நற்றிணையில் தொன்மங்கள்
பல்லியின் ஒலியும் நம்பிக்கையும்
தமிழர்கள் காலங்காலமாக நம்பிக்கையில் அதிகமாக பற்றுள்ளவர்கள். அதனை நற்றிணையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, தலைவி தலைவனின் பிரிவால் பெருந்துயரடைகின்றாள். அதனைக் கண்டு தோழியும் வருந்துகிறாள். அதற்கு அவள் கையாளும் பல உத்திகளுள் பல்லியை வைத்து ஆறுதல் கூறி தேற்றுவதும் ஒன்று என்பர். காப்பியஞ் சேந்தனர் என்னும் புலவர்.
தோழி, தலைவியை நோக்கி நாம் குறிப்பிட்ட இடங்களிலே இனிய சொல்லும் செயலுமே நற்குறிகளாக நிகழ்கின்றன. நெடிய சுவரிடத்தே இருக்கும் பல்லியும் நம்பக்கமாக அமைந்து நம்மைத் தெளிவிக்கின்றது என்பாள்.
இடுஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் (நற்றிணை 246)
மேற்கண்ட பாடலின் மூலம் பல்லி நெடுஞ்சுவரில் தங்கி இருப்பதும், இனிய குறிகளாக அதன் ஒலிகள் தோன்றுகின்றன என்றும் தோழி கூறுவதைக் காணமுடிகின்றது.
விழாவும் குயவன் ஊருக்கு அறிவித்தலும் - தோழிக்கூற்று
விழா ஊரில் நடைபெறுவதை மக்களுக்குக் கூறுபவர்களாக குயவர்கள் இருந்துள்ளார்கள். இத்தகைய குயவரிடம் தோழி பேசியுள்ளார் என்று கூடலூர் பல்கண்ணனார் நற்றிணை 200வது பாடலில் தமிழர்களின் செயற்பாடுகளை பதிவுசெய்துள்ளனர். தலைவனைப் பிரிந்த தலைவி, வருத்தத்தினால் காத்திருக்கிறாள். தலைவனோ பரத்தையிடம் இடம் சென்று உறவை நாடி இன்புற்றான். பின்னர் வெறுப்பு ஏற்பட்டது. தலைவி நம்மை எப்படி சேர்த்துக் கொள்வாள் என்று அச்சப்பட்டு பாணனைத் தூது அனுப்புகிறான். பாணனைக் கண்டதும் தலைவியின் உள்ளம் நெகிழ்ந்தது, இதைக் கண்ட தோழி, விழாவினை அறிவிப்போனாக வந்த குயவனிடம் பேசுவாள் போல பாணனுக்கு மறுப்புக் கூறுகின்றாள்.
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல்குடி
யாறு கிடந்தன்ன அகல்நெடுந்தெருவில்
சாறு என நுவலும் முதுவாய்க் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ. (நற்றிணை. 200)
இருபுறமும் அரும்பிட்டுக் கட்டிய ஒரு குதிரைப் போன்ற ஒள்ளிய கொத்தினைக் கொண்ட நொச்சியது மாலையைச் சூடிக் கொண்டு, ஆறு குறுக்கிட்டு இருந்தாற் போல அகன்ற நெடிய தெருவினிலே வந்துள்ளவனே! இற்றை நாளில் இவ்வூரிடத்தே திருவிழா நடைபெறா நின்றது – எனக் கூறும் அறிவு முதிர்ச்சிகொண்ட குயவனே! நீ செல்லும் இடங்களில் இதனையும் அந்த இடங்களில் உள்ளோர்க்குச் சொல்லிச் செல்க என்பாள் தோழி. மேற்கண்ட சான்றின் மூலம் குயவர் ஊர்விழாவைக் கூறுவதையும், அவர்களிடம் தோழி பேசுவதையும் காணமுடிகின்றது.
