேண்டும், ஒழுக்கம் தவறும்போது பண்பு நலன்களும் சிதையும்,
வரைவின் மகளிர் ஒழுக்கம் தவறி
பொருளுக்காக வாழ்வதால் பண்புநலன்கள் இல்லை என்பதை,
பண்புஇல் மகளிர் (குறள் - 912)
என்ற
குறளிலே திருவள்ளுவர் கூறுகிறார்.
செருக்குடையவர்கள்
வரைவின்
மகளிர் ஆணவம் நிறைந்த உடலினை
உடையவர்கள். அதனால்தான் அவர்களிடம் ஒழுக்கம் என்பது இல்லை என்பதை,
தகை செருக்கிப் புன்னலம்
(குறள். 916)
என்ற
குறளிலே திருவள்ளுவர் கூறுவதைக் காணலாம். ஆணவம் நிறைந்தவர்கள் யாரையும்
மதிக்கமாட்டார்கள். மனிதப் பண்பே அவர்களிடம்
இராது.
மாய
மகளிர்
பொருள் பெறவேண்டும் என்ற
குறிக்கோளோடு மட்டுமே பல ஆடவருடன்
தொடர்பு கொள்ளும் மகளிர் அனைவரிடமும் போலியாக
– பொய்யாக நடித்து இன்பம் தருவதைப்
போல பழகுவாள் என்று மிகத் தாழ்வாக
திருவள்ளுவர் கூறுவதை,
ஆயும் அறிவினர் அல்லார்க்கு
அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு (குறள்
- 918)
என்கிறார்
இருமனப்
பெண்டிர்
பொருளுக்காக ஆடவர்களுடன் உறவு கொள்ளும் மகளிர்
உள்ளத்தால் நினையாது உடலால் மட்டுமே இன்பந்தருவர்.
அதற்குப் பின் இவனிடம் எவ்வளவு
பணம் பெறலாம் என்று எண்ணிக்
கொண்டே இருப்பர். அடுத்து இவனைவிட பெரும்
செல்வந்தனைச் சந்திப்போமா? என்று பல சிந்தனைகளை
உள்ளத்திலும், போலியாக உடலளவில் ஒரு
நடிப்பினையும் வரைவின் மகளிர் இயல்பாக
உடையவர்கள் என்பதைக் கொண்டு,
இருமனப் பெண்டிரும்
(குறள் - 920)
என்று
குறளிலே சுட்டிக்காட்டுகிறார் திருவள்ளுவர்.
மேற்கண்ட சான்றுகளின் மூலம் சில முடிவுகளைத்
தரலாம்.
1. வரைவின்
மகளிர் அன்பு இல்லாதவர்கள் என்பதை
இனங்காண முடிகின்றது.
2. பண்பற்ற
மகளிரே வரைவின் மகளிர் என்பதை
அறிய முடிகின்றது.
3. வரைவின்
மகளிர் செருக்குடையவர்கள் என்பதைக் காணமுடிகின்றது.
4. மாயமகளிராக
வரைவின் மகளிர் வாழ்வதை கண்டுகொள்ள
முடிகின்றது.
5. இருமனங்
கொண்ட மகளிராக வரைவின் மகளிர்
காணப்படுவதை உணர முடிகின்றது.
கட்டுரை
– 10
திருக்குறளின் கருத்துகள் அனைத்தும் நன்றாகவே உள்ளன. ஆனால்...., என்று
சிறிது தயங்கி 91 ஆம் அதிகாரம் பெண்வழிச்
சேறல் பெண்ணடிமையைச் சுட்டுகின்றதே என்று வேகமாக வீர
உரையாற்றி, வள்ளுவத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி, தான்
அறிவாளியாக நினைத்துக் கொண்டு இதழ்களிலே புகழைத்
தேடிக் கொண்ட புகழ்வாய்ந்த மகளிரைக்
கொண்டது நம்நாடு என்பதில் வேதனைப்படுகிறேன்.
ஏன்? ஆடவர்களின் சார்பில் மேடைகளிலும், அறிவார்ந்த மன்றங்களிலும் முழங்கிய அறிஞர்களையும் - அவர்களின் பேச்சைக் கேட்டும் மனம் வேதனை அடைந்திருக்கின்றேன்.
பெண்களைப் பூட்டி வைக்காதே என்று
அடிமைத்தளைக்கு எதிர்த்து உரத்த குரல் கொடுத்த
வள்ளுவர் குறளிலா அடிமை. 'நண்ணேன்
பரத்த நின் மார்பு' (குறள்
- 1311) என்ற குறளிலே காதலனை எதிர்த்துப்
பேசுகின்ற நிலையினை உருவாக்கித் தந்தாரே அப்பொய்யில் புலவனின்
பாட்டிலா அடிமை. ஆணுக்குச் சமமாக
பெண் உழைக்க வேண்டும் என்று
குரல் கொடுத்து அடிமையைத் தகர்த்து பெண்ணுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய குறளிலா குற்றம்? குற்றம்
வருமா? திருக்குறளை முழுதும் படித்தால் திருவள்ளுவரின் திருவுள்ளத்தைத் தெளிவாக உணர்ந்தால் திருக்குறளில்
பிழை காண நா கூசும்.
வாய் குழறும். இதுதான் உண்மை.....
பெண்மைக்
குணம்
பெண்கள் எனில் இயற்கையாகவே
ஆண்களின் பார்வைக்கு அழகு ஆவர். அதே
போல் அழகு ஆவர். இரும்பும்
காந்தமும் போல ஆண் - பெண்
உறவு இணைந்தது. பெரும்பாலும் ஆடவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள். இதனால்தான் 'பிறன்மனை நோக்காமை பேராண்மை' என்று பிறனில் விழையாமை
அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறினார். ஆனால், பிறமனை ஆடவனிடம்
விழையாமை என மகளிர்க்குத் திருவள்ளுவர்
எழுதவில்லை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எனவே, பெண்மைக் குணங்களுக்குரிய
மனைவியிடம் மிகுதியாக காமம் கொண்டு அடிமையாகாதே
என்பதற்கே திருவள்ளுவர் 'பெண்வழிச் சேறல்' என்றார். அளவான
காதலின்பம் உடைய கணவனிடமும் - மனைவியிடமும்
பிழைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
இயல்பு நிலைக்கு மிகுதியாக காதலுணர்வு உண்டாவதால் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் அடங்கிப் போக நேர்கிறது. அதிலும்
சில நல்ல செயல்களுக்கு மாறாக
தீய செயல் செய்யும் போதும்
காம வாய்ப்பினால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க நேரிடுகிறது.
