குலசேகரர் விரும்பும் திருவேங்கடம்
குலசேகர ஆழ்வார் திருவேங்கடத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஏனென்றால் பெருமாளைக் கண்டிடவும், பெருமாளின் அடியார்க்கு ஏதாவது ஒருவகையில் பயன்படவும் விரும்புவதைத் தன் பாசுரங்களில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான கருத்தை இக்கட்டுரையில் காணமுற்படுவோம்.
நூரையாகப் பிறப்பேனா?
ஏழு எருதுகளை வென்ற கண்ணனுக்கு அடிமையாகவும், உடல் வளர்க்கும் இந்த வாழ்வை வெறுப்பாகவும் இருப்பதாக குலசேகரர் கூறுகிறார். இடக்கையிலே வலம்புரியையுடையவனின் திருவேங்கடமலையிலே ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்கக் கடவேன் என்பர்.
ஊன்ஏறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறு ஏழ்வென்றான் அடிமைத்திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன்வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. (நாலா. 677)
மீனாகப் பிறப்பேனா?
ஆழியாத செல்வத்து அரம்பையர் சூழ்ந்திருக்கும் விண்ணும், மண் ஆளும் செல்வமும் விரும்பவில்லை. திருவேங்கடத்து சுனையில் மீனாகப் பிறக்கும் பேறு மட்டுமே விரும்புகிறேன் என்பர் குலசேகராழ்வார்
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்அரசம் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே (நாலா. 678)
திருமலையான் உமிழும் தங்க வட்டி வேந்துபவனாவேன்
சிவனும் பிரமனும் இந்திரனும் நெருங்க புகமுடியாத வைகுந்தமாகிய திருமலையின் திருவாசலில் மின் வளையம் போல சக்கரமுடைய திருமலையான் வாய்நீர் உமிழ்கின்ற தங்க வட்டிலைக் கையிலேந்துபவனாவேன் என்று குலசேகரர் விரும்புகிறார்.
பின்இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல்அரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடர் - ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன்வட்டில் பிடித்து உடனே புகப்பெறுவேன் ஆவேனே
(நாலா. 679)
வேங்கடத்து செண்பகமாய்
திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளும் பெருமாளே, உன் இரு திருவடிகளைக் கண்டு இன்புற, இன்னிசைப் பாடும் வண்டுகள் தங்கும் செண்பகப் பூவாய் இருக்கும் சிறப்பினை அடைவேன் என்று விரும்புகிறார்.
ஒண்பவள வேலை உலவு தன் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே (நாலா. 680)
யானைமீது அமர்ந்து ஆளும் அரசம் இன்பமும் வேண்டாம்
மதங்கொண்ட யானையின்மீது அமர்ந்து அரசாளும் பதவியும் செல்வமும் எனக்கு வேண்டாம். பெருமாளின் திருமலையிலே கம்பமாய் நிற்கும்படியான பேறு ஒன்றே போதும் என்பர் குலசேகரர்
கம்ப மதயானைக் கழுத்தகத்தின்மேல் இருந்து
இன்பு அமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே (நாலா. 681)
ஆடலும் பாடலும் வேண்டா – தவத்தேன் ஆவேனே
மின்னல் போன்ற நுண் இடையுடைய ஊர்வசி, மேனகை ஆடல், பாடலை விரும்பவில்லை. தென்ன என பாடும் வண்டினங்கள் வாழும் திருப்பதியில் தவத்தையுடையவனாக இருக்கவே விரும்புகிறேன் என்பர் குலசேகராழ்வார்.
மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடும் ஆடல்அவை ஆதரியேன்
தென்ன என வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தேன் ஆவேனே
(நாலா. 682)
மன்னனாகி ஆளும் செல்வம் வேண்டா – கானாறாய் இருக்க வேண்டும்.
வானை ஆளும் நிலவுபோல வெண்கொற்ற குடையின்கீழ் ஆளும் மன்னனாகி பெறும் செல்வம் வேண்டா. வேங்கடமலைமேல் கானாறாய் பாயும் கருத்தை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன் என்பர் குலசேகரர்.
வானாறும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வ அறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல்
கானாறாய் பாயும் கருத்து உடையேன் ஆவேனே. (நாலா.683)
திருமலையில் வழியாய் கிடக்க ஆவேன்
சிவன், பிரமன், இந்திரன் முதலியோர் செய்யும் யாகங்களை ஏற்றுக் கொண்டவன் எம்பெருமான். அத்தகையவன் வீற்றிருக்கும் வேங்கடமலையில் வழியாய் இருக்க விரும்புவதாகக் குலசேகரர் கூறுவர்.
பிறைஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறைஆனான்
வெறியார் தண்சோலைத் திருவேங்கட மலைமேல்
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே. (நாலா. 684)
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே
தீவினைகளைச் செடிபோல அழித்து அடியார்களைக் காக்கும் பெருமாளே, உன் கோயிலின் வாயிலில் தொண்டர்கள் தேவர்கள், அணங்குகள் ஏறி, இறங்கும் படியாய் இருந்து உன் பவளத் திரு இதழ்களைக் காண்பேனே என்பர் குலசேகரர்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே (நாலா. 685)
திருமலையில் ஏதேனும் ஒரு பொருளாய் இருப்பேனா?
மேலுலகை ஒரே குடையின் அரசாண்டு ஊர்வசி போன்றவர்களைப் பெற்றாலும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். செம்பவளவாயான் திருமாலின் வேங்கடமலையில் ஏதேனும் ஒரு பொருளாகவாவது இருக்க வேண்டும் என்பர் குலசேகரர்.
உம்பர் உலகு ஆண்ட ஒரு குடைக்கீழ் உருப்பசித் தன்
அம்பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே. (நாலா. 686)
முடிவுரை
திருவேங்கடத்தில் திருமாலுக்கும், அவனது அடியார்களுக்கும் ஏதாவது ஒருவகையில் பயன்பட வேண்டும் என்ற உணர்வில் நாரையாய், மீனாய், பணியாளாய், செண்பகமாய், கம்பமாய், தவத்தோனாய், கானாறாய், வழியாய், படியாய் ஏதேனும் ஒரு பொருளாய் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தம் ஆர்வத்தைப் பதிவு செய்துள்ளதை இக்கட்டுரையில் இனங்காண முடிகின்றது.

No comments:
Post a Comment