கொல்லிப்பாவையின் அழகும் காத்தலும் - தலைவியும்
தலைவன், தலைவியைக் கண்டு காதலுற்றான். அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினான். அதனைக் கேட்ட பாணன், அவள் குறவனின் அன்புக்குரிய இளமகள் அவள். அவளை நீ பெறுவது அரிது என்றான், மேலும், நீ நெருங்க முடியாத அளவுக்கு பெருங்காவலை உடையவள் என்றும் கூறினான். உன் சொல்லைக் கேட்டு நடக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையாத சிற்றிளம் பருவத்தையுடையவள், அத்தகையவளை காமுற்று அடைவதற்கு நினைத்தல் பொருந்தாது என்றான்.
இதற்கு மறுமொழி கூறிய தலைவன், வேர்பலா மரங்களையுடையது கொல்லிமலை. அதனை தெய்வம் காவல் காத்து வருகின்றது. நெடிய கோட்டினின்றும் விழும் வெள்ளிய அருவியினது மேற்குப் பக்கத்தில் பாறையிடத்தில் உள்ளது கொல்லிப்பாவை. காற்று மோதி இடித்தாலும் மிகுதியான மழைத்துளிகள் விழுந்தாலும், இடிகள் சிதைந்து உருமித் தாக்கினாலும், இத்தகைய பல இயற்கையினாலான ஊறுகள் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது. இந்த பெருநிலமே நிலநடுக்கம் ஏற்பட்டாலும் காப்பாற்றும் கொல்லிப்பாவை. ஏனென்றால் தான் கொண்டுள்ள, கண்டாரைக் கவர்கின்ற தன் உருவப் பேரழகினின்றும் என்றும் அழியாதிருக்கின்ற நிலைத்த தன்மைக் கொண்டது அக்கொல்லிப்பாவை. எனவே, பாங்கனே நீ என்ன கூறினாலும், தலைவியின் அழகும், அதனால் என் பாதுகாப்பும் கொல்லிப்பாவையைக் கண்டதுபோல் உள்ளது என்ற தன் உள்ளக் கருத்தைக் கூறுகின்றான். கொல்லிப் பாவை நிலத்தையும் வளத்தையும் காப்பதுமட்டுமின்றி பேரழகாக இருந்ததை தமிழரின் தொன்மத்தை இச்சான்றுகள் மூலம் உணரலாம்.
மாலயுறை குறவன் காதல் மடமகள்
பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள்
சொல்லெதிர் கொள்ளா இளையள் அனையள்
உள்ளல் கூடாதென்போய் - மற்றும்
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு (நற்றிணை – 201)
நற்றிணையில் தொன்மங்களும் மகளிரும்
உடன்போக்கும் கார்த்திகைத் திங்களும்
தமிழ் மக்களிடையே கார்த்திகை மாதங்களில் தீபவழிபாடு செய்வது நற்றிணை 202ம் பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவன் தலைவியுடன் உடன்போயினன், அப்பொழுது தலைவிக்கு துன்பம் தவிர்க்க சில சான்றுகளைக் கூறி அவளுக்கு மகிழ்வையும் ஊட்டுகின்றான். இந்த உரையாடலில் கார்த்திகை மீன் பொருந்தியதும் அறம் செய்வதற்கு அமைந்ததுமான கார்த்திகைத் திங்களில், வரிசையாகச் செல்லுகின்ற நெடுவிளக்குகளின் ஒழுங்கைப் போலப் பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்களாலே அழகு பெற்று விளங்கும் காட்டையும் காண்பாயாக என்றான் தலைவன்.
அறுமீன் கெழிஇய அறம்செய் திங்கட்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடே (நற்றிணை 202)
மேற்கண்ட சான்றின் வழி அறம் செய்வதற்குரிய மாதமாக கார்த்திகையும், திங்களின் முக்கியத்தையும் தமிழர்களின் தொன்மைகளாக உள்ளதைக் காணலாம்.
நற்றிணைக் காட்டும் தொன்மங்களில் பெண்கள்
எட்டுத் தொகை நூல்களுள் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்ற நூல் நற்றிணையும் ஒன்றாகும். இதில் தமிழக வரலாறும், பண்பாடும் தொன்மங்களும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக தொன்மங்களுள் மகளிர் தொடர்பானவற்றை ஆராயும் நோக்கில் இவ்வாய்வு காண முற்படுகின்றது.
