பெரியாழ்வார் பாசுரங்களில் செங்கீரைப் பருவம்
பெரியாழ்வார் கண்ணன் பிறந்து வளர்வதை மனசில் நிறுத்தி செங்கீரைப் பருவத்தில் கண்ணனை நினைத்து பாடல் பாடியுள்ளார். இதில் கண்ணனின் சிறப்புகள் பலவற்றைக் குறிப்பிடுவர்
ஊழிக்காலமும் காத்தலும்
ஊழிக்காலத்தில் உயிர்களை வதைத்துக் காக்கும் மணிவயிற்றை உடையவனே! மாறிவரும் ஊழிதோறும் உலகை விழுங்கி ஆலில் துயின்ற இறைவனே என்பர் பெரியாழ்வார். தாமரை பொன்ற விழியும், மை போன்ற கரிய மேனியையும் உடைய கண்ணா எனக்காக செங்கீரை ஆடியிருக்க என்பர். உருவங்களைக் கூறி செங்கீரையாட அழைப்பதை இதில் காணலாம்.
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
ஊழிதொறு ஊழிபல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே (நாலா. 64)
அரிஉருவும், மலையைக் குடையாக்கியும்
கண்ணன் குழந்தையை செங்கீரையாட அழைக்கும் போது அவனின் அரி உருவம் எடுத்ததையும் மலையைக் குடையாக்கிக் காத்ததையும் ஆழ்வார் குறிப்பிடுகின்றார். சிங்க உருவங்கொண்டு இரணியன் தடித்த உடல் குருதி குழம்ப, தன் கூறிய நகங்களால் மார்பைக் கிழித்துக் குடைந்தவனே என்றும், கருமேகங்கள் கல் மழை பொழிய, அந்த மலையை குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்தவனே, என் விருப்பத்திற்காக ஒரு முறை செங்கீரை ஆடியிருக்க என்பர் ஆழ்வார்.
கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பிஎழ
கூர் உகிரால் குடைவாய்
காள நன் மேகமவை கல்லெடு கால்பொழியக்
கருதிவரை குடையாக் காலிகள் காப்பவனே (நாலா. 65)
திருவடிகளால் அளந்தவனே – ஏழு காளைகளை வென்றனே!
நாலுவகை வேதங்களுக்கும் பொருளானவன் நீ. பிரம்மனுக்குத் தாயானவன். முண்ணையும், விண்ணையும் திருவடிகளால் அளந்தவன். அதுமட்டுமா குவலயாவீட யானையும், ஏழு காளைகளும் உ;னனைக் கொல்லக் கூடி அடைந்தபோது, அவற்றை வென்ற பொருமானே! எனக்காக செங்கீரை ஆடுக என்பார் பெரியாழ்வார். வேதமும், பிரமனுக்குத் தாயும் நீயே என்பதுடனும் யானை, ஏழுது எருதுகளை வென்ற அரிய செயல்களையும் இவற்றுடன் இணைத்துக் கூறும் பாங்கைக் காணலாம்.
நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே நாவியுள்
நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே! துரணி தலமுழுதும் தாரகையின் உலகும்
தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ்விடையும் (நாலா. 66)
சகாடாசுரன் - பூதனை – கபிதாசூரன் எதிர்ப்பு
கண்ணா எனக்காக செங்கீரை ஆடு என இரந்து கேட்கும் ஆழ்வார் கண்ணனின் அரிய எதிர்ப்பையும் கூறி அதில் வெற்றிபெற்ற விவரத்தையும் கூறுகிறார். தேவர்கள் மகிழும்படி பல செயல்கள் செய்தாய். குறிப்பாக, சகடாசுரன் உருண்டு, வருமாய்ந்து போம்படி செய்தாய். வஞ்சப் பேய் பூதனையின் நச்சுப்பாலை உண்டு அவன் உயிரை அழித்தாய். விளைவாய் நின்ற கபித்தாசுரன் அழியும்படி கன்றுருவாய் ஆனாய்! கழுதை வடிவுடைய தேனுகாசுரன், நரகாசுரன் மந்திரிமுரன், நரகாசுரன் ஆகியோரை அழியச் செய்தாய் என்ற கண்ணனின் வீரச் செயல்களைப் புகழ்வார் பெரியாழ்வார்.