வினைவேறு
கணவன், மனைவி வினையாற்றுகின்ற
போது கணவன் மனைவியாக இராமல்
கடமையிலே கருத்துடன் விளங்க வேண்டும். நம்
மனைவியாயிற்றே என்ற உறவுடன் கணவன்
நீதி தவறி அறத்திற்குப் புறம்பாக
நடத்தல் கூடாது. உறவுகள் - சிற்றின்பம்
என்பது வாழ்வின் பல்வேறு பகுதிகளுள் ஒன்றாகக்
கொள்ளவேண்டும். சிற்றின்பத்தை முதன்மைப் படுத்தி மற்ற செயல்பாடுகளை
உள்ளடக்கிச் செய்யும் பொழுது காமத்தினால் அடிமை
ஆவது தவிர்க்க முடியாது. இதனை முதன்மை படுத்தியேதான்,
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது (குறள் - 901)
என்று
திருவள்ளுவர் கூறினார்.
பொருளாக்கம்
காம வயத்தினால் தன்
செல்வத்தை தன் மனைவிக்கு அளவுக்கு
மீறி செலவு செய்வதால் பொருள்
சேமிப்பு குறையும். இதனால் அவனை கண்டோரும்,
பலரும் ஏசுவர், காம விழைவுடன்
தன் மனைவிக்குச் செலவுகளைச் செய்யாதே என்பதைத்தான் திருவள்ளுவர் கூறியுள்ளார். இயல்பாக உலக வழக்கில்
முறைப்படி செய்ய வேண்டிய செலவுகளைச்
செய்யாதே என்று திருவள்ளுவர் கூறவில்லை
என்பதை சான்றோர்கள் எண்ணியருள வேண்டும். இதனைத்தான்,
பேணாது பெண்விழைவான் ஆக்கம்
பெரியதோர்
நாணாக நாணுத் தரும் (குறள்
902)
என்கிறார்.
தாழ்ந்த
இயல்பு
மனைவி கணவனுக்கு உற்றதுணை.
தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்து
சோர்வு இலாத பெண் என்று
திருவள்ளுவர் மனைவியின் தன்மையை தெளிவாகக் கூறியுள்ளார்,
மனைவியிடம் இயல்பாகப் பேசி, மகிழ்ந்தால் யாரும்
குறை சொல்லமாட்டார்கள். இயல்வு இன்றி தாழ்வாக
பேசும் போதும், மகிழும்போதும் மனைவியே
கூட வெட்கப்படுவாள் எனில் மற்றவர்கள் என்ன
கூறுவார்கள்? இதனைத்தான்,
இல்லாள்கண் தாழ்ந்த இயல்யின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணத் தரும் (குறள் - 903)
என
திருவள்ளுவர் குறிப்பிட்டார்.
மனைக்கு
ஏன் அஞ்சுவான்
ஒருவன் தன் மனைவிக்கு
ஏன் அஞ்சுவான்? தவறு செய்ததனால் உண்டாம்
குற்ற உணர்வு. மற்றொன்று மனைவி
மீது கொண்ட காம உணர்வு,
காம உணர்வினால் மனைவிக்கு அஞ்சும்போது மனைவியே சிரிப்பாள். ஏன்
கணவன், நான் என்ன சொல்கின்றேனோ
அதுதான் செய்வார் என அடிமையினை பெருமைப்படுத்திக்
கூறுவாள். எனவே, மனைவிக்கு அஞ்சாதே?
அவள் கூறுகின்ற நற்செயல்களைச் செய். தீய செயல்களைச்
செய்யாதே, நல்ல செயலைச் செய்ய
நினைக்கும் போது மனைவிக்கு அஞ்சாதே,
தீய செயல்கள் செய்யும்போது அஞ்சு, இதனைத்தான்,
மனையாளை அஞ்சும் மறுமை
இலாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று (குறள் - 904)
இல்லாளை அஞ்சுவான் அஞ்சம்மற்று
எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல வெயல் (குறள்
- 905)
என்ற
குறட்பாக்களிலே கூறுகின்றார். நல்ல செயல்களை எந்தக்
கணவனும் செய்யப் புகும் போது
நல்ல மனைவி தடுக்கமாட்டாள். ஏனெனில்
மனைத்தக்க மாண்புடையவளாகவும், வளத்தக்களாகவும் வாழ்க்கைத் துணையாகவும் விளங்குபவள் நல்ல மனைவி என்பதை
இங்கு சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் மனையாளை அஞ்சுதல், இல்லாளை
அஞ்சுதல் என்னும் குறட்பாக்கள் நல்ல
மனைவியரை அடிமையாக்க திருவள்ளுவர் கூறவில்லை என்பது புலனாகும். இல்லையெனில்
புரியாததாகியே தொடர்கதையாகும். வுpனையாண்மை வீறு
எய்தவும், நல்லார்க்கு நல்லது செய்யவும் உற்ற
துணையாக மனைத்தக்க மாண்புடையளாக உள்ள மனைவியால் மட்டுமே
மேற்கண்ட நல்லவற்றிற்குத் தடை உண்டாகும். என்பதைத்
தெளிவாகக் கூறுவதை இனங்காணலாம்.
சிற்றின்பம்
மிகுவது தீமையே
சிற்றின்பம் வாழ்க்கையில் ஒரு சிறு பகுதி.
அதைப் பெரும்பகுதியாக நினைத்து வாழும் கணவன் பெருமையடைய
முடியாது. சிறப்புடன் வாழ்ந்தாலும் சிறுமையே என்பதனை,
இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர் (குறள் - 906)
என்கிறார்
திருவள்ளுவர். மேலும், நாணம் என்பது
பெண்களுக்கு இயல்பானது. அதே வேளையில் தீயவற்றுக்காகவும்
நாணவேண்டும் என்பது. முனித அறம்
எனவே, சிற்றின்ப மிகுதியால் ஏவல் செய்யும் ஆண்மையைவிட
இயல்பாகவுடைய பெண்ணின் நாணமே பெருமையுடையது என்று
குறள்907 திருவள்ளுவர் கூறுகிறார்.
