Thursday, 5 March 2015

தோழி தலைவனுக்கு அறிவுரை – குழந்தையும் பேயும்



தோழி தலைவனுக்கு அறிவுரைகுழந்தையும் பேயும்







     தோழி தலைவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். தாமரை மலர்போலும் தலைவியின் புதுநலத்தை உண்டு நின்னாற் கூடி ,ன்புற்றாள். நானும் அப்பொழுது ,ல்லை. எம்மிடமும், தலைவியிடமும் வளர்ந்து வந்ததான நாணத்தையும் யாம் உன்னால் கைவிட்டோம். இனி இவ்வூரிடத்தே அலரும் எழட்டும் என்றாள். ,தனை, குற்றமற்ற கற்பினையுடைய இளையாள் ஒருத்தி தன் குழந்தையைப் பேயானது வலிந்து எடுத்துக் கொள்ள, அதனை மீட்கமுடியாமல் கைவிட்டதைப் போன்றுள்ளது. எங்களின் நிலைமை என்று தோழி தலைவியின் துன்பத்தை தலைவனுக்குக் கூறுகின்றாள்

                                பூவின் அன்ன சலம்புதிது உண்டு
                                நீபுணர்ந்த தனையேம் அன்ன மயின்
                                மாசில் கற்பின் மடவோள் குழவி
                                பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு
                                சேணும் எம்மொடு வந்த
                                நாணும் விட்டோம் அலர்க விவ்வூரே (நற்றிணை – 15)


மதயானை நிரம்பிய வழி

                தலைவி, தலைவனின் பிரிவை நினைத்து வாழ மெலிவுற்றாள். அந்த மெலிவைப் போக்குவதற்குக் கருதும் அவள் தலைவனது வீரத்தைக் கூறுவள். மிகப் பெரிய பாசறையைக் கலக்கிய மதங்கொண்ட போர்க்களிறு, பிறர் தடுப்பதற்கு அரிதான மறத்தன்மையுடைய அதனது ஒற்றைக் கொம்பைப் போல ஒன்றாக விளங்கிய அருவியை உடைய குன்றத்தைக் கடந்து சென்றவர் நம் தலைவன். அவனும் உன் துன்பம் போகுமாறு உன்னைத் தேடி வருவன் கலங்காதே என்று அறிவுரை கூறினள்.

                                கடாஅம் கழி, கதன்அடங்கு யானைத்
                                தடாஅநிலை ஒரு கோட்டன்ன
                                ஒன்றிலங்கு அருவிய குன்றிறந் தோரே
                                பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல
                                வருவர் வாழி தோழி (நற்றிணை – 18)

தோழியின் தலைவிக்கு சேரமான் வரலாறும் பல் பதித்த கதவும்

                தோழி தலைவிக்கு ஆறுதலும் - தேறுதலும் கூறி பிரிவுத் துயரைப் போக்கினாள் - அப்பொழுது சேரமான் வரலாற்றைக் கூறினாள். மூவன் என்பானின் முள்போன்ற பற்களைப் பறித்துக் கொணர்ந்து அழுத்திவைத்த கதவினையுடையது தொண்டிப்பட்டினம். அதற்கு அரசன் சேரமான். அவனுடைய பாசறையில் வீரர்கள் உறங்காமல் கலங்கியிருந்தனர். காரணம் வெற்றி என்ற சிந்தனையில் உறக்கம் வராது என்ற கூறினள். அதைப் போன்று உன் தலைவனும் செயலில் மூழ்கி வெற்றி பெறுவான். எனவே கண் கலங்காதே என்று தலைவிக்கு அறிவுரை கூறுவாள் 
.
                                முழுவலி முள்எயிறு அழுத்திய கதவின்
                                கானல்அம் தொண்டிப் பொருநன், வென்வேல்
                                தெறல்அருந்த தானைப் பொறையன் பாசறை
                                நெஞ்சம் நடுக்குறூம் துஞ்சா மறவர் (நற்றிணை – 18)

சில நாள் வாழாள் (தோழிதலைவன்)

                தலைவன் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தினான். தோழி தலைவனை சந்தித்து விரைவிலே திருமணம் செய்து கொள்க என்றாள். மேலும், தலைவா, நீயும் நின் ஊர்க்குப் போகா நின்றனை. நீ மீண்டும் வருவதாகிய ,டைப்பட்ட அந்தச் சில நாட்களளவும், நின் தலைவி, நின்னைப் பிரிந்த துயரத்திற்கு ஆற்றாது உயிர் வாழ மாட்டாள். எனவே, உடனடியாக வந்து தலைவியைத் திருமணம் செய்க என்றாள்.