வானவர்தாம் மகிழ வண்சகடம் உருள
வஞ்ச முலைப் பேயின் நஞ்சம் அது உண்டவனே
கானகவில் விளவின் காய்உதிரக் கருதிக்
கன்ற அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் (நாலா. 67)
மருதமரமாய் வந்தவனை அழித்தவனே
கண்ணா, தயிரையும், நெய்யையும் களவிலே உண்டவன் நீ. அதுமட்டுமா இரட்டை மருத மரங்களாய் வந்த அசுரர்களைத் தள்ளி அழித்தவன். உன் புன்சிரிப்பு முழுவதுமாக வருமுன், உன் திருக்குழல்கள் உன் பவள வாயை மறைக்கும்படி தாழ்ந்து அலையும்படி என் அப்பனே செங்கீரை ஆடுக என்பர் ஆழ்வார்.
மத்து அளவுந்தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய் களவால் வாரிவிழுங்கி
ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினோடும் உந்திய வெந்திறலோய்
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்
முன்ன முகத்து அணிஆர்மொய் குழல்கள் அலைய (நாலா. 68)
காளியின் தலையில் கூத்தாடியவனே
காயம்பூ நிறமுடையவனே, காளமேகம் வடிவுடையவனே, காட்டில் பெரிய மடுவில் காளியனுடைய அகன்ற தலையில் கூத்தாடினாய், யானையின் தந்தங்களைப் பிடுங்கி மதத்தினை அடக்கினாய். இத்தகைய கண்ணா எனக்காக செங்கீரை ஆடுக என்பார் பெரியாழ்வார்.
காயா மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!
குhனக மாமடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா
துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே (நாலா. 69)
நப்பின்னைக்காக எருது ஏழும் - அந்தணன் பிள்ளைகளும்
கண்ணா நீ நப்பின்னைக்காக ஆயர் எருதுகள் தழுவ வேணும் என்று சொன்ன சொல் தப்பாமல் பின்பற்றி எருதுகளை அடக்கினாய். மேலும், அந்தணன் ஒருவனுக்குப் பிறக்கும்போதே மறைந்த பிள்ளைகளை அண்டத்துக்கு அப்பால் தேரைச் செலுத்திக் கொணர்ந்து தாயொடு கூட்டிய என்னப்பனே எனக்காக செங்கீரை ஆடுக என்று ஆழ்வார் கண்ணனை வேண்டுவர்.
துப்புஉடை ஆயர்கள்தம் சொல் வழுவாது
ஒருகால் தூய கருங்குழல் நற்தோகைமயில் அனைய
நப்பி;ன்னைதன் திறமாநல்விடை ஏழுசுவிய
நல்லதிறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனிஒரு தேர் கடலித் தாயோடு கூட்டிய (நாலா. 70)
உருவம் பலவாகிக் காத்தவனே
கண்ணா, நீ அன்னமாகவும், மீனுருவமாகவும், நரசிங்கமாகவும், வாமனனாகவும்ஈ ஆமையாகவும் ஆனவனே, எங்கள் துன்பத்தைப் போக்கி வாழ்வளித்தவன் என்பர் பெரியாழ்வார்.
அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும்
ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!
ஏன் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை (நாலா. 74)
செங்கீரைப் பருவத்தில் மணம் கொண்டவாய்
கண்ணனைச் செங்கீரைப் பருவத்தில் செங்கீரை ஆடச் சொல்லும்போது கண்ணன் வாயில் நல்ல மணம் வரும் என்பர் ஆழ்வார் பாலுடன் நெய்யும் தயிரும் அழகான சாந்தும், செண்பக மணமும், தாமரை மணமும், நல்ல கருப்பூர மணமும் கலந்து வரும் என்பர் ஆழ்வார்.