மனைவியின் அழகுக்கு மயங்கி ஏவல் செய்யும்
கணவனால் நண்பர்களின் குறைகளைப் போக்க முடியாது. நல்லதையும்
செய்ய முடியாது என்பதனை,
நட்டார் குறைமுடியார் நன்று
ஆற்றூர் நல்நுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர் (குறள்
- 908)
என்ற
குறட்பாவிலே காணலாம். குறிப்பாக நல்நுதலாள் பெட்டாங்கு என்பதனால் அழகை – காமத்துக்கு மயங்கி
என்பதனை உணர வேண்டும். அறிவுக்கு
– ஆற்றலுக்கு அல்ல என்பதைச் சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.
முடிவுரை
மனை விழைதல் என்ற
தொடரினைத் தொடங்கியே திருவள்ளுவர் கூறியுள்ளதை நினைக்க வேண்டும். மாண்புடைய
வளத்தினைப் பெருக்கும் வளத்தக்காள் - மனைத்தக்காள் - சொற்காத்து சோர்விலாத இயல்புடைய மனைவி தன் கணவனிடம்
சிற்றின்பத்தை ஒரு பகுதியாகக் கொள்வாளேயன்றி
வாழ்க்கையின் முழுப் பகுதியையும் உடையவளாக
இராள். அதுமட்டுமின்றி கணவனின் வீறுடைய விளைக்கும்,
நற்செயலுக்கும், அறவிளைக்கும் துணையாவாளே அன்றி முரணாக அமையாள்
என்பதை நினைத்தால் ஒழிய பெண்வழிச் சேறல்
அடிமையாகத்தான் தோன்றும்
இதுவரை 'திருக்குறளில் பெண்
உரிமைச் சிந்தனைகள்' என்ற தொடர் பத்துக்
கட்டுரைகளாக வள்ளுவர் வழி வெளியிட்டு பெருமைப்படுத்தியதற்கு
நன்றி. கட்டுரைகளைப் படித்துப் பாராட்டிய அறிஞர்களுக்கும் நன்றி.
திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும்
என்று உரத்த குரல் கொடுத்த
திருக்குறள் முனிவர் குன்றக்குடி அடிகளார்,
வழக்கறிஞர் கு.ச. ஆளந்தனார்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் அவர்களுக்கு
நன்றியுடையேம். இச் சான்றோர்களின் கருத்துகளுக்கு
எதிராக புறப்பட்ட சந்தேகங்களுக்கு விடைதந்து தான் 'திருக்குறளில் பெண்
உரிமைச் சிந்தனைகள்' இனி, வரும் சந்தேகங்களுக்கு
நம் சான்றோர்கள் மேடைகளில் விளக்கம் தந்து திருக்குறள் நூலை
தேசிய நூலாக்க வருவார்கள் என
நம்புகிறேன்.
வையக
அமைதிக்கு வள்ளுவNமு வழி
முன்னுரை
தமிழ் மொழிக்குப் பெருமை
சேர்ப்பது அதன் சொல்லழகும், பொருளழவும்,
கற்பனை அழகும் ஆகும். உலக
மக்களுக்கு பல அறிஞர்கள் பல்வேறு
காலகட்டங்களில் பல நீதிகளைக் கூறியுள்ளனர்.
ஆனால் மக்களுக்குப் பல நேரங்களில் தொல்லைகளும்,
துன்பங்களும் தொடர்கதையாகவே தொடர்கின்றன. இதற்குத் தீர்வு கிடையாதா? என்று
மக்கள் வேதனைபட்டுக் கொண்டுதான் வாழ்கிறார்கள். இவ்வேதனைகள் தீர திருக்குறள் என்னும்
அரிய நூலினால்தான் தீர்வு காண முடியும்
என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரதட்சணை
வையகத்தை ஆட்டிப்படைக்கும் பல சிக்கல்களுள் ஒன்று
வராட்சணை. இந்த வரதட்சணையால் எத்தனையோ
பெண்கள் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். பெண் குழந்தைப்
பிறந்தவுடன் கொலை செய்யும் எண்ணம்
வருவதற்குக் காரணமே வரதட்சணைதான். லஞ்சம்,
ஏமாற்றுவேலைகள் செய்வதற்குக் காரணமே வரதட்சணைதான். மூத்தப்
பெண்ணிருக்க இனைய பெண் மற்றொருவனோடு
காதலித்து திருமணம் செய்துகொள்வதுகூட இந்த வரதட்சணையால்தான். பெண்கள்
வயதால் மூத்திருந்ததும் திருமணமே ஆகாமல், வேறு வழியில்லாமல்
இரண்ட்hந்தாரமாக – பிடிக்காமல் பெற்றோர்க்காக பொருளாதாரத்திற்காக கண்ணீருடன் வாழ்க்கைபடுவதும் இந்த வரதட்சணையால்தான், பலபெண்டிர்கள்
கணவன்மார்களாலும், மாமன் - மாமிமார்களாலும் கொலை
செய்யப்படுவதும், வாழாவெட்டிகளாவதும் இந்த வரதட்சணையால்தான், இதற்குத்
தீர்வு காணத் திருக்குறளால்தான் முடியும்.
வரதட்சணையை
ஒழிக்க வழி
வரதட்சணையை ஒழிக்க திருவள்ளுவர் கூறும்
கருத்துக்களை மக்களிடையே பரப்ப வேண்டும். இக்கருத்துக்களைக்
குறிப்பாக குழந்தைகள் - இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.
அவர்கள் உள்ளத்தில் உறுதியாக நிற்குமாறு இக்கருத்தைக் கூற வேண்டும்.
பொருள்
வளம்
வரதட்சணை கேட்போர் கூறும் கருத்துக்களுள் தலைமையானது
பொருள் வளத்தைப் பற்றியதாகும். எனக்காகவா கேட்கிறேன். உன் மகளும், மருமகப்பிள்ளையும்
சிறப்பாக வளமாக வாழவே கேட்கிறேன்
என்று பொருள் வளத்தை முதன்மைப்படுத்துகின்றனர்.
முற்றவர்களிடமு; வருத்தி வாங்கும் பணத்தால்
நாம் வளமாகிவிட முடியாது. பொருள் வளம் என்பது,
நம் சொந்த உழைப்பில் வாழவேண்டும்.
