Sunday, 31 May 2015

மணிமேகலையில் தாய்மை

                                                       மணிமேகலையில் தாய்மை

முன்னுரை

      தமிழ் இலக்கியங்களில் இரட்டைக்காப்பியங்கள் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மனிதர்களுக்காக – வாழ்க்கையில் ஏற்படும் நன்மை, தீமைகளை புரிந்து கொள்ளவும் - விதி வழிதான் வாழ்க்கை நடைபெறுகின்றது என்பதையும் எடுத்துக் கூறுகின்றது. மேலும் வாழ்க்கையில் எல்லாம் நம்மால்தான் முடியும் - முடிகின்றது என்ற ஆணவமில்லாமல் நல்லதை செய்ய இறைவன் படைத்துள்ளான் என்ற உணர்வை புரிந்து கொள்ள மணிமேகலை பயன்படுகிறது. இதில் தாய்மை பற்றிய உணர்வுகளை இக்கட்டுரையில் காண முற்படுவோம்.
காவிரித்தாயே
      மணிமேகலையில் தாய்மை உணர்வு பல இடங்களில் கூறப்படுகின்றது. அகத்தியன், காவிரிப்பாவையின் பின்னாகவே வந்து அங்கு நின்றனன். மேலும் சினத்தை அறவே அடக்கியவன். பெரும் தவ வலிமையுடையவன். சம்பாதியின் சொற்;களை அவனும் கேட்டனன். காவிரியை நோக்கி, அன்னையே, இதனைக் கேட்பாயாக. இந்த அரிய தவமுதிர்ச்சியினை உடையவள் நின்னால் வணங்குதற்குரிய சிறந்த தகைமையினை உடையவள். ஆதலின், இவளை நீயும் வணங்குக என்றனன்.

            பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டு, 'ஈங்கு
           அன்னை! கேள் இவ் வருந்தவ முதியோன்
           நின்னால் வணங்குந் தன்மையுள் வணங்கு (மணி. பதிகம். 19 – 21)

தாயின் கடமை

      புகார் நகரத்திலே தீவகசாந்தி தொடங்கிற்று. இதன் தொடர்பான நிகழ்ச்சிகளுள், நாடக மடந்தையரின் ஆடலும் பாடலும் முதன்மையானவை. விழாவிற் கலந்து கொள்ளும் பொருட்டு மாதவியோ மணிமேகலையோ வரவில்லை. ஊராரிடையே அவர்களின் வாராமைச் செயல் பற்றிய பழிச்சொற்கள் எழுந்தன. ஊர் பழிக்கவே, சித்திராபதி மாதவியின் தோழியான வயந்தமாலையை அழைத்து, ஊரலரைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு ஏவுகின்றாள்.
            நாவ லோங்கிய மாபெருந் தீவினுள்
           காவல் தெய்வம் தேவர்கோற்கு எடுத்த
           தீவக சாந்தி செய்தரு நன்னாள்
           மணிமேகலையொடு மாதவி வாராத்
           தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர
           பயங்கெழு மாநகர் அலரெடுத்துரை (மணிமேகலை. ஊரலர். 1 -10)



கண்ணகியை மணிமேகலையின் தாய் எனல்
      தம்முடைய மகள் மணிமேகலையை கண்ணகியின் மகள் என்று பெருமையுடன் கூறுகின்றாள். அதற்கு அவள் கூறும் காரணங்கள் தமிழ் வாழ்க்கை முறையும், பண்பாடும் - பெண்களின் மன உறுதியும் - போராடி வெற்றி பெறும் போக்கையும் சான்றுகளுடன் கூறுவதைக் காணலாம்.
கற்புக்குரியர் செயல்கள்
      தம்முடைய காதற்குரிய கணவர் இறந்து போனால் கொழுந்துவிட்டு எரிகின்ற நெலுப்பினையுடைய ஊதுகின்ற துருத்தி முனையாலே தோன்றுகின்ற அனலைப் போலப் பெருமூச்சு விட்டவராக, அத்துன்பம் தம் உள்ளத்தே அடங்காது மேலெழுதலால், தம் இனிய உயிரையும் அந்நிலையிலே கொடுத்து நீரில் நீராடுவதைப் போல ஈமத்தீயிலே புகுந்து உயிர்விடுவர். அப்படியும் இல்லையெனில் வாழ்க்கையில் தோற்று தம் உடம்பினைக் கைம்மை நோன்பு பூண்டு வருந்தி நலிவர். குடல்சூழ்ந்த இவ்வுலகிலே இவைதாம் கணவரை இழந்த கற்புடை மாதர்க்கு உரியனவாகும் என்பர் மாதவி.
            காதலர்; இறப்பின் கனையெறி பொத்தி
           ஊதுலைக் குறுகின் உயிர்த்தகத் தடங்காது
           இன்னுயிர் ஈவர் ஈயாராயின்
           நன்னீர்ப் பொய்கையின், நள் எரி புகுவர்
           நளியெறி புகாஅ ராயின் அன்பரொடு
           உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவர்
           பத்தினிப் பெண்டிர் (மணிமேகலை. ஊரலர். உரை காதை 41 – 48)