                                செலீ, சேறீ ஆயின், ,வளே
                                வருவை ஆகிய சில்நாள்
                                வாழாள் ஆதல்நற்கு அறிந்தனை சென்மே (நற்றிணை – 19

விரதமுடையாரும் தலைவியின் நிலையும் (தோழிதலைவிக்கு)

                நோன்புடையவள் தம் கையிடத்தே உணவைப் பெற்று உண்பதற்கு குந்தி ,ருந்தால் போல உன் தன்மையும் ஆகும் என்பாள் தோழி. விரத தன்மையுடைய துறவிகள் தம் கையால் பெறும் பிச்சையினை மட்டுமே உண்டு, தம் நினைவை ஆன்ம உயர்வுக்குள் செலுத்துவர். அதுபோலத் தான் தலைவியே நீ காத்திருத்தல் தலைவனுடன் சேர்ந்து ,ன்புறவே என்று அறிவுரை கூறுகின்றாள்.

                                வான்பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
                                கைஊண் ,ருக்கையின் தோன்றும் நாடன் (நற்றிணை – 22)

திணை கவர்தலும் குரங்குகள் உணவு உண்ணுதலும்

                தலைவியே, மலைப்பக்கத்திலுள்ள பசிய தினைப் பயிரைக் குன்றத்துக் கொடிச்சியர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பர். அங்கே, முற்றிய பெரிய கதிரொன்றை, ஒரு மந்தியானது கவர்ந்து கொண்டது. பாய்வதைத் தவிர வேறெதுவும் தெரியாத கடுவனொடு நல்ல மலைமீது எறிக் கொண்டது. தன் உள்ளங்கை நிறையுமளவுக்குத் தினையைக் கசக்கி உண்டது. ,தே போல நம் தலைவனும் பொருள் கொணர்ந்து உன்னை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்வைத் தருவான் கவலைப்படாதே என்று அறிவுரை கூறுவள் தோழி,

                                கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்திணை
                                முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
                                கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி
                                அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு (நற்றிணை – 22)

வாடிய கோடைப்பயிரும் இரவு மழையும்

                வாடிய பயிர்களுக்கும், நீர் வற்றிப் போன குளங்களுக்கும் ஈரமற்றுப் போன கோடைக் காலத்தே இரவின் நடுயாமத்தில் மழை பெய்தாற் போல நம் வெம்மை தீர்க்க நம்பால் வந்தனன் என்ற தலைவியிடம் தோழி, தலைவன் வரவைக் கூறுகின்றாள். அறிவுரை கூறும்போதும் காய்ந்த பகுதிக்கும் மழைக்குமுள்ள தொடர்பைக் கூறுவதைக் காணலாம்.

                                கயம்கண் அற்ற பைதுஅறு காலைப்
                                பீளொடு திரங்கிய நெல்லிற்கு
                                நள்ளென் யாமத்து தழைபொழிந்த தாங்கே (நற்றிணை – 22)

உடல் மாற்றமும் காமம் ஒளிப்பும்

                தலைவி களவுறவிலே நீட்டிப்பது கண்டு ஆற்றாமை மிகுகின்றது. அதனைக் கண்ட தோழி தலைவனுக்கு தலைவியின் துன்பங்களைக் கூறி காலம் நீட்டிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றாள். தலைவியின் தோள்கள், வளைகள் கழன்று விழுமளவுக்கு மெலிந்தன. ஆயத்தாரோடும் விளையாட்டு அயர்கின்றாள். இதனால் மேனியில் களைப்பு தோன்றுகின்றது. ,தனால் வருந்துகின்றாள். அழகும் தொலைகின்றது.இனி காமத்தை மறைக்க என்ன செய்வாளோ? என்று தன் கருத்தைப் புரிய வைக்கின்றாள்;.

                                தோடிபழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
                                வடிக்கொள் கூழை ஆயமொடு ஆடலின்
                                டிப்பு மெய்யது ஒன்று உடைத்தே
                                கண்ணே காமம் கரப்பு அரியவ்வே (நற்றிணை – 23)


அன்னை காத்த உடல் அழகு

                தோழி தலைவனுக்கு அறிவுரை கூறும்போது தலைவி தன் தாயை நினைத்து வருந்துகின்றாள். குறிப்பாக கடினப்பட்டு வளர்த்த தாய், அதனால் உண்டான அழகு சிதைந்து போகின்றதே என்று தலைவி வருந்துவதாக தோழி கூறுகின்றாள்.