அதனைப் பயன்படுத்தும்போது தான் இன்பம். இதனைத்
திருவள்ளுவர்,
'தம்மில் இருந்து தமது
பாத்துண்டற்றால்' என்கிறார். தம் பொருளைப் பிறர்க்கு
வழங்கும்போது தம் பொருளால் வளம்
பெரும் போது மட்டுமே இன்பம்
கிடைக்கும் என்பதை நினைக்க வேண்டும்.
மற்றும் பொருள் வளம்
என்பது நம் ஊழுக்கு ஏற்ற
வகையிலேயே அமையும் என்பதை உணரவேண்டும்.
அதைவிடுத்து வரதட்சணை மூலமாக அமையும் என்று
பிறரை வருத்தக்கூடாது. வரவேண்டிய ஊழால் பொருள் கிடைக்கும்.
போக வேண்டிய ஊழால் பொருள்
நம்மை விட்டுப்போகும் என்பதனை,
'ஆகூழால் தோன்றும் அசைவுஇன்மை
கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி' (குறள்
- 371)
என்ற
குறளால் உணரலாம். எனவே பொருள் வளத்தினை
நினைத்து வரதட்சணையை வாங்கக் கூடாது.
பெருமை
வரதட்சணை வாங்குவதைப் பெருமையாக நினைத்து வாங்குகின்றனர். என் மகனுக்கு இவ்வளவு
பணம் - நகை என வரதட்சணையாகத்
தந்தார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது பெருமையா என்பதைப் பார்க்கும்போது திருவள்ளுவர் இது பெருமை கிடையாது
என்கிறார். பெருமை தரும் செல்வமே
பெருவதாக இருந்தாலும் துன்பம் தராமல் அதனைப்
பெறுவதே குற்றமற்றவர் நெறி என்பதனை,
சிறப்பு ஈனும் செல்வம்
பெறினும் பிறக்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள் (குறள்
- 311)
என்னும்
குறள் கூறுகிறது. எனவே, மேற் குறிப்பிட்ட
குறள் கருத்தின்படி பெருமை என்று எண்ணி
வருத்தி வரதட்சணை வாங்குவதைத் தடுக்க ஒவ்வொருவரும் முயல
வேண்டும்.
வரதட்சணை
வாங்குவது நெறியா? நெறி தவறிய
பொருள்
வரதட்சணையால் வரும் செல்வம் நெறி
தவறி வரும் செல்வம். அதனால்
இன்பம் கிடைக்காது. என்றாவது ஒருநாள் பேச்சு வாக்கில்
நான் இவ்வளவு பணம் தந்தேனே?
சும்மாவாகவா என் பெண்ணைத் திருமணம்
செய்து கொண்டாய்? என்று வரதட்சணை தருபவர்
புலம்புவார் என்பதை மறந்துவிடக் கூடாது.
நெறியறிந்து குற்றம் இல்லாமல் வந்த
செல்வம் அறத்தையும் பெருக்கும். இன்பத்தையும் கொடுக்கும் என்னும்
'அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
(குறள் - 754)
குறள்
நெறிப்படி ஒவ்வொருவரும் வாழ்ந்தால் போதும், வரதட்சணை வாங்க
யாரும் முன்வர மாட்டார்கள்.
நல்வழிப்
பொருளில்லை
நம் வாழ்க்கைக்குத் தேவையான
பொருளை அறவழியில் மட்டுமே சேர்க்க வேண்டும்.
அறமல்லாத வழியில் வரும் பொருள்
நன்மை தராது. வரதட்சணையைத் தானாகவே
தந்தால் கூட மறுத்துவிட வேண்டும்.
நன்மையே தந்தாலும் நடுவு நிலையிலிருந்து தவறியதால்
கிடைத்த செல்வத்தை அப்போதே விட்டுவிடவேண்டும் என,
நன்றே தரினும் நடுவிகந்தாம்
ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (குறள்
- 113)
குறள்
கூறுவதைக் காணலாம். இக்குறள் நெறிப்படி ஒவ்வொருவரும் வாழ்ந்தால்தான் வரதட்சணை ஒழியும்.
அன்புடையவர்
வாங்குவாரா?
அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும்
தமக்கே சொந்தம் என நினைப்பர்.
அன்புடையவர் தம் உடல் எலும்பைக்கூட
பிறருக்குச் சொந்தமாக்க நினைப்பர். இதனை,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள்
- 72)
என்பர்
திருவள்ளுவர். அன்புடைய எவரும் வராட்சணை வாங்கமாட்டார்.
இத்தனை காலம் ஒரு பெண்ணை
வளர்த்து, பாதுகாப்பாக வைத்திருந்தார் என்ற ஒன்றை நினைத்தாலே
போதும். மேலும் நம் வீட்டிற்கு
விளக்கேற்ற – வாழ்வுக்குத் துணையாக வருகின்ற ஒரு
பெண்ணுக்கு வரதட்சணை கேட்க அன்புடைய எவரும்
சம்மதிக்க மாட்டார். அன்பில்லாதவரே வரதட்சணை கேட்பார். வரதட்சணை கேட்பவரை அன்பில்லாதவர்கள் என்று வெறுக்க வேண்டும்.
அருளும்
அன்புமில்லாப் பொருள்
வரதட்சணை கொடுப்போர் யாவரும் அருளும், அன்பும்
கொண்டு பொருள் தருவது கிடையாது.
எனவே, இதனை வாங்கக் கூடாது
என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும்.
திருவள்ளுவரும்,
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் (குறள்
- 755)
என்று
கூறுகிறார்.
வாங்குவது
பாவமே!
வரதட்சணை வாங்குவது பாவம் என்பதனை ஒவ்வொருவரும்
உணரவேண்டும்.
துன்பம்
- துன்பமே தரும்
வரதட்சணை கேட்டுத் துன்பம் செய்பவர்க்குத் துன்பம்
தானே வரும் என்பதை உணர
வேண்டும். பிறருக்குத் துன்பம் செய்தவர்க்கே துன்பம்
வரும். ஆகவே, தான் துன்படக்கூடாது
எனக் கருதுபவர் பிறருக்குத் துன்பம் செய்யமாட்டார். இதனை,
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர் (குறள்
- 320)
என்று
திருக்குறளும் கூறுகிறது.
அறிவினால்
பயன் உண்டா?
