நற்றிணை பாடல்களில் தொன்மங்களில் சூர மகளிர்
முனைவர் கு. வெங்கடேசன்
.
முன்னுரை
தொன்மங்கள் என்பது பழமையான வழக்கங்களைக் கூறுவதாகும். அபிதான சிந்தாமணி தொன்மை எனப்படுவது பழமையைக் குறிக்கும் என்றும் பாவின் எண் வகையில் ஒன்றினைக் குறிக்கும் என்று கூறும், இதனை,
'தொன்மைதானே சொல்லுங்காலை
உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே' (தொல். செய்யுள் 538)
என்னும் சூத்திரத்தினால் அறியலாம். தேவிரா அவர்களும் தொன்மையாவது உரையொடுப் பொருந்தி போந்த பழைமைத்தாகிய பொருண்மேல் வருவன என்பர். ஆவை, இராமசரிதமும், பாண்டவ சரிதமும் முதலியவற்றின்மேல் வருஞ் செய்யுள் என்பர். ஆக, தொன்மையான, வாய்மொழித் தொடர்பானவைகளும், கதைகளும் தொன்மம் என்பதை உணரலாம்.
தோழி முருகனிடம் வேண்டல்
கனவுக் காலத்தில் தலைவனின் பிரிவினால் தலைவி துயருற்றாள். இதனைக் கண்டு இவள் முருகனால் அணங்கினாள் என அன்னை வெறியாட்டு எடுத்தாள். இதனைக் கண்ட தோழி முருகனை முன்னிலைப்படுத்திக் கூறுகின்றாள். முருகா! துலைவியை தலைவனுடன் சேர்த்து திருமணம் நடைபெற நீதான் உதவவேண்டும் என்ற வேண்டுவதையும் காணலாம்.
வேலனை வேண்டல்
பழங்காலத்திலே வீட்டில் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பார்கள். அதிலும் சரியாக வில்லை என்றால் இறைக்கு பூசை செய்து நேர்த்திக்கடன் செய்வர். மேலும், இறைவன் பக்தர்களின் உடலிலே புகுந்து வெறியாட்டு செய்வதாக நம்புவர். இத்தகையப் போக்கு சங்க இலக்கியத்திலே காணப்படுகின்றது.
புpரமசாரி என்ற புலவர் குறிஞ்சித்திணையில் தோழி0, தெய்வத்திற்கு உரைப்பது போல, நெறி விலக்கியது என்று பாடுவர். களவுக் காலத்துத் தலைவனின பிரிவினால் துயருற்ற தலைவியைக் கண்டு, இவள் முருகக் கடவுளால் அணங்கினாள் என தாய் வெறியாட்ட நடத்தினாள். இதனைக் கண்ட தோழி முருகனை முன்னிலைப்படுத்தி பேசுகின்றாள்.
சூரரமகளிரும் பூக்களும்
கடவுள் தன்மை வாய்ந்த மலைச் சுனையிலே இருந்தும் இலைகளை விலக்கி மேலெழுந்து வளர்ந்துள்ளதும், பிறர் கொய்ய முடியாத தன்மையுடைய குவளை மலர்களை சூரர மகளிர் கொய்வர், அதுமட்டுமின்றி அங்கேயே குருதியின் ஒள்ளிய செந்நிறத்தை உடைய செங்காந்தள் பூக்களையும் கொய்வர். இரண்டு பூக்களையும் கலந்து கட்டவர் சூரர மகளிர்.
பூக்களை அணிந்து – தலையில் சூடிக்கொண்டு பெருமலையின் பக்கம் எல்லாம் பொலிவுபெறுமாறு ஆடுகின்றனர். மேலும் முருகனே உனக்கு தொண்டு செய்வதற்கே நேர்ந்தாரன சூரர மகளிர் உன் புகழைப் பாடிக்கொண்டு வாழ்கின்றனர் என்பாள் தோழி. தோழி, தமிழகத்தின் தொன்மைக் கடவுளான முருகனையும், அவருக்கு தொண்டு செய்யும் சூரரமகளிரைப் பற்றியும் அவர்கள் அணியும் பூக்களைப் பற்றியும் மேற்கண்ட தொன்மம் சார்ந்த சான்றுகள் உணர முடிகின்றது.