                                அன்னை காக்கும் தொல்நலம் சிதையக்
                                காண்தொறும் கலுழ்தல் அன்றியும். (நற்றிணை -23)

                தலைவியே நேற்றைய பொழுதிலே நம்மோடுங் கூடியிருந்து தினைப்பயிரிடத்தே கிளிகளைக் கடிந்தவனாகத் தங்கியிருந்தான் தலைவன். தன் குறையினைச் சொல்லுதற்கேற்ற இடவாய்ப்பினைப் பெறாதவனாகி, அவ்விடம் விட்டு அகன்றான். அதனால் நமக்குத் துன்பமுமில்லை. தேனை உண்ணும் வண்டுபோன்றவன். அவனது கெடாத அந்த காட்சியைக் கண்டும் என் தொடிகள் கழன்றன. அதனை மீண்டும் செறித்துக் கொண்ட எனது பண்பற்ற செய்தி என்னை விடாத ஒரு நினைப்பாகவே ,ருக்கின்றது என்றாள். அவன் அழகிலும், பண்பிலும் மயங்கிய தோழி, தன் காலில் தொடிகள் கழன்றது என்றும் அதனை மீண்டும் சரிசெய்ததைக் கூறி தலைவிக்கு தலைவன்பால் மேலும் பற்றுண்டாகுமாறு பேசுவதைக் காணலாம்.

                                வளமலை நாடன் நெருநல் நம்மொடு
                                கிளைமலி சிறுதினைக் கிளிகடிந்து அசை,ச்
                                சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்து
                                அல்லல் அன்றது காதலம் தோழி
                                வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
                                கண்டும் கழல்தொடி வலித்தவென்
                                பண்பில் செய்தி நினைப்பாகின்றே (நற்றிணை – 25)

தோழிதலைவனுக்கு தோழி வருத்தமும் - நெல்லின் தாய்மனையும்

                தோழி தலைவனின் பிரிவையும், அதைத் தாங்கமுடியாதத் துன்பத்தை உடையவளாகத் தலைவி இருப்பதையும் கூறுகின்றாள். அடுக்கிய நிலையமைந்த நெடிய நெடுகூடுகளிலே நிறைந்திருக்கும் நெல்லைக் கொண்டது ,வளது தாய்மனை. அதனைக் கைவிட்டு வாடிப்போன பலாமரங்களைக் கொண்ட வழியில் வந்து உன்னுடன் நட்பு கொண்டனள். கூர்மையான பற்களும், பொன் பொதிந்தாற் போன்ற தேமற் புள்ளிகளையும், நெருங்கிய கருமையான கூந்தலையும் பெருத்த தோள்களையும் உடையானாகிய இவளுக்கு நும் பிரிவைக் கேட்டதுமே வளைகள் நெகிழ்ந்தன. நும்மோடு சேர்ந்த கெடுதுணையான தன் தவறினாலே ,வள் துன்பப்படுவதை எண்ணி வருந்துகின்றேன் என்றாள். தலைவன் பிரிவைத் தடுக்க தலைவியின் வசதியான வாழ்க்கையைக் கூறி தடுக்கிறதைக் காணலாம்.

             நோகே யானே நெகிழ்ந்தன வளையே
             பிண்ட நெல்லின் தாய்மனை ஒழியச்
             முடமுதிர் பலவின் அத்தம் நும்மொட
             கெடுதுணை ஆகிய தவறோ (நற்றிணை – 26)

தோழிதலைவனுக்கு பூக்களை பறிக்க அன்னை கூறவில்லை

                கானல் சோலையிடத்தே விளையாட்டயர்ந்தோம் பிறரை மறைத்தபடி களவாக எதுவும் செய்யவில்லை. பிறரும் அறிந்து வைக்கவுமில்லை. நெய்தல் நம் கண்களைப் போன்று பூத்திருக்கும். அதனை பறித்து வாருங்கள் என்று அன்னை கூறவில்லை. அதனால் என்ன நினைத்தாளோ அன்னை என்று தலைவன் காதில்படும்படி கூறினாள் தோழி.