நல்ல அறிவு பெற்றவர்
எவரும் வரதட்சணை வாங்கமாட்டார். தாம் பெற்ற அறிவைக்
கொண்டு மற்றவரின் நிலையை அறிந்து வரதட்சணை
வாங்கக் கூடாது. பிறர் துன்பத்தை
அறிந்து அதனைத் தம் துன்பம்
போல் நினைக்க வேண்டும். இதனை
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை (குறள்
- 315)
என்னும்
குறளும் உறுதிப்படுத்துகிறது. எனவே வரதட்சணை வாங்காமல்
வாழ ஒவ்வொருவரும் முயலவேண்டும்.
தம்மக்களுக்கும்
துன்பம்
வரதட்சணை வருத்தி வாங்குவோருக்குத் தொடர்ந்து
அவர் மக்கட்பேற்றுக்கு இத்துன்பம் வரும் என்பதை உணர்ந்தால்
வரதட்சணை வாங்கமாட்டார்கள். இவ்வளவு வரதட்சணை வாங்கிக்கொண்ட
உன் பிள்ளைகளுக்கும் நீ இவ்வளவு தரவேண்டும்
என்பதை நினைத்துப்பார் என்று பேச்சு வழக்கில்
சிலர் கூறுவதும் உண்டு. ஆனால் அது
எடுபடவில்லை. ஆனால்
'தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் (குறள்
- 63)
எனும்
குறளை எடுத்துக் கூறினால் ஒழிய வரதட்சணையை ஒழிக்க
முடியாது.
முடிவுரை
மேற்கண்ட கட்டுரையின் மூலம் சில முடிவுகளைக்
காணலாம்.
1. பொருள்வளம்
வரதட்சணை மூலம் வரும் என்ற
நம்பிக்கையை விட்டு விட வேண்டும்.
2. வரதட்சணை
பெருமை தரும் என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
3. நெறி
தவறிய வழியில் வரும் வரதட்சணை
அறத்தைப் பெருக்காது இன்பத்தைக் கெடுக்கும்
4. வரதட்சணை
நல்ல வழியில் வரும் பொருள்
கிடையாது.
5. அன்புடையவர்கள்
வரதட்சணை வாங்க மாட்டார்கள்
6. அன்பும்,
அருளும் இல்லாமல் வரும் வரதட்சணையை வாங்கக்
கூடாது.
7. வரதட்சணை
கேட்டுத் துன்பம் செய்வோர்க்குத் தானே
துன்பம் வரும்
8. அறிவுடையவர்கள்
வரதட்சணை வாங்க மாட்டார்கள்.
9. தம்
மக்களுக்குத் துன்பம் வரும் என்று
நினைப்பவர் வரதட்சணை வாங்க மாட்டார்.
கட்டுரை
– 2
முன்னுரை
வையகத்தில் அமைதியைக் குலைத்து வரும் பல்வேறுபட்ட சிக்கல்களுள்
ஒன்று கொலை. நாள்தோறும் செய்தித்தாள்களிலும்,
வானொலி, தொலைக்காட்சிகளிலும் கொலை பற்றிய செய்திகளைக்
கேட்கிறோம். இத்தகைய கொலைகளை இருவகைப்படுத்தலாம்.
1. கொலை செய்தல் 2. தற்கொலை
கொலை
செய்தல்
கொலை செய்யும் எண்ணம்
மனிதனுக்கு வரக்கூடாது. அப்படி வருகின்றதென்றால் அவனிடம்
அருளும், அன்பும் இல்லை என்று
பொருள்.
கொலைகள் நடைபெறுவதை மூன்று
வகையாகப் பிரிக்கலாம். அவை 1. பொருள் நோக்கம்
2. கோபத்தின் விளைவு 3. தகாத உறவு.
பொருள்
நோக்கம்
பொருள் அதிகம் வேண்டும்
என்ற ஆசை எண்ணத்தில் கொலைகள்
பெருமளவு செய்யப்படுகின்றன. வரவுக்கு மீறி செலவு செய்யும்
போது, தேவை கருதி ஏமாற்றும்
நோக்கில், கொலைகள் செய்யப்படுகின்றன. வாணிகத்தில்
பொருள் பங்கீடு காரணமாக கொலைகள்
செய்யப்படுகின்றன. சகோதர – சகோதரி உறவுகளில்
நிலம் - பொருள் பங்கீட்டில் பெரும்
ஆசையினால் கொலைகள் செய்யப்படுகின்றன.
மேற்கண்ட வகையில் நடைபெறும் கொலைகள்
சமூகத்தில் நடைபெறக்கூடாது என்றால் அதற்கு ஒரே
வழி வள்ளுவமே.
பொருள்
மீது அதிக ஆசை
பொருள் பெருமளவு சேர்க்க
வேண்டும் என்ற எண்ணம் தேவைதான்.
ஆனால், அறத்துடனான நிலையில் பொருள் சேர்க்க வேண்டும்
என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி
சேர்க்க நினைக்கும் எண்ணம் உண்டானால் பொருளுக்காக
எந்த ஒரு மனிதனும் கொலை
செய்யமாட்டான். எனவே,
நன்றே தரினும் நடுவிகந்தாம்
ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (குறள்.
113)
என்னும்
திருக்குறள் நெறிப்படி வாழ்வை, மக்கள் அமைத்துக்கொண்டால்
அதிகமாக பொருள் சேர்க்கும் எண்ணத்தினால்
உண்டாகும் கொலைகள் ஒழியும்.
தேவைக்கு
ஏமாற்றுதல்
ஏமாற்றுதல் என்பது பலவகைகளில் நடந்தாலும்,
தன் வரவைக்கருதி செலவு செய்யாமல் போகும்போது
பெரும்பாலும் ஏமாற்றுகின்றனர். அதில் சிக்கல்கள் அதிகமாகும்போது
ஒருவரை ஒருவர் கொலை செய்யத்
துணிகின்றனர். எனவே, தன் தேவை
கருதி வரவுக்கு ஏற்ற் செலவு செய்யவேண்டும்.
திருவள்ளுவரும்,
ஆகாறு அளவிட்டி தாயினும்
கேடில்லை
போகாறு அகலாக் கடை (குறள்
- 478)
என்று
நமக்குக் கூறியுள்ளார். இக்குறள் நெறிப்படி செலவு அதிகமானால் கேடு
உண்டு. அந்தக்கேடே கொலை செய்யும் எண்ணத்தைத்
தூண்டுகிறது.