கடவுட் கற்சுனை அடைஇறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
சூரர மகளிர் இசையும் - ஆடலும்
சூரர மகளிர் ஆடலுடன் இசையுடனும் நடனமாடுவதை தோழிக் குறிப்பிடுவதையும் உணர முடிகின்றது. குறிப்பாக வீழும் அருவியின் ஒலியே தம் ஆட்டத்திற்குரிய இனிதான பக்க இசையாகக் கொண்டு, அவர் ஆடிக் கொண்டிருக்கும் அத்தகைய நாட்டுக்குத் தலைவன் என்ற தோழி கூறுவள். துலைவனின் நாட்டைப் பற்றிக் கூறும்போது. சூரர மகளிர் ஆடல், பாடல் திறத்தினைக் கூறுவதையும் காணலாம்.
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவிஇன் இயத்து ஆடும் (நற்றிணை 34: 4 -5)
முருகனே உன்னால் உண்டானது அல்ல
தமிழ்க் கடவுளாம் முருகனைப் பற்றியும், அருள்பெற்ற வெறியாடும் வேலனைப் பற்றியும் நற்றிணையில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. தலைவிக்கு காதலினால் வந்தத பசலை. இது மிகுதியாகப் படர்தலைக் கொண்டது. இது முருகனே உன்னால் வருத்திக் கொடுக்கப்பட்ட நோய் கிடையாது. இதனை நீயும் அறிவாய். நானும் அறிவேன் என்பாள் தோழி.
மார்புகர வந்த படர்மலி அருநோய்
நின்னணங்கு அன்மை அறிந்தும் (நற். 34: 6 – 7)
முருகா – அறியாமை உடையை ஆவாய்
வேறியாட்டு செய்யும் வேலவன், கார் காலத்தே மலர்கின்ற கடப்பமலரின் மாலையைச் சூடியவனாக முருகா, உன்னைக் குறித்து வேண்டுகின்றான். நீயும் வெறியயரும் எம் மனையிடத்தே வந்து தோன்றினாய். அப்படி வந்த நீதான் நாங்கள் போற்றிப் பரவும் கடவுளே ஆயினும் நீயும் அறியாமை உடையை என்று தோழி முருகனையும் அறியாமை உடையவன் என்பதைக் காணமுடிகின்றது.
கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே (நற். 34: 8 -11)
மாயவனும் பலராமனும்
நற்றிணை 32 வது பாட்டில் கபிலர் குறிஞ்சித் திணையில் தோழிக்கூற்றாக தலைவிக்கு அறிவுரை கூறுகின்றாள். இந்த அறிவுரையில் தலைவனின் மலையைப் பற்றிக் கூறுகின்றாள். அதாவது, மாயவனைப் போலத் தோன்றும் கருமையான பெரிய மலைப்பக்கலிலே, அவனுக்கு முன்னோனாக, வெண்ணிறப் பலராமனைப் போன்றதாக விளங்கிய வெள்ளருவியானது இழிந்து கொண்டிருக்கும். அத்தன்மையுடைய அழகிய மலைக்கு உரியவன் தலைவன். அவன் எந்நாளும் நம்மை விரும்பியவனாகப் பெரிதும் வருந்தினனாயிருந்தான் என்பள் தோழி.
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் தேறாள். (நற். 32: 1 – 5)
மேற்கண்ட சான்றுகளின் மூலம் தலைவன் அழகாக இருக்கிறான் என்பதற்கு மாயவனையும், பலராமனையும் இயற்கையுடன் மலை, அருவிகளுடன் ஒப்பிட்டக் கூறும் பாங்கைக் காணமுடிகின்றது.