                                கழிசூழ் கானல் ஆடியது அன்றிக்
                                கரந்துநாம் செய்தது ஒன்ற ,ல்லை உண்டு எனின்
                                பரந்துபிறர் அறிந்தன்றும் ,லரே நன்றும்
                                எவன் குறித்தனள் கொல் அன்னை
                                கண்போல் பூத்தமை கண்டு நுண்பல
                                சிறுபா கடைய நெய்தல் (நற்றிணை – 27)

தோழிதலைவிக்கு அன்னையும் கள்வரும்

                தலைவன் முன்னர் தலையளி செய்தபோது கைகளைக் கொண்டு தன் கண்களிலே ஒற்றிக் கொண்டும், தன் கைகளாலே உன் நறிய நெற்றியைத் தடவி விட்டும் அன்னை போல அன்பான சொற்களைக் கூறுவான். ,ப்பொழுதோ வஞ்சத்தால் பிறர் பொருளைக் கவர்ந்து சென்று, அவரைப் பற்றி நினையாத கள்வரைப் போல கொடுந்தன்மையின் ஆயினன் என்றுதலைவிக்குத் தோழி கூறுவாள். எதிர்மறையாக தலைவனைக் கூற தலைவி மறுத்து ஆற்றியிருப்பாள் என்றும் கூறலாம்.

                                என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்
                                தன்கைக் கொண்டுஎன் நண்ணுதல் நீவாயும்
                                அன்னை போல் ,னிய கூறியும்
                                கள்வர் போலக் கொடியன் மாதோ (நற்றிணை – 28)

தோழிதலைவனுக்கு மார்புதலைக் கொண்ட மான் ,ழை மகளிர்
                தலைவி தலைவனுடன் ஊடியிருந்தபோது நான் யாரையும் அறியேன் என மறுக்க தோழி பரத்தையருடன் சேர்ந்ததை நானறிவேன் என்றாள். நீ வரும் தெருவிலே, நின்னை நோக்கி உன் மார்பை நமக்கு உரிமையெனப் பற்றிக் கொண்டவரான பரத்தையர் பலரும் காத்திருந்தனர். அதை அறிவேன் என்றாள். தலைவனின் தவறுகளைச் சுட்டிக் காட்டுபவனாகத் தோழியின் பேச்சு அமைவதைக் காணமுடிகின்றது.

                                ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின்
                                மார்புதலைக் கொண்ட மாண்,ழை மகளிர்
                                கவல் ஏமுற்ற வெய்துவீழ் (நற்றிணை. 30)

தோழிதலைவனுக்கு மரக்கலம் கவிழ்தலும் பலகையைப் பற்றுதலும் போல

                பெருங்காற்று வீசிச் சுற்றுதலால் துன்புற்றக் காலத்தில் கடலிலே மரக்கலம் கவிழ, அதனால் துன்புற்று கலங்கி கரையேற பற்றிக் கொண்ட பலகையைப் போலும், நின்னை பரத்தையர்கள் தழுவிக்கொள்ள ,ழுத்தனர். ,தனை நானும் அறிவேன். என்று தலைவன் பரத்தையரிடம் கொண்ட தொடர்பைக் கூறுவதையும், கடலில் காற்று வீசுவதால் உண்டாகும் கலம் கவிழ்தலுமான செய்திகளைக் கூறி தலைவனுக்குப் புரிய வைக்கும் ஆற்றலுடன் தோழி விளங்குவதைக் காண முடிகின்றது.

                                கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன்வீழ்வு
                                பலர்கொள் பலகை போல
                                வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே (நற்றிணை – 30)

தோழிதலைவி கண்ணன் - பலராமனைக் கூறும் பாங்கு

                தோழி, தலைவியை நோக்கி மாயவனைப் போன்ற கருமையான மலைப்பக்கத்திலே, அவனுக்கு முன்னவரான வெண்ணிற பலராமனைப் போன்றதான வெள்ளருவியானது இழிந்து கொண்டிருக்கும் என்பாள். தலைவிக்கு கருத்து கூறும்போது கண்ணனையும், பலராமனையும், அவர்களின் உருவ நிறத்தையும் கூறுவதைக் காணலாம்.

                                மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
                                வாலியோன் அன்ன வயங்குவென் அருவி (நற்றிணை – 32)

பெரியோர் நட்பு செய்த பின்பே

                தோழி, தலைவிக்கு தலைவனின நட்பு நல்லது என்று கூறுவள். அதனை புரிய வைப்பதற்காக சில கருத்துக்களை கூறுவள். நீயே நேரில் காணவேண்டும். மேலும், நின் அன்புடைய ஆயத்தார் கலந்து உசாவி அறிய வேண்டும். அறிவுத் தெளிவினை அறிந்த பின்னரே நானும் அவனைப் பற்றிக் கூறல் வேண்டும். அவனது நிலையை மறுத்துக் கூற முடியாது. அறிவுசான்ற பெரியாரை நாடிச்சென்று நட்பு செய்து அவர்பால் ஆய்ந்து ஒன்றைத் தெளிய வேண்டும்.
                               


                               

No comments:

Post a Comment