வாணிகத்தில்
முறைகேடு
வாணிகம் செய்பவர்களில் சிலர்
பெரும் பணக்காரனாக வேண்டும் என்ற நோக்கிலும், பெரும்
நட்டம் ஏற்பட்டுவிட்டால் சமாளிக்க முடியாமல் போகும் நிலையிலும் ஏமாற்றும்
நோக்கிலும் கொலைகள் செய்கின்றனர். இது
முறையல்ல. இப்படிப்பட்ட நிலை ஏற்படக் கூடாது
என்பதற்காகத்தான் திருவள்ளுவப் பெருந்தகை,
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்
பேணிப்
பிறவும் தமபோல் செயின் (குறள்
- 120)
என்றார்.
வாணிகம் செய்பவர்கள் பிற வணிகர்களைத் தம்
நிலைபோல நினைக்கவேண்டும். இதனால் வாணிகத்தால் ஏற்படும்
கொலைகளைத் தவிர்க்கலாம்.
குடும்பப்
பொருள் பங்கீடு
குடும்பங்களில் நிலம் பங்கீடு காரணமாகத்
தாய் - தந்தை – சகோதரிகளிiடையே
விரிசல் ஏற்பட்டு கொலை செய்து உடலை
புதைக்கும் நிலைக்கு மக்கள் செல்வதைக் காண்கிறோம்.
இதுதான் குடும்பப் பண்பா? இதை மாற்ற
என்ன வழி? நடுவுநிலையுடன் பொருள்
பங்கீடு செய்து வாழ்ந்தால் வாழ்வு
நலமாக – வளமாக அமையும்.
இதைப்பெற்றோர்களும், சகோதர, சகோதரிகளும் உணரவேண்டும்.
நடுவுநிலைமை தவறி பங்கீடு செய்து
பொருள் வளம் பெற்று வாழ
நினைத்தாலே கேடு தனக்கு மட்டுமன்றி,
தன் மக்கட்பேற்றுக்கும் உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இதனையே திருவள்ளுவர்,
செப்பம் உடையவன் ஆக்கம்
சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து (குறள் - 112)
என்கிறார்.
நடுவுநிலைமையோடு வாழ்பவர் பெற்ற வளர்ச்சிகள் அழியாமல்
நின்று அவருடைய தலைமுறையினருக்கும் பாதுகாப்பைத்
தரும். திருவள்ளுவரின் கருத்தை குடும்ப பொருள்
பங்கீடும்போது நினைத்து நடந்தால் கொலைகள் உண்டாவதைத் தவிர்க்கலாம்.
தற்கொலை
தன்னால் இனி வாழமுடியாது
– வாழ்வது கூடாது என்ற கையாலாகாத
நம்பிக்கையின்மையால் உருவாவதே தற்கொலைகள். தற்கொலைகள் உண்டாவதற்குக் காரணங்கள் சில. அவை. 1. கடன்
தொல்லை, 2. வறுமை, 3. நினைத்தது பொறாமை, 4. வேலையில்லா திண்டாட்டம், 5. ஒழுக்க மின்மை 6. மரியாதைச்
சிக்கல்
கடன்
தொல்லை
அளவுடன் வாழும்போது கடன்
இருக்காது. அளவு மீறி செலவு
செய்வதால் கடன் உண்டாகின்றது. கடன்
தொல்லை அதிகமாகும்போது மனத்தின் இன்பம் குறைந்து துன்பம்
உண்டாகின்றது. கடைசியில் இருப்பதைவிட இறப்பதே. மேல் என்ற முடிவுக்கு
வந்து, மக்கள் உயிர் இழக்கத்
துணிகின்றனர். இத்தகைய தற்கொலை நிகழாவண்ணம்
செய்ய வேண்டுமானால், அதற்கு ஒரே வழி
திருக்குறளைப் படித்து வழியில் வாழ்வது
தான், அதாவது,
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள்
- 479)
என்னும்
குறளுக்கு ஏற்ப அளவறிந்து வாழ
வேண்டும். மேலும்,
ஆகாறு அளவிட்டி தாயினும்
கேடில்லை
போகாறு அகலாக் கடை (குறள்.
478)
என்னும்
குறளுக்கேற்ப செலவு, அதிகமாக இருக்காமல்
பார்த்து வாழும் நெறியைப் பின்பற்ற
வேண்டும். மேற்கண்ட இரு குறள்கள் நெறிப்படி
வாழ்வதால், கடன் தொல்லையால் தற்கொலை
செய்துகொண்டு உயிரிழக்கும் மக்களைக் காப்பாற்றலாம்.
வறுமை
வறுமை என்னும் கொடிய
நோயினைக் கண்டும், வறுமை தாங்க முடியாமலும்
பல பெண்கள், ஆண்கள் தற்கொலை செய்து
கொண்டு உயிரிழப்பதைச் செய்தித்தாள்களிலும், வானொலி மூலமும் அறிகின்றோம்.
வறுமையின் உச்சக்கட்டம் ஏன் வந்தது? வறுமையைப்
போக்க ஏன் மக்கள் தவறுகின்றனர்?
வறுமை வறுமா? இத்தகைய கேள்விகளுக்கு
மக்கள் விடையளிக்க முன்வர வேண்டும்.
வறுமையின் உச்சக்கட்டம் வரக்காரணம் திட்டமிட்ட உழைப்பின்மையே. வறுமையைப் போக்க உழைப்பே காரணம்
என்பதை உணரவேண்டும். வறுமை வருகின்றது என்றால்
சோம்பலே அதற்கு வழி. சோம்பலோடு
உழைக்காதவர்க்கே வறுமை, உண்டாகும். திருவள்ளுவர்,
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். (குறள் - 1040)
என்றார்.
இல்லை என்று கூறும் மனிதர்களை
உயிரே இல்லாத நிலமகளும் சிரிப்பாள்
என்றார். மேலும்,
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்த
ஆள்வினை இன்மை வழி (குறள்
- 618)
என்ற
திருக்குறள் ஊனமிருந்தாலும் அறிவுக்கு ஏற்ற வினைகளை செய்யாதபோதுதான்
பழி என்று கூறுவதைக் காணலாம்.
எனவே, வறுமை என்று சொன்னாலும்,
கேவலம் ஊனமாய் பிறந்தாலும் உழைக்க
வேண்டும் என்னும் திருக்குறள் நெறிப்படி
மக்கள் வாழ்ந்தால், வறுமை என்று கூறிக்கொண்டு
தற்கொலை செய்துகொள்ளும் வாழும் மக்களைக்காப்பாற்றலாம்.