கண்ணகி மாபெரும் பத்தினி – பொறுப்புள்ள வழிகாட்டும் தாய்

      எம்முடைய கண்ணகியோ பத்தினிப் பெண்டிர் தன்மையை சேர்ந்தவள் அல்லள். கணவனுக்கு உற்ற துயரை பொறக்காது. கூ;தலை அவிழ்த்துவிட்டுருக்கவும், கண்ணீர் வெள்ளத்திலே குளித்துக் கொண்டிருந்த தன் இளைய முலையினை உறுதியுடனே திருகி எறிந்தனள். ஆதன் மூலம் கொடிய நெருப்பினை மூளச் செய்தாள். மதுரையை எரியும் நெருப்பிற்கு இரையாக்கினள், அதனால் கண்ணகி மாபெரும் பத்தினி. அத்தகையவளின் மகள் மணிமேகலை. அவளை அரிய தவநெறிக்கு அழைத்துச் செல்லலே நன்று. மாறாக பரத்தமைத் தொழிலிலெ விடமாட்டேன் என்று வழிகாட்டும் பொறுப்புள்ளள தாயாக மாதவி விளங்குவதைக் காணலாம்.

            கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅர்
           மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
           கண்ணீராடிய கதிரிலி வனமுலை
           திண்ணிதிற் திருகி தீயழற் பொத்திக்
           காவலன் பேரூர் கனையெரி யூட்டிய
           மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
           அருந்தவப் படுத்தல் அல்ல தியாவதும்
           திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் (மணிமே. ஊரலர் உரை. குhதை 50 -57)


தாயின் பேச்சால் கலங்கிய மணிமேகலை
      மாதவி, வயந்தமாலைக்குக் கூறிய நோக்கத்தையும், துன்பத்தையும் மணிமேகலை கேட்டனள். நல்ல மகனுக்கு அழகு தாயின் பேச்சைக் கேட்டு நடத்தல் வேண்டும். தாய் கூறும் வாழ்க்கை அனுகக் கருத்துக்களை இக்காலத்தில் மகளிர்கள் தவிர்க்கின்றனர். வெறுப்படைகின்றனர். ஆனால் மணிமேகலையோ தன் தந்தையான கோவலனும் தாயான கண்ணகியும் மிகவும் துன்பப்பட்டு கொடிய துயரமடைந்ததை அறிந்து – கேட்டு நெஞ்சம் கலங்கினள். கண்ணீரும் உதிர்த்தனள். அக்கண்ணீர் துளிகள் மலர்மீது விழுந்தன.
            தந்தையும் தாயும் தாம் நனியழந்த
           வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப
           புலம்புநீர் உருட்டிப் பொதுயவிழ் நறுமலர்
           இலங்கிழ் மாலையை இட்டு, நீராட்ட (மணிமே. மலர்வனம் 5 – 10)

