குலசேகரர் விரும்பும் அடியார்க்கு அடியேன்
குலசேகரர் பெருமாளிடத்திலே பேரன்பு கொண்டவர். அதுமட்டுமின்றி அடியார்களிடத்தும் மிகுந்த அன்புடையவர். இது குறித்து அவர் திருமாலின் அடியார்க்கும் அடியேன் என்று தம் பாடல்களில் பதிவு செய்துள்ளார். இது குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காணமுற்படுகிறோம்.
கடவுள் பெயரை வாய்படைத்தன் பயன்பெறச் சொன்னவர்கள்
அரங்கனை வாழ்த்திஇ வணங்கிஇ அன்பு கொண்ட மனத்தினையுடையவராய் அதனால் ஆடலுடன் வாய் மூலம் கடவுளின் பெயரைக் கூறி மெய் மறந்திருக்கும் அடியார்களின் குழுவைப் பார்த்தால் கண் படைத்ததின் பயன் ஆகும்.
வாட்டம் இல் வனமாலை மார்வனை
வாழ்த்தி மால் கொள்சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு
எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
காணும் கண்பயன் ஆவதே. (நாலா. 658)
தொண்டர் அடி தூளியே போதும் கங்கை நீராட வேண்டா
திருமகளின் கணவனும் மராமரங்களைத் துளைத்தவனும்இ பசுக்கூட்டங்களை மேய்த்தவனுமான கண்ணனை ஆடிப்பாடி அரங்கா என்று கூவி ஆடிப்பாடும் தொண்டர்களின் அடித்தூளிகளிலே நாம் ஆடினால் கங்கையில் குளிக்க வேண்டும் என்னும் ஆசையே வேண்டாம்.
நீடு மாமரம் செற்றதும் நிரை
மேய்த்ததும் இவையே நினைத்து
ஆடிப்பாடி அரங்க! ஓ! என்று
அழைக்கும் தொண்டர் அடிப்பொடி
ஆட நாம்பெறில்இ கங்கைநீர் குடைந்து
ஆடும் வேட்கை என் ஆவதே. (நாலா. 659)
தொண்டர்களின் திருவடி சேற்றை நெற்றியில் தரிப்பேன்
நப்பின்;;னைக்காக ஏழு எருதுகளைக் கொன்றதும்இ நிலத்தைத் தந்தத்தினால் குத்தியதும்இ இராவணனைக் கொன்றதும் இந்திரன் பொருட்டு உலகளந்ததும் பாடிஇ காவிரி போல் கண்ணீரினால் அரங்கனின் கோயிலில் சேறாக்குகிற தொண்டர்களின் திருவடிகளால் மிதிக்கப்பட்ட சேற்றை என் நெற்றியிலே தரிப்பேன் என்பர் குலசேகரர்
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம்
கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்
சொல்லிப் பாடி வண் பொன்னிப் பேர்
ஆறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறுசெய் தொண்டர் சேவடிச் செழுஞ்
சேறுஎன் சென்னிக்கு அணிவனே. (நாலா. 660)
நாத்தழும்ப எழு நாரணா எனும் தொண்டர் சேவடி
தயிரையும் வெண்ணெயும் பாலையும் உண்டுஇ யசோதையால் பிடிபட்டவனை கண்ணனை ஆடியும் பாடியும்இ ஆட்பட்டு நாக்குத் தடிக்கும்படிப் போற்றி வணங்கும் அடியவர்களை மனம் துதித்துப் பல்லாண்டு பாடும் என்பர் குலசேகரர்.
தோய்த்த தண்தயிர் வெண்ணெய் பாலுடன்
உண்டலும் உடன்று ஆய்ச்சிகண்டு
ஆர்த்த தோளுடை எம்பிரான் என்
அரங்கனுக்கு அடியார்களாய்
நாத்தழும்ப எழு நாரணா! ஏன்று
அழைத்து மெய்தழும்பத் தொழுது
ஏத்தி இன்ப உறும் தொண்டர் சேவடி
ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே. (நாலா. 661)
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து மெய்சிலிர்க்குமே
நாகத்தை நசுக்கியவனும்இ வலிமையான கற்கள் சூழ்ந்த திருவரங்கனை நெஞ்சில் நினைத்து மயி;ர் கூச்செறியும் மெய்யுடைய அடியார்களையே என் நெஞ்சு நினைத்து மயிர் கூச்செறியப்படுகிறது என்பர் குலசேகரர்;.