நினைத்தது
பெறாமை
நான் நினைத்தது நடைபெறவில்லை.
எனவே, நான் வாழ்வதில் பலன்
இல்லை என்று பல மக்கள்
தற்கொலை செய்து கொண்டு மடிகின்றனர்.
உயிரைத் துச்ச மென்று மதித்து,
தன் வாழ்வை அழித்துக் கொள்வோருக்கு
ஒரே வழி வள்ளுவமே.
எல்லாhர்க்கும் எல்லாமும்
கிடைப்பதில்லை. மக்களின் வினைக்கு ஏற்ப வாழ்வின்
சிறப்புகள் அமைகின்றன என்பதைக் கருத்தில் கொண்டும்,
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (குறள்
- 377)
என்னும்
குறளை நோக்கவேண்டும். இக்குறள்படி நமக்குரியதைத்தான் நாம் அனுபவிக்க முடியும்.
முடியாமல் போவதை எண்ணி மனம்
தளரக்கூடாது என்னும் கொள்கையினை உள்ளத்தில்
உறுதிகொள்ள வேண்டும்.
வேலையில்லா
திண்டாட்டம்
என் படிப்புக்கேற்ற வேலை
கிடைக்க வில்லை என்றும், இளைஞர்களில்
பலர் மன வருத்தம் கொண்டு
தற்கொலை செய்து உயிர் இழப்பதை
இந்த மண்ணிலே பார்க்க முடிகின்றது.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்தற்குப்
பல காரணங்கள் உண்டு. அவற்றுள் சில.
அதிக உழைப்பின்னை, குறைவான பணியிடங்கள், படித்தோர்
எண்ணிக்கை அதிகம் என்பனவாகும். எனவே,
அதிக உழைப்பின்றி, பணியிடங்கள் குறைவாகவும் படித்தோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளத்தாலும் படிப்புக்கேற்ற
வேலை கிடைக்குமென்று ஏங்கி, வாழ்வை அழித்துக்கொள்ள
கூடாது. இல்லையெனில் அதிக உழைப்புடன் போட்டியிட்டால்,
தான் நினைத்த பணி கிடைக்கும்.
இதனை,
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும் (குறள். 619)
என்னும்
குறள் மூலம் உணரலாம்.
வேலை கிடைக்கவில்லையே என்று
மனம் தளர்ந்து போவதற்குக் காரணம் கோழைத் தனம்
ஒன்றெ எனலாம். நாட்டில் வேலை
இல்லை என்று கூறமுடியுமா? ஊடல்நோகாமல்
வேலை செய்ய வேண்டும் என்றும்,
நிழலில் அதாவது மின்விசிறி காற்றினுடன்
வேலை தேடுவோர்க்கே வேலை இல்லை என்ற
எண்ணம் தோன்றும். இதனைத்தான் திருக்குறள்
அறிவறிந்த ஆள்வினை இன்மை பழி
என்று
கூறுகிறது. தும் அறிவுக்கு ஏற்றவேலைகளைச்
செய்தால் வேலையில்லை என்று தற்கொலை செய்துகொள்ளும்
மக்களைக் காப்பாற்றலாம்.
ஒழுக்கமின்மை
பாலுறவில் ஒழுக்கமின்மை, பொருள் சேர்ப்பதில் ஒழுக்கமின்மை,
மாணவர்களின் ஒழுக்கமின்மை என ஒழுக்கம் தவறி
வாழும் மனிதர்கள், தவறு வெளிப்படும் நேரத்தில்
தற்கொலை செய்து கொள்வதைக் காண்கிறோம்.
எனவே, ஒவ்வொருவரும் வாழ்வில் எந்தப் பணியைச் செய்தாலும்,
அறத்தின் வழிப்பட்ட ஒழுக்கத்தோடு வாழும் போது எந்தப்
பிரச்சனையும் வராது. இதனையே,
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி (குறள் - 137)
என்று
திருவள்ளுவர் கூறுகிறார்.
மரியாதைச்
சிக்கல்
தன்னை, இன்னார் தரக்குறைவாக
விட்டார். இழிவுபடுத்திவிட்டார் என்று மனத்தில் துன்பங்களைத்
தேக்கிக்கொண்டு, தற்கொலை செய்துகொள்வதைப் பார்க்கிறோம்.
தந்தை மகனுடன் பேசுதல், ஆசிரியர்
- மாணவருடன் பேசுதல், கணவன் - மனைவியுடன் பேசுதல்,
முதலாளி – தொழிலாளியுடன் பேசுதல், உடன்பிறந்தாருள் பேச்சுப்பிரிவினை என பல நோக்குகளில்
'மரியாதைக் குறைவு, என்ற பெயரில்
சிக்கல் தோன்றுகின்றது. இதனால் பெரிதுபடுத்திக் கொண்டு
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மக்களின் மனம் மாறுகிறது. இதற்குத்
தீர்வ திருக்குறளே வழி
ஒழுக்கமாக வாழ்பவர்க்கும் நல்ல வினையாண்மை, நல்ல
அறிவாண்மை உள்ளவர்க்கும் மரியாதை குறையாது, ஆகவே,
ஒழுக்கத்தோடு வினை, அறிவாற்றலை உடைய
எவருக்கும் மரியாதைக் குறைவாக சிலர் பேசுகின்றார்கள்
- நினைக்கின்றார்கள், என்றால் அதற்குக் காரணம்
நாம்தான் என்பதை உணரவேண்டும். அதை
விடுத்து தற்கொலை செய்துகொள்வது கையாலாகத்
தன்மை ஆகும். இதனையே,
'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்பர்
திருவள்ளுவர். அறிவுடையவரை அனைவரும் விரும்பி ஏற்றுக்கொள்வர். அப்போது மரியாதைக் குறைவு
ஏற்படாது என்பதை உணரவேண்டும். மேலும்,
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த
தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் (குறள்
- 150)
என்ற
திருவள்ளுவரின் கூற்று ஆழமாக எண்ணத்தக்கது.
பல தீமைகள் வந்தாலும் நல்லாரின்
தொடர்பை விடக்கூடாது என்று பலரும் நல்லார்களைத்
தேடுவர். எனவே, நல்லவர்களுக்கு மரியாதைக்
குறைவு ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும், பொறுத்துக்கொள்ளும் பண்பு தானாகவே அவரிடத்தில்
அமைந்திருக்கும்.