தலைவன் நட்பும் அறிவுசார் பெரியோரும்
தலைவன் அறிவுசான்ற பெரியோரை நாடிச் சென்று நட்புச் செய்து அவர்பால் ஆய்ந்து ஒன்றைத் தெளிவின்றித் தம்மை வந்து நட்பு செய்து தம்மோடு நெருக்கமுடையாரின்பால் யாவரும் எதனையும் குறித்து ஆராய்ந்து செய்யமாட்டார்கள். எனவே, நல்ல அறிவுடைய பெரியோரைப் போன்ற தலைவனை ஆராயமல் நட்பு கொள்ள வேண்டும் என்று தோழி தலைவிக்கு அறிவுரை கூறுகின்றாள்.
அறிவறிந்து அளவல் வேண்டும் மறுத்தார்க்கு
அரிய வாழி, தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே (நற். 32 : 6 – 9)
குறிகாணல்
சங்க இலக்கியத்தில் குறிப்பாக நற்றிணையில் சிறைப்புறமாகத் தோழி தலைமகளுக்கு உரைப்பதாக நல்லவள்ளியார் என்னும் புலவர் பாடல் எழுதியுள்ளார். அதில் அக்கால பழமை வழக்கப்படி தம் குழந்தைகளுக்கு நோய் வந்தால் குறி கேட்பது வழக்கம். இதனையே, தோழி தலைவியைப் பார்த்துக் கூறுகின்றாள். உன் மேனியிடத்துக் களவுக் காலத்து நேர்ந்த இந்தப் பிரிவுத் துயரினாலே வந்த வேறுபாட்டினைத் தாய் கண்டாள். அது ஏதோ தெய்வத்தாள் துன்பம் வந்ததாகக் கருதினாள். தேய்வம் அணங்கிற்றாதலை அறிதற்குரிய கழங்கினிடத்தே அம்மாறுபாட்டைக் குறித்துக் குறிகாணவும் நினைந்தாள். அதனைக் காரணமாகக் காட்டி. முருகை வேட்டு வெறியயரத் தீரும் என நம்பினாள்.
---------
தோழி ! வேறு உணர்ந்து
அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு (நற். 47 : 7 – 9)
தலைவியின் உடல் வேறுபாடு கண்ட தாய். குறி கேட்கச் செல்வதையும், தெய்வம் அணங்காகி கழங்குகளை வைத்து நல்லது, தீயது அறிய முற்படுவதையும் பழங்கால மக்களின் தொன்மத்தையும் காணலாம்.
அகநானூற்றிலும் கழங்கு காணல் செய்தி இடம் பெற்றுள்ளது.
அறுவை தோயும் ஒருபெருங்குடுமி
சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல்
ஆகுவதறியும் முதுவாய் வேல! கூறுக
மாதோ நின் கழங்கின் திட்டம் - (அகம். மணிமிடை. 195)
குறிகேட்டு அறியும் மரபினை அகநானூறு மணிமிடைப்பவளத்திலும் கயமனார் என்னும் புலவர் எடுத்துக் காட்டுவதையும் உணரலாம்.
இறந்த களிறும் - பிடியும் போல
தலைவன் - தலைவி உறவுகளை இணைத்துக் காட்டும் தொன்மையை நற்றிணைப் பாடலில் காணப்படுகின்றது. களிற்றின் பிரிவுக்கு ஆற்றாத பிடியானது, தன் கன்றைத் தழுவியபடியே செயலற்று வாடி நிற்கும் நாடன் என்பர். புலியானது களிற்றை அடித்துக் கொன்றுவிட்டதால் பெண் யானை தன் குட்டி யானையுடன் வருத்தத்துடன் வாழ்கின்றது. அதுபோலத் தான் தலைவனும் தலைவியின் துயரத்தைக் கண்டு கொள்ளாது வருந்தாது இருப்பான். ஆனால் தலைவியொ தலைவன் மீதும் மாறாத எண்ணத்தைக் கொண்டு வாழ்பவள் என்று நற்றிணையில் தோழிக்கூற்றாக நல்வெள்ளியார் கூறுவர்.