தாய் மகனுக்குக் கட்டளையும் பரிவும்

      மாதவி, தம் மகள் மணிமேகலையின் கண்ணீPரைக் கண்டாள். மணிமேகலையின் முகத்தினையும் நோக்கினாள். செந்தாமரை மலரானது குளிர்ந்த நிலவினைச் சேர்ந்தது போலத் தன் அழகிய செங்கையினாலே தன் மகளின் கண்ணீரைத் துடைத்து அகற்றினாள். தூய்மையான இம்மாலை தூய்மையை இழந்துவிட்டது. அதனால் புதிய மலர் மாலைகளை நீயே கொண்டு வருவாய் என்று கட்டளையிட்டாள். குhமர் செங்கையிற் கண்ணீர் மாற்றி மூலம் பரிவும், நிகர்மலர் நீயே கொணர்வாய் என்பதன் வழி கட்டளையையும் உணரலாம்.
தாயோ கொடியள்
      மணிமேகலை மலர் கொய்ய சென்ற பொழுது, அவளைக் கண்ட கண்டோர் மனிமேகலையைச் சூழந்து கொண்டனர். ஆழகமைந்த Nதூற்றத்தினையுடைய இவளை அரியதான தவநெறிப்படுத்திய தாயோ மிகவும் கொடியவள். ஆவள் தாயென்னும் தன்மைக்கே தகுதியற்றவளுமாவாள் எனக் கூறி மனம் நொந்து, அனைவரும் உள்ளம் வருந்தினள். தூய் தன் மகளை நல்ல முறையில் வளர்க்காவிட்டால் உலகம் பழிக்கும் என்பதை உணரலாம்.
            மணிமேகலை தனை வந்து புறஞ்சுற்றி
           அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய
           தாயோ கொடியள் தகவிலள் (மணிமே. மலர் வனம் 148 – 150)

தாயின் புலம்பலும் மகன் இறத்தலும்

      சார்ங்கலன் என்னும் சிறுவன் சக்கரவளக் கோட்டத்தின் அருகில் உள்ள சுடுகாட்டினைப் பார்த்தான். சுடுகாட்டில் பிணங்களை பேய்கள் தின்பதும், இரக்கமின்றி பிணங்களின் கண்களைத் தோண்டி உண்டன். இதைக் கண்ட சிறுவன் பயந்துவிட்டான். தன் தாயை அழைத்துக் கொண்டே என்தாயே சுடுகாட்டிலுள்ள முதுபேய்க்கு என் உயிரைப் பலி கொடுத்து விட்டேன் என்று தாயின் முன்னே விழுந்து உயிரை விட்டுவி;டடான்.
      தன் மகனான சார்ங்கலன் இறப்பை தாங்காது கோதமை என்னும் தாய் அழுதாள். ஏன் கணவனாகிய கண்ணிழந்த பார்ப்பானோடும் வருந்தும் தீவினையாட்டி என்று அழுதாள். சம்பாதியே இவ்வூரின் நீர்த்துறை, மன்றங்கள், தெய்வங்கள், கோயில்களைக் காப்பவனே என்மீது கருணையில்லையா என்று அழுதாள்.

            வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேன்என
           பார்ப்பான் தன்னொடு கண்ணிழந்து இருந்தவித்
           தீத்தொழிலாட்டியென் சிறுவன் தன்னை
           யாருமில் தமியேன் என்பது நோக்காது
           ஆருயிர் உண்டது அணங்கே! பேயோ!
           துறையும் மன்றமும் தொல்வலி மரனும்
           உறையுளும் கோட்டமும் காப்பாய்
           தகவிலை கொல்லோ சம்பா பதி (மணிமே. சக்கர. 130 – 138)

உயிரையும் விடுவேன் எனும் தாய்

      சம்பாதியும் அத்தாய்க்கு அறிவுரை கூறி ஊழ்வினைக் காரணமாக உயிர் நீத்தான் என்றார். பின்னர் அத்தாய் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தன் உயிரையும் விடுவேன் என்றாள். மேலும் பல எடுத்துக் காட்டுகளுடன் அறிவுரை கூற ஏற்றுக் கொண்டாள்.

            மாபெருந் தெய்வம் நீயருளா விடின்
           யானோ காவேன் என்னுயிர் ஈங்கு (மணி. சக்கர. 170 – 171)

தாய்ப்பாலும் அமுதசுரபியும்

      தாய் பெற்றெடுத்த குழந்தையின் பசியால் வாடிய முகத்தைக் கண்டதும், அதற்கு இரங்கி இனிதான பாலைச் சுரப்பவள் தாய். அத்தாயின் முலை போன்றே சுரந்து பெருகி உணவை உதவுவது இத்தெய்வீகப் பாத்திரம் இதன் அகன்ற உள்ளிடத்தே பெய்த ஆருயிரினைப் பேணும் உணவான மருந்து, பசித்தவரின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையேன் மான் என்றனள் மணிமேகலை. தாய் போன்று பசியுற்றோர்க்கு உணவளிப்பேன் என்னும் தாய்மை உணர்வை மணிமேகலையிலும் காணலாம்.

            தீம்பால் சுரப்பின் தன்முலை போன்றறே
           நெஞ்சு வழிப்படூஉம் விஞ்ஞைப் பாத்திரத்து
           முகங் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் (மணி. பாத்தி. 115 – 118)