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தமொடு சண்பகமும் பங்கயம்
நல்ல கருப்பூரமும் நாறிவர (நாலா. 72)
செங்கீரையில் உருவமும் அணிகலனும்
பல் - ஐம்படைத்தாலி பெரியாழ்வார் செங்கீரையைப் பற்றிக் குறிப்;பிடுகையில் கண்ணனின் உருவத்தையும், அணிகலன்களையும் குறிப்பிடுகிறார். கண்ணா உன் வாயினுள் வெள்ளி அரும்பு போல் சிறு பற்கள் உள்ளன. உன் நீலநிற மார்பில் எழில்மிகு ஐம்படை ஆரத்தின் நடுவே, உன் கனி வாயில் சொல்லூறல் அழுதம் இற்று விழ வேதப் பொருளானவனே என்பர்.
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளிமுளைபோல் சிலபல் இலக
நீலநிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
நின்கணிவாய் அமுதம் இற்று முறிந்துவிழ (நாலா. 72)
திருவடி – மோதிரம் - சதங்கை – அரைஞான் - பவளவடம்
பெரியாழ்வார் செங்கீரையாட அடைக்கும் கண்ணனின் உருவத்தையும், அவன் அணிந்துள்ள அணிகலன்களையும் பட்டியலிட்டுக் கூறுவதைக் காணலாம். செந்தாமரைத் திருவடிகளில் மோதிரங்களும், பாதச்சதங்கiயின் ஒலியும், திருவரையில் சாத்தியுள்ள பொன் அரைஞானும், பொன் மணிக்கோவையும், கைவிரல்களில் ஆழிகளும் மணிக்கட்டில் சிறுபவள வடமும், தோள்களில் வளைகளும், காதுப் பணிகளும், மகரக் குழைகளும், செவிமடல்மேல்; வாளிகளும் நெற்றியில் சுட்டியும் ஒளிவீசும்படி அரசானவனே என்பர்.
செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலிற்
சேர்திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையம் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் (நாலா. 73)
முடிவுரை
செங்கீரையாட அழைத்த கண்ணனின் அழகையும், அவன் செய்த அரிய செயல்களையும், கண்ணன் அணிந்துள்ள அணிகலன்களையும் இவ்வாய்வுக் கட்டுரை விளக்கியதை உணரலாம்.
பெரியாழ்வார் பாடல்களில் சப்பாணிப் பருவம்

பெரியாழ்வார் கண்ணபிரானை குழந்தையாக பாவித்து சப்பாணிக் கொட்டி பாராட்டி பாடல் இயற்றியுள்ளார். இறைவனை அவன் உருவங்களையும், அவன் செய்த அரிய செயல்களையும் சப்பாணிப் பருவத்தில் கூறுவதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
குடங்கையில் மண் கொண்ட
மாற்றுயர் பொன்னால் செய்த, அழகிய மணிக்கோவையுடைய இடுப்பின் மேலே அரைச் சதங்கை ஒலிக்கவும், பவள வாயும் முத்துப் பற்களும் நன்கு விளங்க முன்பு குடங்கையில் மண் கொண்ட கைகளாலே சப்பாணி கொட்டி அருள்க என்பர் பெரியாழ்வார்.
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின் மேல்
ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடைமணி
பேணி பவளவாய் முத்து இலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி (நாலா. 75)
நந்த கோபர் மடியில் சப்பாணி
பொன் அரைஞானோடு மாணிக்கச் சதங்கை அசைந்து ஒலிக்க சுட்டி, தாழ்ந்து அசைய, என் மடியில் இருந்து இறங்கிப் பொய் உனக்குத் தந்தையும் இடையர்கட்குத் தலைவரான நந்தகோபருடைய மடியிலிருந்து சப்பாணி கொட்டுக என்பர் பெரியாழ்வார்.
பொன் அரைஞாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன் அரை ஆட தனிச்சுட்டி தாழ்ந்து ஆட
என் அரைமேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்தம்
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி (நாலா. 76)
பலவகை மணிகளும் சப்பாணியும்
மாணிக்கம், பச்சை, மலரி, வைரம், நீலம், கோமேதகம், வைடூரியம், முத்து எனும் பலவகை மணிகளும் பவளமு; பதிக்கப்பெற்று, பொன்னாலான காதணியின் ஒளிக்கு மேலே உன் வாயில் பற்கள் அமைய சப்பாணி கொட்டுக என்பர் ஆழ்வார்.