பொய்ச்சிலைக் குரல் ஏற்று எருத்தம்
இறுத்துப் போர் - அரவ ஈர்த்த கோன்
செய்சிலைச் சுடர்சூழ் ஒளித்திண்ண
மாமதில் தென்அரங்கனால்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து
என்மனம் மெய்சிலிர்க்குமே (நாலா. 662)
பக்தி இல்லாப் பாவிகள் உய்ந்திட நன்னெறி காட்டிய அரங்கன் தொண்டர்க்கு
முதலுக்கும் முடிவுக்கும் காரணமாய்இ எக்காலத்தும் ஒரே நிலையில் வாழ்ந்தும்இ எல்லாப் பொருளிலும் நின்றும் இருக்கின்ற பெருமாள்இ பக்தி இல்லாதப் பாவிகளுக்கும் நன்னெறி காட்டுகின்றான். அத்தகைய கண்ணனைப் பாடிய தொண்டர்களுக்கு எப்பிறப்பிலும்அன்பு செய்யும் என்பர் குலசேகரர்.
ஆதிஅந்தம் அனந்தம் அற்புதம்
ஆனவானவர் தம்பிரான்
பாத மாமலர் சூடும் பத்தி
இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நன்னெறி காட்டி எங்கும்
திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்
காதல் செய்யும் என் நெஞ்சமே (நாலா. 663)
அடியார்களின் இரண்டு திருவடிகளில் மனம் அன்புடையது
கருமுகில் மேனியும்இ ஒளிமுத்துப் பற்களும்இ சிவந்த வாயும்இ திருத்துழாய் மாலை அணிந்தவனுமான அரங்கனை அணுகி நுகர வேண்டும் என்றவராய் அன்பு பெருக்காலே கரைந்து கண்ணீர் பெருகி நிற்கும் அடியார்களின் இருதிருவடிகளிலும் என்மனம் அன்புடையதாகும் என்பர் குலசேகரர்.
கார்இனம் புரைமேனி நற்கதிர்
முத்த வெண்ணகைச் செய்ய வாய்
ஆரமார்வன் அரங்கன் என்னும்
அரும்பெருஞ்சுடர் ஒன்றினைச்
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து
கசிந்த இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு
வாரம் ஆகும் என்நெஞ்சே. (நாலா.664)
தொண்டர் வாழ்வுக்கே உற்றது என் நெஞ்சமே
திருப்பாற்கடலிலே பள்ளிக் கொண்டவனும்இ திருத்துழாய் மாலை அணிந்தவனுமான பெருமாள் மீது அன்புடன் கூத்தாடிப் பாடிப் பித்தேறித் திரியும் அடியவர்களின் வாழ்வுயர்வுக்கே என்மனம் அன்புகொண்டிருக்கிறது என்பர் குலசேகரர்.
மாலை உற்ற கடற்கிடந்தவன்
வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை உற்றவரைப் பெருந் திரு
மார்வனை மலர்க்கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்
திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே. (நாலா. 665)
பற்றில்லாதவர்கள் பித்தரே
பெருமாளை நினைத்து கண்ணீர் பொழியவும்இ உடல் மயிர்க் கூச்செறியவும்இ ஏங்கித் தளர்ந்து கூத்தாடி ஒரே இடத்தில் நில்லாமல் பலவகை ஆட்டம்இ பாட்டம் செய்து வணங்கி வரும் பக்தர்கள் என் தந்தை அரங்கனுக்கு அடியராகச் செய்வதை பித்தர் என்பர். உண்மையிலேயே அவர்கள் பித்தர் அல்லர் பக்தியில்லாதவர்களே பித்தர் என்பர் குலசேகராழ்வார்.
மொய்த்துக் கண் பனிசோர மெய்கள்
சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து
ஆடிப்பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி
யார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்
மற்றையார் முற்றும் பித்தரே (நாலா. 666)
முடிவுரை
கடவுள் பெயரைக் கூறுவதால் வாய்ப் படைப்பும் பொருளாகும் என்பதையும்இ தொண்டரடி தூளியே போதும் கங்கை நீராட்டம் வேண்டாம் என்பதையும்இ தொண்டரடி சேறு நெற்றியில் அணிவேன் என்றும்இ நாத்தழும்ப போற்றும் தொண்டரையும்இ தொண்டரையே மெய்சிலிர்க்கும்இ அடியார்களின் திருவடிகளையே மனம் விரும்பும்இ தொண்டர் வாழ்வுக்கே உற்றது என் நெஞ்சம்இ பற்றுடையவர்கள் பித்தர்கள் அல்லர் என்றும் தொண்டர்களின் பெருமையை குலசேகரர் கூறுவதை இக்கட்டுரையில் காணமுடிகின்றது.
No comments:
Post a Comment