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்
பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ் (குறள்
. 156)
என்ற
குறள்படி பொறுத்துக்கொள்ளும் பண்பு தாமே அமையும்.
முடிவுரை
மேற்கண்டவற்றிலிருந்து சில முடிவுகளைக் காணலாம்.
1. கொலை
செய்வதைத் தடுக்க திருக்குறளால் முடியும்.
2. பொருள்
ஆசைத்தவிர்த்து நல்ல வழியில் சேர்க்கும்
எண்ணம் வரின் கொலை தவிர்க்கலாம்.
3. வரவு
அதிகமானாலும் செலவு அதிகமாகக் கூடாது
எனும் குறள் நெறிப்படி வாழ,
தேவைக்குக் கொலை செய்யும் போக்கைத்
தவிர்க்கலாம்.
4. வாணிகத்தில்
பிறவும் தம்போல் செயும் குறிக்கோள்
உண்டாயின் வாணிகத்தில் ஏற்படும் கொலைகளை ஒழிக்கலாம்.
5. குடும்பப்
பொருள் பங்கீட்டில் ஏற்படும் கொலைகளை ஒழிக்க 'எச்சத்திற்கு
ஏமாப்பு உடைத்து' என்னும் குறள் நெறியைப்
பின்பற்ற வேண்டும்.
6. கடன்
தொல்லைகளில் ஏற்படும் தற்கொலை, தவிர்க்க, அளவறிந்து வாழதான் வாழ்க்கை எனும்
குறள் நெறியைப் பரப்ப வேண்டும்.
7. வறுமையால்
தற்கொலை செய்வோரை தவிர்க்க 'இலமென்னும்' 'பொறியின்மையார்க்கும்' என்னும் குறள்களைக் கூறி
மாற்றிட வேண்டும்.
8. தான்
நினைத்தது நடைபெறவில்லை என்பதால் தற்கொலை செய்வதைப் போக்க
வகுத்தார். 'வகுத்த' எனும் குறள்நெறியை
உணர்த்த வேண்டும்.
9. வேலையில்லை
என்று தற்கொலை செய்து உயிரிழப்போரைத்
தடுக்க 'தெய்வத்தால் ஆகாதெனினும்' குறள்நெறிகளைப் பரப்பவேண்டும்.
கட்டுரை
– 3
முன்னுரை
ஊலகமெலாம் உருவாகிவரும் பெரும் சிக்கல்களுள் ஒன்று
வேலைவாய்ப்பின்மை, குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணங்கள் ஒன்றாக இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மையே
என்று நீதிபதி தலைமையிலான உயர்மட்டக்
குழு ஆய்வு செய்து அறிக்;கை வெளியிட்டுள்ளது. இந்த
வேலைவாய்ப்பின்மையை எள்ளிப்புதுக்கவிதைகள் ஏராளமாக, வந்துள்ளன.
தந்தை, மகனிடம் என்னுடையதையும்
பதிவுசெய்துவிட்டு வா என்பதாகப் புதுக்கவிதையில்
குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படங்களும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையை எடுத்துக் கூறுகின்றது. சரியான வேலையில்லாததால் பல
இளைஞர்களுக்கு மனநோய், உண்டாகின்றது. கறித்த
வயதில் திருமணம் நடைபெறுவதில்லை. மேலும், உடன் பிறந்தோர்களும்
பாதிக்கின்றனர். பெற்றவர்களும் தம் பிள்ளைகள் இப்படி
சீரழிகின்றார்களே என்று வருந்துகின்றனர். மற்றும்
நாட்டில் கலவரங்கள், திருடுகள், வன்முறைகள் ஏற்பட பணத்துக்கு அடிமையாகின்றனர்.
வேலையில்லை என்று கூறிக்கொண்டு தன்வாழ்வையும்,
குடும்பமரியாதையும், நாட்டின் அமைதியையும் கெடுக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது திருக்குறள். வேலை வாய்ப்பு என்பதை
விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
வேலையும்
கல்வியும்
நாட்டில் படித்தோர்களின் எண்ணிக்கைப் பெருகுகின்றது. இன்றைக்கு படிக்காதவர்களைக் காட்டிலும் படித்தவர்களே நாட்டின் அமைதியைக் கெடுப்பதாக மக்களில் சிலர் குறைபட்டுக்கொள்கின்றனர். இதை நாம்
ஒப்புக்கொள்ள மனம் தயங்கினாலும் ஏற்றுக்
கொள்ள வேண்டியுள்ளது. நல்ல வேலை கிடைத்தால்தான்
செல்வேன் என்று படித்தவர்கள் பலர்
சோம்பேறிகளாக வீட்டில் உள்ளனர். இவர்கள், தனக்கு மரியாதை, அதிகப்
பணம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் பணி
கிடைக்கும் என்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனால், இவர்கள் வயது தான்
முத்துப்போகும். இதனை உணர்ந்து படித்த
இளைஞர்கள், தான் படித்ததற்கு ஏற்ற
பணி கிடைத்தால மகிழ்வுடன் செய்யவேண்டும். இல்லையெனில், தனக்குத் தெரிந்தபணி செய்து தன்னைக் காத்துக்
கொள்ளவும். பெற்றோரைக் காக்கவும் தயாராக வேண்டும். தன்
ஒத்த வயதினர்கள் நல்ல பணியில் இருந்த
அதிக பணம் சம்பாதித்தாலும், தனக்குத்
தெரிந்த பணிசெய்து தானும், தன் பெற்றோரும்
எளிமையாக வாழ்வது பெருமையைத் தரும்.
புடித்த இளைஞர்கள் அரசின் வேலையையே நம்பாமல்
தானாகவே பணிசெய்ய முன் வரவேண்டும். மேலும்,
இளைஞர்கள் தனக்குத் தெரிந்த பணிசெய்ய முன்வரவேண்டும்
என்பதற்கு ஐந்து வகையான திருக்குறள்
நெறிகளை அடையாளங் காணலாம்.
உழைக்கும்
எண்ணம்
மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் உழைக்க
வெண்டும். உழைத்தால்தான் உணவு என்ற கொள்கையை,
இளம் வயது முதலே பெற்றோர்கள்
தம் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். தன் மெய் வருந்த
உழைத்து அதனை உண்ணும் எண்ணம்
இளைஞர்களுக்கு உண்டாகவேண்டும். காமத்து
No comments:
Post a Comment