உருகெழு தெய்வம் மறைந்திருக்காது
தலைவன் களவொழுக்கத்தினையை நாடி வருதலினை விரும்புகின்றான். முறையாக மணந்து கொள்ள வேண்டும் என்பதில் நாட்டமில்லாமல் இருக்கின்றான். பகற்குறி நாடி வந்த அவனிடம் தோழி சில கருத்துக்களைக் கூறுவதாக உலோச்சனார் நற்றிணை 398 ஆம் பாடலில் கூறுகின்றார்.
அச்சம் பொருந்திய தெய்வமும் மறைந்திருக்காமல் நடமாடிய படியிருக்கும். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேலைத் திசைக்குச் சென்று மறையும். ஆனால் நீயோ, ஒளிந்து ஒளிந்து தலைவியைச் சந்தித்து நலம் பெறுவது பொறுக்காமல் தலைவி அழுது கொண்டிருக்கிறாள். எனவே, நீயே தலைவிக்கு ஏற்பன கூறி ஆற்றுவித்துப் போவாயாக என்ற தலைவனுக்குத் தோழி கூறுவள். இதன் மூலம் தெய்வம் நேரடியாக நடமாடும் என்னும் கருத்துடைய நம் தொன்மையை உணரலாம். இதனையும் தோழி என்னும் பெண் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.
உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே
விரிகதிர் ஞாயிறும் குடக்குவாங் கும்மே
பாணர் இளமுலை நனைய
மாணெழில் மலர்க்கண் தெண்பனிக் கொளவே (நற். 398)
கண்ணெதிரே காணும் கடவுள்
தோழி – தலைவனுக்கு தலைவியைப் பற்றி சிறப்பாகக் கூறுவாள். தலைவி, எமக்கெல்லாம் கண்ணெதிரே காண்கின்றதற்குரிய ஒரு கடவுள் போல்வானும் ஆவாள் என்று தோழி தலைவியைப் பாராட்டி தலைவனுக்குக் கூறுவாள். நீ வந்து அவளை சந்திக்க முயல்கின்றாய். நான் உன் கருத்தை தலைவிக்குக் கூறுவேன் என்பள் தோழி.
குறிப்பாக படர்ந்து செல்லும் மிளகினது வளமான செழித்த கொடியானது, தூங்கிக் கொண்டிருக்கும் புலியினது கோடுகள் அமைந்த மேற்புறத்தைத் தடவிவிடும் என்ற கருத்தைக் கூறுவாள். புலியைத் தொட பலரும் பயப்பட மிளகின் கொடி தொடுவதைப் போல தலைவி தெய்வம் போன்று இருந்தாலும் உன்னாலும் முடியும் என்று நம்பிக்கையூட்டும் இறைத்தொன்மத்தைக் குறித்துக் கூறும் போக்கைக் காணலாம்.
எம்பதற் தெளியள் அல்லள் எமக்கோர்
கட்காண் கடவுள் அல்லலோ – பெரும
ஆய்கோல் மிளகின் அமலையம் கொழுங்கொடி
துஞ்சுபுலி வலிப்புறம் தைவரும் (நற்றிணை. 234)
வெறியாட்டு
தமிழ் குடும்பங்களிலே மகளிர்க்கு நோய் வந்தால் வெறியாட்டு செய்வது வழக்கம். குறிப்பாக தலைவிக்கு தலைவன் மீது காதல், பலபடியாக தலைவன் மீது தலைவி காதல் கொண்டாள். ஆனால் தலைவனோ தலைவியைப் போன்று ஆழமாகக் காதல் கொள்ளவில்லையே என்று தோழி வருந்திக் கூறுகிறாள் என்ற நற்றிணை 268ம் பாடலில் வெறியாடியக் காமக்கண்ணியார் என்னும் புலவர் கூறுகின்றார்.
தோழி முற்றத்தில் புதுமணலைப் பெய்து விளக்கம் செய்து, கழங்கினாலே மெய்ம்மை தேர்ந்து கூறுவோனாகிய வேலனையும் வருவித்து, வெறியாடற்கும் அன்னை ஏற்பாடு செய்தனள். மணங்கமழும் தேன் அடைக்கும் வேண்டியளவு தேன் ஊறிக் கொண்டிருக்கின்ற நாடனான நம் தலைவன். அவன் மீது ஆராக் காதல் கொண்டு நோய் ஏற்பட்ட தலைவி போன்று தலைவன் நோயால் பாதிக்கப்படவில்லையே. அதற்குரிய காரணம்தான் என்ன? இதனை வேலனிடம் கேட்போமா? என்பதாக தோழி கூறுகின்றாள்.
பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்தே
காதல் செய்தலுங் காதலம் அன்மை
யாதனிற் கொல்லோ? தோழி – வினவுகம் (நற்றியை. 268)
மேற்கண்டவற்றின் மூலம் வேலன் வெறியாட்டின் மூலம் புதுமணலைக் கொண்டு செய்யும் பழமை முறையையும், கழங்கை வைத்து உண்மை அறியும் முறையையும் அதுவும் மகளரிர்க்காக மகளிர் செய்யும் தொன்மையையும் உணரலாம்.
துடி, பறை முதலிய வாச்சியங்கள் முழங்கல்
களவு ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தலைவன் தலைவியை மணந்து கொள்ளுமாறு விரைவுபடுத்த வேண்டுமென்று கருதுகின்றாள் தலைவியின் தோழி. இதனை நற்றிணை 322 வது பாடலில் மதுரைப் பாடலாசிரியன் சேந்தன் கொற்றனார் கூறுகிறார். குறிப்பாக தலைவனின் தண்மை கமழுகின்ற பரந்த மார்பினைத் தனக்கே உரிமையுடையதாக நீயும் பெறவில்லை. அதனால் நின் அழகிய நுதலிடத்தே பசலையும் படர்ந்தது. பிறரால் தீர்க்க முடியாத உன் காமநோயை அணங்கு தாக்கு இது என்ற அன்னை அறியும்படி வேலன் கூறுவான். இனிய வாச்சியம் பலவும் ஒலிக்கப் பாடியபடியே பலவாகிய பூக்களைத் தூவியும் முருகனைத் துதிப்பான். இவ்யாட்டினைப் பலியாக ஏற்றுக் கொள்வாயாக என்று கூறி, அதனை அறுத்துப் பலியும் கொடுப்பான். அவ்வாறு செய்யவும் நின் நோயும் தணிவதாயினால் எவ்விடத்தும் இதனிலும் கொடியதான செயலும் பிறிதொன்றும் இல்லை கண்டாய்! அதுதான் உண்மையாமோ? என்றாள்.
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனிற் கொடியது பிறிதொன் றில்லை
தன்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது
நன்னுதற் பசந்த படர்மலி அருநோய்
அணங்கென உணரக் கூறி வேலன்
இன்னியங் கறங்கப் பாடிப்
பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே (நற்றிணை 322)
மேற்கண்டவற்றின் மூலம், தலைவிக்கு வெறியாட்டு செய்வதனாற் தீரும் என்பது கொடுமை என்று கூறுவதையும், இனிய ஓசைகளை எழுப்புவதையும், பாடல் பாடி பல பூக்களைக் கொண்டு பலியிடலும் அறிய முடிகின்றது.
துயருற்ற நெஞ்சத்துடன் தெய்வத்தைப் பேணி வருந்தாதே
தலைவி களவுக் காலத்தே தலைவனுடன் பழகினாள். பின் தனிமையால் வருந்திப் பசலை நோயுற்றாள். அதனைக் கண்ட தாய் அவள் நிலையறியாது வெறியாட்டு நிகழ்த்த ஏற்பாடு செய்கிறாள். இதனை தடுக்க முற்படுகிறாள் தோழி. அதற்கு அவள் கூறும் கருத்துகளை நற்றிணை 351 – ல் மதுரைக் கண்ணத்தனார் எனும் புலவர் அழகாகக் கூறுகின்றார்.
அன்னையே நான் சொல்வதைக் கேள். இவள் தன்னுடைய பெதும்பைப் பருவமாகிய இளமையிற் கழிந்துவிட்டனள் என்று நினைத்து, நம் வீட்டில் வைத்து காவலுக்கு உட்படுத்தினாய். இருப்பினும் தலைவி தன் பழைய சிறப்பழகை அயைவில்லை. ஏனென்றால் பசலை நோய்தான் காரணம் என்பதை தாய்