பெருங்களிறு உழுவை அட்டென இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு இது என (நற். 47 : 1 – 6)
ஆண் யானை இறந்தாலும், குழந்தையின் பாதுகாப்பைக் கருதி பிடி துன்பத்துடன் வாழ்ந்தாலும், தன் கடமையை மறக்கவில்லை. ஆனால், தலைவனோ தன் கடமையாகிய தலைவியைத் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவது ஞாயமா? என்னும் போக்கில் உள்ளதைக் காணலாம்.
விழாக்களில் ஆண் பெண் வேடமணிதலும் துணங்கைக் கூத்தும்
தலைவியை சந்திக்க தலைவன் பாணனை தூதுவிடுத்தான். பாணனைக் கண்ட தோழி பாணற்கு வாயில் மறுத்ததாக மருதம் பாடிய இளங்கடுங்கோ நற்றிணை 50 வது பாடலில் பாடியுள்ளார். இதில் ஆண்கள் விழாக்காலங்களிலும் பெண்வேடமணிந்து நடித்துள்ளதைக் காணமுடிகின்றது.
பாணனிடம் தலைவி கூறுவதாக பின்வரும் செய்தியை நோக்கலாம். குழையணறிந்தவனாகவும், கோதை சூடியவனாகவும், குறிய பலவிய வளைகளை அணிந்தோனாகவும், பெண்மைக் கோலத்தைப் பூண்டு ஒருவன் சேரிப் பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடியிருந்தான் என்பாள் தோழி. இதன் மூலம் பெண்களுக்குரிய குழையணிகளாகவும், பூக்களை சூடும் வழக்கமும், வளைகளை அணிந்ததையும் காணமுடிகின்றது. மக்களை மகிழ்விப்பதற்காக ஆண்கள் பெண் வேடமிட்டு துணங்கைக் கூத்தை விழாக் காலங்களில் ஆடியதைக் காணமுடிகின்றது. இது தலைவனின் நாடக நடிப்புத் திறனையும் வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும், தலைவியை அவன் நடிப்பால் ஈர்க்க முயலுவதையும் காணலாம். தோழியும் அவன் நடிப்பில் மயங்குகிறாள்.
அறியாமையின் அன்னை அஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவுஅயர் துணங்கை தழூஉகம் செல்ல (நற். 50 : 1 – 3)
வெட்கமில்லையா? எனக் கேட்டல் - பொது இடத்தில் மோதிக் கொள்ளல்
தலைவன் ஆடிய துணங்கைக் கூத்தைத் தலைவியும் பார்த்தாள். அஞ்சியவளாக அந்த இடத்தைவிட்டு அகன்றாள். ஆனால், நெடிதாக நிமிர்ந்த தெரு முனையிலே எதிர்பட்டு வரும் ஒருவரிடம் புகுந்து மோதிக் கொள்ளும் வளைவினிடத்தே தலைவனும் தலைவியிடம் மோதினான். இப்படி மோதும் உன்னை யாரும் கேட்பதற்கு ஆள் இல்லையா? என்று சினந்தாள் தலைவி. துலைவன் தலைவியிடம் அன்பு கொண்டு மோதி தன் அன்பை வெளிப்படுத்தினாலும் அதனை தலைவி ஏற்கவில்லை. பொது இடத்தில் ஆண்கள் பெண்களை இடிப்பது சீண்டுவது போன்ற செயல்களை உரியவனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை என்ற உயரிய சிந்தனையை நற்றிணையில் காணமுடிகின்றது. அதுமட்டுமின்றி நாண் இலை என்ற வெட்கமில்லையா? என்றும் தலைவி கூறுவதைக் காணலாம்.