பல்மணி முத்து இன்பவளம் பதித்தன்ன என்மணிவண்ணன் இலங்கு
பொற்தோட்டின் மேல்
நின்மணிவாய் முத்து இலங்க (நாலா. 77)
திங்களை அழைத்து
கண்ணா, நீ திங்களை அழைத்து, உன் சேட்டைகளை மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் நந்தகோபர் மனம் மகிழ சப்பாணி கொட்டுக என்பர் ஆழ்வார்.
தூநிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலி சந்திரா வா என்று (நாலா. 78)
பட்டி மேய்ந்து திரியும் கன்று போல
கண்ணா, நீ விளையாடிதால் சேறும், புழுதியும் உண்டாயிற்று. அத்துடன் தயிரையும், வெண்ணெயையும் உண்டாய். இக்காட்சி பட்டி மேய்ந்து திரியும் கன்று போல உள்ளது. கையைத் தட்டி சப்பாணி கொட்டுக என்பர் பெரியாழ்வார்.
புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம்புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி (நாலா. 79)
பாண்டவர்க்குத் துணையும் சூளுரைக்கு ஏற்பவும் தேரை ஓட்டிய கைகளால்
தாங்களே நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்ட துரியோதனர் படைகள் அழியும்படி பாண்டவர்க்கு துணையாய் நின்று தேர் ஓட்டினாய். ஏதிரிகளை அழித்தாய். இத்தகைய கைகளால் கண்ணா சப்பாணிகொட்டுக என்பர் ஆழ்வார்.
தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்ற
தேர் உய்த்த கைகளால் சப்பாணி (நாலா. 80)
கடலைக் கலங்கச் சரந்தொட்ட கைகள்
இராமன் இலங்கைக்குச் செல்ல கடல் கீழ்மண் கொண்டு மேல்மண் எறியும்படி கலங்க வில்லையும் கண்களையும் கொண்டு வா என்ற கணை தொட்ட கைகளால் சப்பாணி கொட்டுக என்பர் பெரியாழ்வார். இதில் இராமனின் அம்பு விடும் வீரம், கடலே இரந்து நின்றது என்பர் ஆழ்வார். அத்தகைய கைகளால் சப்பாணி கொட்டுக என்று கூறுவதைக் காணலாம்.
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்
சரந்தொட்ட கைகளால் சப்பாணி (நாலா. 81)
அரக்கர்களைக் கொன்ற கைகளால்
குரங்குகளின் படைகளைக் கொண்டு கடலில் அணைகட்டி ஆனவங் கொண்ட அரக்கர்களை வென்ற கைகளால் சப்பாணி கொட்டுக என்பர் ஆழ்வார்.
குரக்கு இனத்தாயே குரைகடல் தன்னை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருங்கிய கைகளால் சப்பாணி (நாலா. 82)
இரணியனைப் பிளந்திட்ட கைகளால்
இரணியன் தான் நட்ட தூணிலே நரகிங்க வடிவில் தோன்றி நகங்களால் இரண்டு கூறாகப் பிளந்து அழித்த கைகளால் சப்பாணி கொட்டுக என்பர் ஆழ்வார்.
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்சிங்க உருவாய்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி (நாலா. 83)
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
தேவர்களுக்காக ஆழமான பாற்கடலை, மந்தர மலையை மத்தாக நட்டு, வாசுகிப் பாம்பைக் கடை கயிறாகச் சுற்றி அமிழ்தம் பெறக் கடைந்து அருளிய கைகளாலே சப்பாணி கொட்டுக என்பர் ஆழ்வார்.
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம்சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி (நாலா. 84)
முடிவுரை
பெரியாழ்வார், கண்ணனை சப்பாணி கொட்டுமாறு வேண்டுகிறார். அதில் இலங்கையில் அசுரரை அழித்த கைகள், அமிழ்தம் தந்த கைகள், இரணியனைக் கொன்ற கைகள், பாண்டவர்க்கு தேர் ஓட்டிய கைகள், கடலை வழியண்டாக்கிய கைகள், தயிர், வெண்ணெய் உண்ட கைகள், திங்களை அழைத்த கைகள், மண் கொண்ட கைகள் என பல வகையான கைகள் திகழ்வதைக் கூறுவதை அடையாளங்க காணமுடிகின்றது.
No comments:
Post a Comment