பகைவரும் விரும்புவர்
தலைவனின் சிறுமைகள் சில இருந்தாலும், அவனின் நற் செயல்பாடுகளால் எதிரியும் விரும்புவார்கள் என்றும் தோழி பாணனிடம் கூறுகின்றாள். துணங்கைக் கூத்தாடி திறமையை வெளிப்படுத்தும் திறம் தலைவி, தோழி, பொதுமக்கள் என அனைவரும் போற்றும்படி வாழ்பவன். ஏன் இப்படி என்னிடம் தெருவில் மோதுகின்றாய் என்றால் உன் பசலையம், புத்தழகும் என்னை ஈர்க்கின்றது என்றான். வேட்கமில்லையா என்று கூறிய போதும் கோபம் வரவில்லையே? ஆவனைப் பகைத்தோரும் அவனை அடைதலை விரும்புகின்ற தன்மையானவன் அவன் என்று கொண்டு தலைவியே அவனை போற்றினேன் என்று கருதாதே என்பாள் தோழி. அதாவது சிறுமையானது தன்பால் பெருமை வந்து திடுமென சேர்ந்தக் காலத்தும், அதனைத் தனக்குச் சிறப்பென ஆராய்ந்து அறியாததல்லவோ? அப்படியே அந்தச் சந்தர்ப்பத்தை நானும் இழந்தேன் என்பதாக தோழி பாணனிடம் கூறுகின்றாள்.
யானது பசலை என்றனன்
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறுநுதல் அரிவை போற்றேன்
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே (நற். 50 : 7 – 10)
தலைவனின் வருகையும் - மேனிவாடலும்
தலைவியின் மேனிவாட்டத்தைக் கண்டாள் தாய். தன் மகளுக்கு ஏதோ துன்பம் வந்துற்றது என்று வருந்தி தெய்வம் அணங்கிற்று எனக் கருதி வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்தாள். மேனி வாட்டத்தின் காரணத்தை நற்றிணை 51ம் பாடலில் பேராலவாயர் குறிஞ்சித் திணையில் அழாகாகக் கூறுவதைக் காணலாம். தலைவி, தோழிக்குக் கூறுவதாக இச்செய்தி இடம் பெற்றுள்ளது. ஓங்கி உயர்ந்த தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிடங்கள் எல்லாம் எதிரொலிக்குமாறும். பாம்புகள் உயர்ந்த வரையிடத்துக் கிடந்தவாய் வருத்தமுற்றுப் புரண்டு ஒளிரவும், கடிய குரலைச் செய்தன இடியேறுகள். அவற்றோடு விரைந்த செலவுடைய மேகங்கள் மழைத்துளிகளை சொரிய பெயலும் நீங்காதே உள்ளது. அதனைக் கண்ட நான் நமக்காக வரும் தலைவனுக்குத் துன்பம் உண்டாகுமோ எனக் கருதி அஞ்சினேன் என்பள்.
தலைவனுக்காக மனம் வருந்திய தலைவியின் மேனியில் வாட்டம் ஏற்பட்டது. இதனை அன்னைக் கண்டனள். தெய்வம் தம் மகளை அணங்கிற்றோ என்று வருந்தினள். உடனே வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்தாள் என்பள்.
யாங்குச் செய்வாம் கொல் - தோழி ஓங்குகழைக்
காம்புடை விடரகம் சிலம்பப் பாம்பு உடன்று
ஓங்குவரை மிளிரஆட்டி வீங்குசெலல்
கடுங்குரல் ஏறொடு கனைதுளி தலைஇப்
பெயல் ஆனாதே, வானம் பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தெனப் (நற். 51 : 1 – 6)
தலைவியின் உடல் மாற்றம் காரணமறியாத அன்னை தம் மகளுக்கு அணங்காயிற்று என்று வேலனை வரவழைத்து வெறியாட்டு நடத்த முற்படுவதைக் காணலாம். மேலும் தலைவன் வந்த விழியில் மூங்கில், மலை, பாம்பு, இடிமுழக்கம் என இயற்கையினைக் கூறி மழை பெய்வதால் பாம்புகளும் வெளிவந்து தாக்கும் என அஞ்சியதையும் மழையினால் தலைவன் பாதிப்பான் என்ற கருதியும் துன்பப்படும் அன்புடைய தலைவியைக் காணமுடிகின்றது.
வேலனும் வந்தான் - களிறின் வெறியாட்டமும்
தலைவியின் மாறுபாட்டைப் போக்க தாய் வேலனை அழைத்து வெறியாட்டத்திற்கு ஏற்பாடு செய்தாள். அதனால் தான் படப்போகும் துன்பங்களை தோழிக்குக் கூறுகின்றனாள். கொண்டையில் பூவை காக்க முடியாது. குளிர்;ச்சியான காட்டு மல்லிகைக் கொடியை மிதித்து கொலை செய்ய வல்ல களிறானது சேற்றிலே தினைத்தாடிய நெற்றியைக் கொண்டதாய் உள்ளது. இளமைப் பருவத்தைக் கொண்ட ஆசினியை ஒடித்துப் போட்ட பின் வேங்கைப் பூக்கள் சிதறிக் கிடக்கின்ற வேங்கை மரத்தடியிலே சென்று தாங்காமல் நிற்கும். அதுபோன்ற நிலைதான் தற்போதைய என் நிலை என்று தலைவி வருந்துவாள். யுhனை இயற்கையான அழகான மல்லிகையை மிதித்து, சேற்றைப் பூசி, ஆசினியை ஒடித்த, வேங்கைப் பூக்கள் சிதறுவதைப் பால வேலன் எனக்கு இறைத்தன்மையூட்டி அது தொடர்பான செயல்பாடுகளைச் செய்து துன்புறுத்தப் போகின்றான் என்ற உட்குறிப்பையும் காணலாம்.
மின்னுநிமிர்ந் தன்ன வேலன்வந்தெனப்
பின்னுவிடு முச்சி அளிப்ப ஆனாதே
பெருந்தன் குளவி குழைத்த பாஅடி
இருஞ்சேறு ஆடிய நுதல கொள்களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீத்தர் வேங்கையை மலைகிழ வோற்கே (நற். 51: 6 – 11)
பசுவும் குரங்கும் கதையும் தொன்மையும்
பசுவின் பாலை குரங்கு கறந்து தன் குட்டிக்கு அளித்ததான கதையொன்றை நற்றிணை 57ம் பாடலில் பொதும்பில் கிழார் என்னும் புலவர் கூறுகின்றார். தலைவனே பகற்குறியிலே வந்து தலைவியை சந்திப்பதை நிறுத்திக் கொள். இனி தலை வீட்டிலே பாதுகாக்கப் படுவாள் (இற்செறிக்கப்படுவாள்) என்பதைக் கூறி விரைவிலேயே திருமணம் செய்துகொள் என்று அறிவுறுத்துவாள். இதற்கு சான்றாக பசுவும் குரங்கும் தொடர்பான பழைய கதையைக் கூறுவர்.
வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு ஒன்று சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் மிகுந்த காட்டிலே தங்கியிருந்தது. குறிப்பாக வேங்கை மரத்தடியில் பசியாறிப் படுத்திருந்தது. அப்பொழுது பசு தூங்குவதாக நினைத்து பஞ்சு போன்று தலையுடைய ஒரு மந்தியானது, தன் சுற்றத்தை கல் என்று ஒலித்தபடி கையமர்த்திவிட்டு, அந்தப் பசுவிடத்தே நெருங்கிச் சென்றது. பால் நிரம்பிப் படுத்திருந்த அப்பசுவின் மடிக் காம்பினை அழுந்தும்படி பற்றி இழுத்து த்ன குட்டிக்கு பாலூட்டியது. பால் கறக்கும் தொழிலினை அறியாத குரங்கின் செயலைக் கண்டு தாம் வியக்கின்றோம் என்பர் தோழி.
மேற்கண்ட செய்தியிலிருந்து பசுவினது பால் கன்றுக்குச் சேரவேண்டும். ஆனால் உரிய நேரத்தில் பாலைக் குடிக்காவிட்டால் குரங்கு போன்ற மற்றவை குடிக்க நேரிடும். எனவே, உரிய காலத்தில் தலைவியை தலைவனே திருமணம் செய்துகொள் என்பதாக அமைவதைக் காணலாம்.
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி'
No comments:
Post a Comment